Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கள்ளக்காதல் விவகாரத்தில் 7 வயது சிறுமி அடித்துக்கொலை.. கால்வாயில் வீசப்பட்ட உடல் மீட்பு!

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் அடித்துக் கொன்று கால்வாயில் வீசப்பட்ட 7 வயது சிறுமியின் உடல் மீட்கப்பட்டது. தஞ்சாவூர் கோரிகுளம் பகுதியை சேர்ந்தவர் ரங்கேஸ்வரன். இவரது விஜயலட்சுமி.

இவர்களுக்கு வித்யா(7), விக்னேஷ் (4) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு ரங்கேஸ்வரன் இறந்துள்ளார்.

இதன்பிறகு விஜயலட்சுமி குடும்பம் நடத்த போதிய வருமானம் இன்றி தவித்துள்ளார். இதனை தொடர்ந்து விஜயலெட்சுமிக்கு, அண்ணன் முறைகொண்ட அவரது உறவினர் வெற்றிவேல் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

கள்ளக்காதல்

கள்ளக்காதல்

நாளடைவில் இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. இதனை அறிந்த உறவினர்கள் விஜயலட்சுமியை கண்டித்துள்ளனர். கள்ளக்காதலன் வெற்றிவேலுக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவரது மனைவி வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். உறவினர்கள் பலமாக கண்டித்தும் இருவரும் கள்ளக்காதலை விடுவதாக இல்லை. இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்துள்ளனர்.

படுகொலை

படுகொலை

தங்களின் கள்ளக்காதலுக்கு சிறுமி வித்யா இடையூறாக இருப்பதாக இருவரும் நினைத்துள்ளனர். இந்த நிலையில் ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த வெற்றிவேல், சிறுமி வித்யாவை கடுமையாக தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சிறுமி உயிரிழந்துள்ளார். இதனையடுத்து உயிரிழந்த சிறுமியின் உடலை என்ன செய்வதென்று தெரியாமல் இருவரும் திகைத்தனர்.

கல்லணை கால்வாய்

கல்லணை கால்வாய்

பின்னர் சிறுமியின் உடலை கல்லணை கால்வாயில் வீசியுள்ளனர். மேலும் உயிரிழந்த சிறுமியின் புகைப்படத்தை வெளிநாட்டில் உள்ள தனது மனைவிக்கு அனுப்பியுள்ளார் வெற்றிவேல். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி தஞ்சையில் உள்ள உறவினர்களிடம் இது குறித்து தெரிவித்துள்ளார். உடனடியாக உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

உடலை மீட்டனர்

உடலை மீட்டனர்

இதனை தொடர்ந்து போலீசார் விஜயலட்சுமி, வெற்றிவேல் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்த நிலையில் தஞ்சை கல்லணை கால்வாயில் வீசப்பட்ட சிறுமியின் உடல் 20 கண் பாலம் பகுதியில் இன்று கரை ஒதுங்கியது. இதன்பிறகு தீயணைப்பு படையினர் சிறுமியின் உடலை மீட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. கள்ளக்காதலுக்காக சிறுமியையே அடித்து கொலை செய்த சம்பவம் கோரிகுளம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+