சரசரவென இறங்கிய என்.ஐ.ஏ அதிகாரிகள்.. திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு என்பது என்ன? பகீர் பின்னணி!
தஞ்சாவூர்: திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று தமிழ்நாட்டின் 24 இடங்களில் அதிரடியாக சோதனையில் இறங்கியுள்ளனர். மதமாற்றம் தொடர்பான மோதலில் கொல்லப்பட்ட திருபுவனம் ராமலிங்கம் வழக்கின் விவரத்தை இங்கே பார்க்கலாம்..
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே திருபுவனம் மேலதூண்டில் விநாயகம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பாமக முன்னாள் நகரச் செயலாளர் ராமலிங்கம். திருபுவனம் கடை வீதியில் தமிழன் கேட்டரிங்க் சர்வீஸ் என்ற பெயரில் சமையல் ஒப்பந்ததாரராகவும் சமையல் பொருட்களை வாடகைக்கு கொடுக்கும் தொழில் நடத்தி வந்தார்.

தொழில் நிமித்தமாக ராமலிங்கம் சென்றபோது, அந்தப் பகுதியில் சிலர் மதமாற்றத்தில் ஈடுபட்டதை கண்டித்தார் ராமலிங்கம். இந்நிலையில் ராமலிங்கம், கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி இரவு தனது கடையில் இருந்து வீட்டுக்கு செல்லும்போது கொலை செய்யப்பட்டார்.
ராமலிங்கம் வழக்கம்போல் தனது கடையை பூட்டிவிட்டு தனது மகனுடன் சரக்கு ஆட்டோவில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். திருபுவனத்தில் உள்ள ஒரு தெருவில் சென்றபோது, அவருடைய ஆட்டோவை ஒரு காரில் வந்த கும்பல் வழிமறித்து, ராமலிங்கத்தை ஆட்டோவில் இருந்து இறக்கி அவருடைய இரு கைகளையும் வெட்டினர். உடன் வந்த அவரது மகனையும் வெட்ட முயன்ற நிலையில், ராமலிங்கம் காலால் எட்டி உதைத்து போராடினார். இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது.
ராமலிங்கம் கொலைச் சம்பவம் தமிழ்நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மதமாற்றம் செய்வதற்கான முயற்சி மேற்கொண்டதைக் கண்டித்த போது ஏற்பட்ட வாக்குவாதத்தால், அவர் கொலை செய்யப்பட்டது அரசியல் ரீதியாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து திருவிடைமருதூர் போலீசார் வழக்குப் பதிந்து, குறிச்சிமலை பகுதியைச் சேர்ந்த முகமது ரியாஸ், திருபுவனத்தைச் சேர்ந்த நிஜாம் அலி, சர்புதீன், முகமது ரிஸ்வான், திருவிடைமருதூரைச் சேர்ந்த அசாருதீன் உள்ளிட்ட 5 கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக 18 பேர் மீது வழக்கு பதியப்பட்டது. பின்னர் இந்த வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு முகமைக்கு (என்ஐஏ) மாற்றப்பட்டது.
தேசிய புலனாய்வு முகமை, திருபுவனம் ராமலிங்கம் கொலைச் சம்பவம் தொடர்பாக தனியாக ஒரு வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக 12 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இரண்டு பேர் ஜாமீனில் வெளியே வந்தனர்.
தலைமறைவான முகமது அலி ஜின்னா, அப்துல் மஜித், புர்ஹானுதீன், சாகுல் ஹமீது, நஃபீல் ஹாசன் ஆகிய 5 பேரை என்.ஐ.ஏ அதிகாரிகள் தேடி வந்தனர். மேலும் இந்த 5 பேரையும் தேடப்படும் குற்றவாளிகளாகவும் 2019-ல் அறிவித்து இவர்கள் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு, பூந்தமல்லி சிறப்பு சிறையில் அடைக்கப்பட்டிருந்த சர்புதீன் (62), சிறுநீரக பாதிப்பு காரணமாக கடந்த பிப்ரவரி மாதம் உயிரிழந்தார். சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் திருபுவவம் ராமலிங்கம் கொலை வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது.
கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருச்சி பாலக்கரையில் உள்ள அந்த மாவட்டத்தின் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்தில் சோதனை நடத்தினர். அதேபோல, கும்பகோணத்தில் உள்ள சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் அலுவலகம் உட்பட மூன்று இடங்களிலும் சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்கள், பொருட்களை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைப்பற்றினர்.
இந்நிலையில், திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக இன்று மீண்டும் என்ஐஏ அதிகாரிகள் சோதனையை தொடங்கி உள்ளனர். திருச்சி, விழுப்புரம், தஞ்சாவூர், நெல்லை உள்ளிட்ட தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களில், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், திருபுவனம், பாபநாசம் உள்ளிட்ட இடங்கள் என சுமார் 24 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை நடைபெறுகிறது.
திருநெல்வேலியில், எஸ்டிபிஐ கட்சித் தலைவர் நெல்லை முபாரக் வீட்டிலும் இன்று காலை முதல் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். திருபுவனம் ராமலிங்கம் கொலை தொடர்பாக கோவை கோட்டைமேடு அப்பாஸ் வீட்டிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கில் தலைமறைவாக இருக்கும் முக்கிய குற்றவாளிகளைப் பிடிக்க ஏற்கனவே சன்மானம் அறிவிக்கப்பட்டும், அவர்களை பிடிக்க முடியாத நிலையில், இப்போது அவர்களை பிடிப்பது தொடர்பாக இந்த சோதனைகள் நடைபெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications