தஞ்சை பெரிய கோவிலில் யாருமே யோசிக்க விஷயம்.. சட்டென நெகிழ வைத்த போக்குவரத்து காவலர்
தஞ்சாவூர்; தஞ்சை பெரியக்கோவில் முன்பு இரண்டு ஆட்டோக்கள் மோதிக் கொண்ட விபத்தில் சாலையில் சிதறி கிடந்த கண்ணாடி துண்டுகளை பணியில் இருந்த போக்குவரத்து காவலர் ராஜா கண்ணன் சமூக அக்கறையுடன் துடைப்பத்தால் கூட்டி சுத்தப்படுத்தினார் இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
வரலாற்று சிறப்புமிக்க தஞ்சை பெரியக் கோவில் முன்பு ராஜா கண்ணன் என்ற போக்குவரத்து காவலர் போக்குவரத்து சீர் செய்யும் பணியில் ஈடுப்பட்டு இருந்தார். அப்போது பெரியக்கோவில் சாலையில் ஒன்றன் பின் ஒன்றாக வந்த இரண்டு ஆட்டோக்கள் எதிர்பாரத விதமாக மோதிக் கொண்டன. இதில் இரண்டாவது ஆட்டோவின் முன் பக்க கண்ணாடி உடைந்து சுக்கு நூறாகசாலையில் சிதறி கிடந்தது.

பெரிய கோயிலுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் செருப்பு அணியாமல் செல்லும் போது அவர்களது கால்களில் சிதறி கிடந்த கண்ணாடி துண்டுகள் குத்தாமல் இருக்க சிதறி கடந்த கண்ணாடி துண்டுகளை பணியில் இருந்த போக்குவரத்து காவலர் ராஜா கண்ணன் கோவில் வளாகம் ஒரத்தில் இருந்த துடைப்பத்தை எடுத்துக் கொண்டு சாலையில் சிதறி கிடந்த மிகவும் கூர்மையான கண்ணாடி துண்டுகளை சமூக அக்கறையுடன் கூட்டி ஓரமாக தள்ளி சுத்தப்படுத்தினார்.
தஞ்சையில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சுகாதார ஆய்வாளர் தேர்வுக்கு இலவச பயிற்சி
தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சுகாதார ஆய்வாளர் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு இன்று தொடங்குகிறது. இது குறித்து தஞ்சை மாவட்ட கலெக்டர் பிரியங்காபங்கஜம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறுகையில், "மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தால் 1,429 சுகாதார ஆய்வாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த தேர்விற்குத் தயாராகி வரும் போட்டித் தேர்வாளர்கள் 12-ம் வகுப்பு உயிரியியல், விலங்கியல், தாவரவியல் ஆகிய பாடங்களை கொண்டுள்ள பிரிவில் பயின்றவராக இருத்தல் வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ள 2 ஆண்டுகள் பல்நோக்கு சுகாதார பணியாளர் அல்லது சுகாதார ஆய்வாளர் படிப்பினை முடித்தவராக இருத்தல் வேண்டும். இந்த காலி பணியிடத்திற்கு விண்ணப்பிக்க ஆண்கள் மட்டுமே தகுதியுடையவர்கள்.
எனவே, தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் போட்டித் தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் இன்று முதல் தொடங்கப்பட உள்ளது. இந்த பயிற்சி வகுப்பு திங்கள் முதல் வெள்ளி ஆகிய வார நாட்களில் காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெற உள்ளது.
பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விரும்புவோர்கள் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரில் தொடர்பு கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு 04362-237037 என்ற அலுவலக தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்"இவ்வாறு கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications