தஞ்சாவூரில் விரைவில் அற்புதம்.. லுலு போட்ட பிளானை விடுங்க..இந்த சரவெடிய பாருங்க.. துள்ளியெழும் தஞ்சை
தஞ்சாவூர்: தமிழ்நாட்டிலேயே தஞ்சாவூரில், மாடர்ன் ரைஸ் மில்அமைக்க போவதாக லுலு நிறுவனமும், டைடல் பார்க் வரப்போவதாக தமிழக அரசும் அறிவித்திருந்த நிலையில், திடீரென இன்னொரு மகிழ்ச்சி தகவல் தஞ்சைவாசிகளுக்கு கிடைத்துள்ளது.
கோவை அவிநாசி சாலையில் உள்ள லட்சுமி மில்ஸ் வளாகத்தில், லுலு ஹைப்பர் மார்க்கெட் 1.20 லட்சம் சதுர அடியில் மிக பிரம்மாண்டமாக கட்டி முடித்து, செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

ஏற்கனவே, நிறைய டிபார்ட்மெண்ட் ஸ்டோர்கள், மால்கள் என பொதுமக்கள் ஷாப்பிங் செய்வதற்கு பல இடங்கள் கோவையில் இருந்தாலும், அனைத்து பொருட்களையும் ஒரே இடத்தில் அடக்குவதாக இந்த ஹைப்பர் மார்க்கெட் அமைந்துள்ளது.
நெற்களஞ்சியம்: அப்போது செய்தியாளர்களிடம் பேசிய லூ.லூ நிறுவனத்தின் ஓனர் யூசூப் அலி, தஞ்சாவூரிலும் பெரிய பிளானுடன் கால் பதிக்க போகிறோம். விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் நெற்களஞ்சியம் என அழைக்கப்படும் தஞ்சாவூரில், மிகப்பெரிய மாடர்ன் ரைஸ் மில்அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளோம்.. இதனால், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் பெரும்" என்று கூறியிருந்தார்.
இந்த விஷயத்தை கேள்விப்பட்டதுமே, தஞ்சை மக்களும், விவசாயிகளும், தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா மற்றும் லூலா குரூப்ஸ்-ன் நிர்வாக இயக்குனர் யூசுப் அலி ஆகியோருக்கு நன்றிகளை தெரிவித்திருந்தனர்.
டைடல் பார்க்: இதனிடையே, தமிழக அரசு தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார் பட்டி கிராமத்தில் டைடல் பார்க் அமைக்க போகிறது.. 30.50 கோடி திட்ட மதிப்பீட்டில் 55 ஆயிரம் சதுர அடியில் தரைத்தளம், 3 மாடிகள் கொண்ட கட்டிடம் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வருகிறது...
இதன் 90 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் விரைவில் திறக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
எனவே, லுலுவுக்கு முன்பே, டைடல் பார்க் வந்துவிடும் என்று நம்பப்பட்டது. அதுமட்டுமல்ல, இப்போது, 90 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் விரைவில் திறக்கப்பட உள்ளதாகவும், இந்த டைடல் பார்க் திறக்கப்பட்டால், தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த தகுதிவாய்ந்த இளைஞர்களுக்கு வேலை கிடைக்க தமிழக அரசு சார்பில் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
லுலு நிறுவனம்: இப்படி லுலு ஒருபக்கம், டைடல் பார்க் மறுபக்கம் என இரு தரப்பு நிறுவனங்களாலும், தஞ்சை மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று பெரிய அளவில் நம்பப்பட்டு வருகிறது. அதனால், இவைகளில் எது முதலில் திறக்கப்படும் என்ற ஆர்வமும் தஞ்சை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

ஆனால், இவை இரண்டுமே அல்லாமல், இன்னொரு சர்ப்ரைஸ் தஞ்சாவூருக்கு வந்துள்ளது.. "லாங்வால் மால்" என்று தஞ்சையில் புதிய வணிக வளாகம் வரப்போகிறதாம்.. இதுவரை தஞ்சையில் தனியாக ஷாக்பங் மால் எதுவும் இல்லை.. அந்தவகையில், லாங்வால் மால் (Langval group) கிட்டத்தட்ட 2 லட்சம் சதுர அடி பரப்பளவில், டேனியல் தாமஸ் நகரில் இந்த பிரம்மாண்டமான கட்டிடத்தை கட்டி வருகிறது.
சர்ப்ரைஸ்: இந்த மாலில், 300 க்கும் மேற்பட்டோர் உட்கார்ந்து சாப்பிடும் வகையில், மினி ஓட்டல், சினிமா தியேட்டர் அதாவது, 3 திரைகளை கொண்ட பிவிஆர் சினிமாஸ் மற்றும் பார்க்கிங் வசதிகள் என சகல வசதிகளும் இடம் பெற உள்ளதாம்.. கடந்த 2022-ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த கட்டிட பணிகள், விரைவில் முடிவடைந்து, மக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்படும் என்கிறார்கள். ஆக மொத்தம், முதல் மால் தங்களுக்கு வருவதால், தஞ்சை மக்கள் படுகுஷியில் உள்ளார்கள்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications