தஞ்சாவூர் தங்க நகைக்கடையில் குடும்ப பெண் செய்யுற காரியமா இது.. ஆடிப்போன உரிமையாளர்

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் தனியார் நகை கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. சம்பவத்தன்று நகைக்கடையில் பெண் ஊழியர்கள் இருந்துள்ளனர். அப்போது 50 வயது மதிப்புதக்க பெண் ஒருவர் நகைக் கடைக்கு வந்து 2 கிராம் மதிப்புள்ள தங்க காசு நகை வேண்டுமென்று கேட்டுள்ளார். அப்போது அங்கே வேலை பார்க்கும் பெண் ஊழியர் இரண்டு கிராம் தங்க காசுகளை பிலேட்டில் கொட்டி வைத்து காட்டியுள்ளனர். அப்போது கண் இமைக்கும் நேரத்தில் அந்த பெண் செய்த வேலையால் ஊழியர்கள் ஆடிப்போனார்கள்.

நகைக்கடைகளில் சிலர் நகைகளை திருடுவது நடக்கிறது. அதிலும் சிறிய நகைக்கடைகளை குறிவைத்து திருடுவது ஆங்காகே நடக்கிறது. தங்க நகைகளை பார்த்துமே குடும்ப பெண்களே நகைகளை திருடுவது நடக்கிறது. அப்படி நகைகளை திருடிய போது கையும் களவுமாக சிக்கி கைதாகும் சம்பவங்களும் நடக்கிறது. அப்படித்தான் தஞ்சை மாவட்டம் பாபநாசம் பகுதியில் பெண் ஒருவர்நகை திருடியுள்ளார். ஆனால் இவர் இன்னும் கைதாகவில்லை.. போலீசார் தேடிவருகிறார்கள்.

thanjavur Woman who stole 2 grams of gold coins after leaving fake covering money in jewellery shop

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் தனியார் நகை கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. சம்பவத்தன்று நகைக்கடையில் பெண் ஊழியர்கள் இருந்துள்ளனர். அப்போது 50 வயது மதிப்புதக்க பெண் ஒருவர் நகைக் கடைக்கு வந்து 2 கிராம் மதிப்புள்ள தங்க காசு நகை வேண்டுமென்று கேட்டுள்ளார். அப்போது அங்கே வேலை பார்க்கும் பெண் ஊழியர் இரண்டு கிராம் தங்க காசுகளை பிலேட்டில் கொட்டி வைத்து காட்டியுள்ளனர்.

அப்போது நகை வாங்க வந்த அந்த பெண் தன் கையில் மறைத்து வைத்திருந்த போலி கவரிங் தங்க காசை அந்த பிலேட்டில் வைத்துவிட்டு, ஒரிஜினல் 2 கிராம் தங்க காசு நகையினை எடுத்து இடுப்பில் மறைத்து வைத்து விட்டார். பின்பு விலை விசாரிப்பது போல் விசாரித்து விலை அதிகமாக உள்ளதாக கூறிவிட்டு அங்கிருந்து 2 கிராம் தங்க காசு நகையினை திருடிக்கொண்டு சென்று விட்டார்.

பின்னர் ஊழியர்கள் தங்க காசுகளை சோதனை செய்யும் பொழுது அதில் ஒரு காசு கவரிங் காசாக இருந்ததால் அதிர்ச்சி அடைந்தனர். பின்பு கடையில் உள்ள சிசிடிவி கேமராவின் மூலம் சோதனை செய்தபோது தங்க காசு வாங்க வந்த அந்த பெண் 2 கிராம் தங்க காசு நகையை திருடி சென்று விட்டது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து நகைக்கடை உரிமையாளர் அறிவழகன் பாபநாசம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து தஞ்சை மாவட்டம் பாபநாசம் காவல்துறையினர் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு நகையை திருடிச் சென்ற பெண்ணை தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+