பக்கத்துட்டு வீட்டினருடன் தகராறு.. குளியலறையில் வெப் கேமரா வைத்த இளைஞர்.. தஞ்சையில் அதிர்ச்சி!
தஞ்சை: பவர் பேங்குடன் வெப்கேமராவை பக்கத்து வீட்டின் குளியலறை வைத்து பெண்கள் குளிப்பதை ரசித்த முன்னாள் காவல் உதவி ஆய்வாளரின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
தஞ்சாவூர் தெற்கு வீதி பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் அரசு உதவி பெறும் பள்ளியில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் மகள் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த வெள்ளிகிழமை இவரது வீட்டின் குளியலறையின் மேல் ஏதோ மின்னுவது போல் இருப்பதை பார்த்த வெங்கடேஷின் மனைவி, தனது கணவரிடம் தெரிவித்துள்ளார். உடனடியாக குளியலறை சென்று பார்த்த போது வெப் கேமரா சார்ஜ் இறங்காமல் இருப்பதற்காக பவர்பேங்க் உடன் இணைத்து வைத்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் விசாரணை
இது குறித்து தஞ்சை மேற்கு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் வெங்கடேஷின் வீட்டின் அருகில் வசிக்கும் நசீர்அகமது (35) என்பரை கைது செய்துள்ளனர்.

பக்கத்து வீட்டுக்காரர்
இதுகுறித்து வெங்கடேசன் கூறுகையில் எனது வீட்டின் அருகில் இருப்பவர் நசீர் அகமது. திருமணம் ஆகி 6 வயதில் பெண் குழந்தை உள்ளது. மேலும் அவரின் தந்தை ஒய்வு பெற்ற முன்னாள் காவல் ஆய்வாளர். அவரின் மனைவி அரசு ஊழியர். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எனது மகளும், மனைவியும் குளிப்பதை, மாடியில் இருந்து பார்த்தார்.

சண்டையிட்ட நபர்
இது குறித்து அவர் தந்தையிடம் சொன்ன போது, எங்களிடம் சண்டைக்கு வந்தார். இந்நிலையில் எனது வீட்டின் பின்புறம் குளியலறை உள்ளது. குளியலறையொட்டி இன்னொருத்துக்கு சொந்துமான காலி வீடு உள்ளது. அந்த வீட்டின் உள்ள உரிமையாளர், வீட்டை பார்ப்பதற்கு யாராவது வந்ததால், வீட்டை சுற்றி காட்டுவதற்காக, வீட்டின் சாவியை நசீர் அகமதுவிடம் கொடுத்துள்ளனர்.

காலியாக உள்ள வீட்டின் குளியலறை
இதனை பயன்படுத்தி காலியாக உள்ள வீட்டின் குளியலறை கண்ணாடியை கழற்றி, ஒரு அடி இடைவெளியில் உள்ள எனது குளியலறையின் மேல வெப்கேமராவை பொருத்தி மனைவி, மகள் குளிப்பதை ரசித்துள்ளார். தற்போது அவர் மீது புகார் அளித்துள்ளோம் என தெரிவித்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த மேற்கு காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.
-
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications