கூட்டணிக்கு பலம் சேர்ப்போம்! சீட் எண்ணிக்கை எங்களுக்கு முக்கியமில்லை! அசராத ஜி.கே.வாசன்!
தஞ்சை: கூட்டணிக்கு பலம் சேர்க்கும் வகையில் தமிழ் மாநில காங்கிரஸ் செயல்படும் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
தங்களை பொறுத்தவரை எண்ணிக்கை முக்கியமில்லை என்றும் வெற்றிவாய்ப்பு இடங்களில் போட்டியிடுவதே முக்கியம் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை கூறினார்.

நகர்ப்புற உள்ளாட்சி
தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் அரசியல் கட்சித் தலைவர்கள் பரபரப்பாக தேர்தல் பணிகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். அந்த வகையில் இதுவரை ஊடக வெளிச்சத்தில் இருந்து ஒதுங்கி இருந்த மாநிலங்களவை உறுப்பினரும், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவருமான ஜி.கே.வாசன், தற்போது மீண்டும் நிர்வாகிகள் சந்திப்பு, ஊடகங்களுக்கு பேட்டி, கூட்டணிப் பேச்சுவார்த்தை என பிஸியாகி இருக்கிறார்.

கூட்டணிக்கு பலம்
இதனிடையே தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், இன்னும் ஓரிரு நாட்களில் மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்து பேசி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு வெற்றிவாய்ப்புள்ள இடங்களில் போட்டியிடுவது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் அதிமுக கூட்டணிக்கு பலம் சேர்க்கும் வகையில் தங்கள் கட்சியின் செயல்பாடு இருக்கும் எனவும் தெரிவித்தார்.

தமிழ் மாநில காங்கிரஸ்
மேலும், வெற்றி வாய்ப்பில்லாத இடங்களில் அதிக எண்ணிக்கையில் போட்டியிடுவதை விட உறுதியாக வெற்றி வாய்ப்பு இருக்கும் இடங்களில் போட்டியிட வேண்டும் என்பதே தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் விருப்பம் எனத் தெரிவித்திருக்கிறார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் 6 தொகுதிகளை கேட்டுப்பெற்று அனைத்து தொகுதிகளிலும் ஜி.கே.வாசன் கட்சி தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.

அதிமுக கூட்டணி
அதிமுக பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் அங்கம் வகிப்பது குறிப்பிடத்தக்கது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 21 மாநகராட்சிகளிலும் அதிக எண்ணிக்கையில் வாசன் இடப்பங்கீடு கேட்டாலும் கூட, தலா 2 வார்டுகள் மட்டுமே தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு அதிமுக ஒதுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications