தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் சஸ்பெண்ட்.. ஆளுநர் ஆர்என் ரவி அதிரடி உத்தரவு
தஞ்சாவூர்: தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் வி திருவள்ளுவன் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தமிழக ஆளுநர் ஆர்என் ரவி பிறப்பித்துள்ளார்.
தஞ்சாவூரில் தமிழ் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக வி திருவள்ளுவன் செயல்பட்டு வருகிறார். இவர் மீது 2021ம் ஆண்டு முதல் இந்த பொறுப்பை வகித்து வருகிறார்.

துணை வேந்தரான வி திருவள்ளுவன் விரைவில் ஓய்வு பெற உள்ளார். அவர் டிசம்பர் மாதம் 12ம் தேதியுடன் ஓய்வு பெற உள்ளார். இதனால் இறுதிக்கட்ட பணிகளில் அவர் மும்முரமாக ஈடுபட்டு வரும் நிலையில் தான் அவர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
அதாவது தஞ்சாவூர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள், துணை பேராசிரியர,உதவி பேராசிரியர்கள் என 40 பணியிடங்களை நிரப்ப லஞ்சம் வாங்கியது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக ஆளுநர் ஆர்என் ரவி விளக்கம் கேட்டு இருந்தார்.
இந்த பல்கலைக்கழகத்தின் வேந்தராக ஆளுநர் ஆர்என் ரவி செயல்பட்டு வருகிறார். இதனால் பணி நியமனம் செய்யப்பட்ட தகுதி இல்லாத 40 பேர் மீது ஏன் நடவடிக்கை எடுக்க வில்லை என துணை வேந்தர் வி திருவள்ளுவனிடம் ஆளுநர் ஆர்என் ரவி சார்பில் 2 முறை விளக்கம் கேட்கப்பட்டது. ஆனால் விளக்கம் என்பது அளிக்கவில்லை.
இதனால் இன்று தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தவர் வி வள்ளுவனை, ஆளுநர் ஆர்என் ரவி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். இந்த சஸ்பெண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்போது வி திருவள்ளுவன் திண்டுக்கல்லில் உள்ள காந்தி கிராமம் கிராமிய பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றிருந்தார்.
இந்த வேளையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட தகவல் அவருக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு வீட்டுக்கு புறப்பட்டு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications