Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தஞ்சை நடுக்காவேரி அக்காள் தங்கை.. போலீஸ் ஸ்டேஷன் வாசலில்.. அண்ணனுக்காக உயிரை விட்ட கிருத்திகா

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: தஞ்சையை அடுத்த நடுக்காவேரியைச் சேர்ந்தவர் அய்யாவு என்பவருக்கு தினேஷ் என்ற மகனும், துர்க்கா, மேனகா, கீர்த்திகா ஆகிய 3 மகள்களும் உள்ளனர். இந்நிலையில் வழக்கு ஒன்றின் விசாரணைக்காக தினேஷை போலீசார் அழைத்து சென்றனர். இதை அறிந்த அவரது தங்கைகள் மேனகா, கீர்த்திகா ஆகியோர் காவல் நிலையம் சென்றனர். அங்கு பொய் வழக்கு போட்டதாக கூறி அக்காள், தங்கை இருவரும் செய்த செயல், மொத்த தஞ்சாவூரையும் அதிர வைத்துள்ளது. உறவினர்கள் கொந்தளித்துபோய் இருக்கிறார்கள்.

காவல் நிலையங்களுக்கு விசாரணைக்காக போலீசார் யாரையாவது அழைத்து சென்றால், அவரது உறவினர்கள் கவலைப்படுவார்கள்.. உண்மையில் அவர் மீது தவறு இல்லை என்று அவர்கள் நினைத்தால், தங்களது உறவினரை காப்பாற்ற காவல் நிலையத்திற்கு செல்வார்கள். அப்படி சென்ற அக்காள் தங்கை, காவல் நிலைய வாசலில் செய்த செயல் பற்றி பார்ப்போம்.

What did Thanjavur Menaka and Keertika do for their brother at the police station gate

தஞ்சையை அடுத்த நடுக்காவேரியைச் சேர்ந்தவர் அய்யாவு என்பவருக்கு 32 வயதில் தினேஷ் என்ற மகனும், துர்க்கா, மேனகா, கீர்த்திகா ஆகிய 3 மகள்களும் உள்ளனர். இவர்களில் துர்க்காவுக்கு திருமணமாகி விட்டது. என்ஜினீயரிங் பட்டதாரியான கீர்த்திகா அரசு வேலையில் சேருவற்காக படித்து வந்தாராம்.

நேற்று முன்தினம் காலை தினேஷின் மாமா காலமாகிவிட்டார். இதனால் துக்க நிகழ்ச்சிக்கு செல்வதற்காக நடுக்காவேரி பஸ் நிறுத்தத்தில் தினேஷ் உறவினர்களுடன் நின்று கொண்டிருந்தாராம். அப்போது அங்கு வந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர், ஒரு வழக்கு விசாரணைக்காக வர வேண்டும் எனக்கூறி தினேசை இருசக்கர வாகனத்தில் நடுக்காவேரி காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளார்.

காவல் நிலையத்திற்கு சப்-இன்ஸ்பெக்டர் அழைத்து சென்றதால், தினேசின் உறவினர்களும் நடுக்காவேரி போலீஸ் நிலையத்திற்கு சென்றனர். அப்போது மேனகா, கீர்த்திகா ஆகியோர் தங்கள் அண்ணன் மீது பொய் வழக்கு போடாமல் அவரை உடனடியாக விட வேண்டும். நாளை (அதாவது நேற்று) மேனகாவை பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டினர் வர இருப்பதாக தெரிவித்தாராம்,

ஆனால் தினேஷ் மீது பொது இடத்தில் கத்தியை காட்டி மிரட்டியதாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் அவரை கைது செய்ததாக விளக்கம் அளித்தனர். தொடர்ந்து மேனகா, கீர்த்திகா ஆகியோரை திட்டி காவல் நிலையத்தை விட்டு வெளியே அனுப்பியதாக கூறப்படுகிறது.
இதனால் மனம் உடைந்த இருவரும் வீட்டிற்கு சென்று எள் பயிருக்கு தெளிக்க வைத்து இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து வந்து நடுக்காவேரி போலீஸ் நிலையம் முன்பு வைத்து குடித்து உயிரைவிட முயன்றனர்.

இதனையடுத்து சகோதரிகள் இருவரையும் உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் மீட்டு நடுக்காவேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். பின்னர் அங்கிருந்து தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டு 2 பேரும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை கீர்த்திகா பரிதாபமாக உயிரிழந்தார். மேனகாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கீர்த்திகா உயிரிழந்த சம்பவம் அறிந்த அவரது உறவினர்கள் ஏராளமானோர் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு திரண்டனர். பின்னர் கீர்த்திகா மரணத்திற்கு காரணமான போலீஸ் இன்ஸ்பெக்டரை சஸ்பெண்டு செய்ய வேண்டும் என்றும், புதுக்கோட்டை சிறையில் இருந்து தினேசை விடுவிக்க வேண்டும். அதுவரை கீர்த்திகா உடலை வாங்க மாட்டோம் எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் தஞ்சாவூரில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)

மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+