தஞ்சையில் புவனேஸ்வரிக்கு இப்பதான் கல்யாணம் ஆச்சு.. அதுக்குள்ளேயா? ஒரத்தநாடு குடிசைக்குள் என்னாச்சு?
தஞ்சாவூர்: தஞ்சாவூர் புவனேஸ்வரிக்கு என்ன நடந்தது? ஆசை ஆசையாக ஒரு இளைஞரை காதலித்து, அவரையே திருமணமும் செய்து, புதுவாழ்க்கையை துவங்க பலவித கனவுகளுடன் காத்திருந்தார். திடீரென அந்த ஆசையில் மண் விழுந்துவிட்டது. புவனேஸ்வரியும் மண்ணோடு மண்ணாக போய்விட்டார்.. இதுகுறித்த விசாரணையை ஒரத்தநாடு போலீசார் துவங்கியிருக்கிறார்கள். எனினும், இந்த அதிர்ச்சி இன்னும் தஞ்சாவூரில் விலகவில்லை.
தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு என்பதே கேள்விக்குறியாகிவிடுகிறது.. பெண்கள் மீதான பாலியல் பலாத்கார சம்பவங்களும் பெருகி வருகின்றன.. அதேபோல, நாளுக்கு நாள் குடும்ப வன்முறைகளும் அதிகரித்து வருகின்றன..

குடும்ப வன்முறைகள்
வரட்சணை கொடுமை, குழந்தை திருமணம், கள்ளக்காதல் கொடூரங்கள், பச்சிளம் குழந்தைகளை பெற்ற தாயே கொலை செய்வது போன்ற கொடூரங்கள் தமிழகத்தில் பெருகி வருகின்றன. இதற்கு நடுவில், புரிதல் இல்லாத கணவன் மனைவி இடையே ஏற்படும் விரிசல்கள், சண்டைகள், நாளடைவில் விவாகரத்து வரை கொண்டுவந்துவிடுகின்றன..
ஈகோ பிரச்சனையே, இதுபோன்ற மரணங்களுக்கு பிரதான காரணமாகிவிடுவது கவலைக்குரிய ஒன்றாகும். சில சமயங்களில் இளம்பெண்கள் பிரச்சனைகளை ஜீரணிக்க முடியாமல், அவைகளை கையாள தெரியாமல், வேறு யாரிடமும் விவாதிக்கும் துணிச்சலும் இல்லாமல், தற்கொலையை நாடுகின்றனர்.
தஞ்சை இளம்பெண்
அந்தவகையில், தஞ்சாவூரில் ஒரு கொடுமை நடந்துள்ளது.. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பருத்திக்கோட்டையை சேர்ந்த தம்பதி தமிழரசன் - ரேவதி.. தஞ்சை மாவட்டம் வழுத்தூரிலுள்ள செங்கல் சூளையில் தமிழரசனும் ரேவதியும் வேலை பார்த்து வருகிறார்கள்.. இவர்களுடைய மகள் புவனேஸ்வரிக்கு 20 வயதாகிறது..
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியை சேர்ந்த சபரி என்ற 23 வயது இளைஞரும், புவனேஸ்வரியும் தீவிரமாக காதலித்து வந்தனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்கு பிறகு, அதாவது ஒன்றரை மாதங்களுக்கு முன்பு புதுமண தம்பதியும், தமிழரசன், ரேவதி வேலை பார்க்கும் அதே செங்கல் சூளையிலேயே, ஒரு குடிசை வீட்டில் தங்கியிருந்தனர்.
புவனேஸ்வரி அலறல்
இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு, இந்த குடிசை வீட்டுக்குள்ளிருந்து திடீரென அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது புவனேஸ்வரி ரத்த வெள்ளத்தில் மிதந்து கிடந்தார்.. கழுத்து அறுபட்ட நிலையில் விழுந்து கிடக்க, சபரியோ, அவசர அவசரமாக அங்கிருந்து தப்பி ஓடியிருக்கிறார். இதனால், அங்கிருந்தவர்கள், உடனடியாக புவனேஸ்வரியை மீட்டு தஞ்சை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், புவனேஸ்வரியை காப்பாற்ற முடியவில்லை..
இதையடுத்து அய்யம்பேட்டை போலீஸார் மருத்துவமனைக்கே விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.. இளம்பெண் கொலைக்கான காரணம் தெரியவில்லை.. சபரியும் தப்பியோடிவிட்டதால், அவரை பிடிப்பதற்காக 2 தனிப்படை அமைக்கப்பட்டு அவரை தேடி கொண்டிருக்கிறார்கள்..
அத்துடன், குடிசை வீட்டில் கைரேகை நிபுணர் சிலம்பரசன், தடய அறிவியல் நிபுணர் ராமச்சந்திரன் விரைந்து சென்று, தடயங்களையும் சேகரித்துள்ளனர்.. புதுப்பெண் இவ்வளவு கொடூரமாக கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒரத்தநாடு பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications