பாஜகவின் முரட்டு அடிமையாக எடப்பாடி பழனிசாமி – உதயநிதி ஸ்டாலின் பங்கம்
தஞ்சாவூர்: சட்டமன்ற தேர்தல் அறிவிப்பிற்கு குறுகிய காலமே உள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. கட்சி ரீதியாகவும், ஆட்சி ரீதியாகவும் பல்வேறு நடவடிக்கைகளுடன் களத்தில் வேகம் காட்டி வருகிறார்கள். ஒன்றிய அரசை கண்டிக்க வேண்டிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பாஜகவின் முரட்டு அடிமையாக இருந்து, பட்ஜெட்டை வரவேற்கிறார். நிதி கல்வி என ஒன்றிய பாசிச பாஜக அரசு தமிழ்நாட்டுக்கு பல்வேறு வகைகளில் தொல்லை கொடுத்து வருகிறது என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் என்று 4 முனை போட்டி நிலவி வருகிறது. கூட்டணிகள் கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுவிட்டன. தொகுதி பங்கீடு, தேர்தல் வாக்குறுதிகள், பிரச்சாரம், கட்சி மாறுதல் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

உதயநிதி பெருமிதம்
தஞ்சாவூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "முதலமைச்சர் மகளிருக்கான திட்டங்களை பார்த்து பார்த்து நிறைவேற்றி வருகிறார். முதலமைச்சராக பதவியேற்று போட்ட முதல் கையெழுத்து மகளிருக்கான விடியல் பயண திட்டம். அதேபோல தாய்மார்கள் பள்ளி குழந்தைகளை காலை அனுப்ப சிரமப்படுவதை பார்த்து, முதலமைச்சர் காலை உணவு திட்டம் தொடங்கினார்.
அரசுப் பள்ளியில் படித்து உயர்க்கல்வி செல்லும் பெண்களுக்கு புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் ரூ.1,000 கொடுக்கிறார். இதற்கெல்லாம் மகுடம் சூட்டுவது போல மாதம் 1.30 கோடி பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகையை முதலமைச்சர் வழங்கி வருகிறார். பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருவதால், இந்தியாவிலேயே தமிழ்நாடு வளர்ந்து வரும் மாநிலமாக உள்ளது. 11.19 சதவீதம் வளர்ச்சியுடன் நாட்டின் முதல் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.
தமிழ்நாட்டின் உரிமை பறிப்பு
இதையெல்லாம் பொறுத்துக் கொள்ள முடியாமல் பாசிச பாஜக அரசு நமக்கு பல்வேறு வகையில் தொந்தரவு அளித்து வருகிறது. நிதி உரிமையையும், மொழி உரிமையையும் பறிக்கிறார்கள். மீண்டும் புதிய கல்விக் கொள்கையை கொண்டு வந்து நம் மாணவர்கள் மீது இந்தி மற்றும் சமஸ்கிருதத்தை திணிக்க பார்க்கிறார்கள். தமிழ்நாட்டின் நிதி உரிமை தொடர்ந்து பறிக்கப்படுகிறது.
சமீபத்தில் அறிவித்த ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு எந்தத் திட்டமும் இல்லை. ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்று பெருமையாக சொல்வார். ஆனால் ஒரு திட்டத்தை கூட தரமாட்டார். தமிழ்நாடு என்கிற வார்த்தை கூட பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. ஒன்றிய அரசு பல வழிகளில் தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது.
பாஜகவின் முரட்டு அடிமை
இதையெல்லாம் கண்டிக்க வேண்டிய ஒரு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஒன்றிய நிதி அமைச்சர் பட்ஜெட்டை படித்து முடிப்பதற்கு முன்பாகவே அது சிறந்த பட்ஜெட் என்று கூறுகிறார். முரட்டு பக்தர்கள் கேள்விபட்டிருப்பீர்கள், பாஜகவின் முரட்டு அடிமையாக எடப்பாடி பழனிசாமி உள்ளார். எத்தனை பழைய அடிமைகள், புதிய அடிமைகள் வந்தாலும் வருகிற சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று தலைவர் மீண்டும் முதலமைச்சராக அமர்வது உறுதி.
கழகம் ஏழாவது முறையாக ஆட்சியமைக்க, நம் தலைவர் இரண்டாவது முறையாக முதலமைச்சராக அமர நம் உடன்பிறப்புகள் ஒன்றிணைந்து தீவிரமாக பணியாற்ற வேண்டும்" என்றார். மேலும் மணமக்கள் திருமண வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் குறித்தும் உதயநிதி அவர்களுக்கு அறிவுறுத்தினார்.
-
அதிமுக என்னும் மாபெரும் மதில் இடியும் போதும்.. மௌனம் காக்கும் எடப்பாடி.. ஒரு வார்த்தை பேசலையாமே! -
உள்கட்சி பூசலுக்கு இடையே பல்ஸ் பார்க்கும் எடப்பாடி! மாவட்ட வாரியாக கூட்டம் நடத்துவது ஏன்? பின்னணி -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்! -
சின்ன புரட்சித் தமிழர்..அதிமுகவில் என்ட்ரி கொடுக்கும் எடப்பாடி மகன்? மிதுனால் மிரளும் அதிமுக தலைகள்? -
எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்.. சிவி சண்முகத்தை அடுத்து சி. விஜயபாஸ்கரும் பரபர ட்வீட் பதிவு -
Mithun: எடப்பாடி பழனிசாமி மகன் மிதுனை அரசியலுக்கு அழைப்பது தவறு! ராஜசத்யன் கடும் எதிர்ப்பு -
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
உதயநிதி வட்டத்தை காலி செய்யும் விஜய்.. ரெடியான மெகா பிளான்.. முதல் தூண்டிலே திமிங்கலத்திற்கு! -
எடப்பாடி பழனிசாமிக்கு விழுந்த அரசியல் அடி.. தவெகவுக்கு தாவ ரெடியாகும் முக்கிய புள்ளி! இதுதான் காரணமா -
"மதிக்காத இடத்தில் பயணம் சாத்தியமா" அதிமுகவில் இருந்து விலகுவதை சூசகமாக சொன்ன விஜயபாஸ்கர்? -
"24 மணி நேரத்தில் 12 பாலியல் வன்கொடுமைகள்".. முதல்வரிடம் உதயநிதி சரமாரி கேள்வி -
"எங்கே சென்றது சிங்கப்பெண் அதிரடி படை?" கும்மிடிப்பூண்டி வழக்கில் இபிஎஸ், அன்புமணி கண்டனம்












Click it and Unblock the Notifications