"வௌவாலா பிறப்பீங்க".. ஆளுங்கட்சிக்கு மறுபடியும் சாபம் விட்ட ஆதீனம்.. அதிர்ந்த தஞ்சாவூர்
வவ்வாலாக பிறப்பீர்கள் என்று மதுரை ஆதீனம் சாபம் விட்டுள்ளார்
தஞ்சாவூர்: குத்தகை தொகையை கட்டாதவர்கள் அடுத்த பிறவியில் வௌவாலா பிறப்பார்கள், இதற்கு சரியான சட்டத்திட்டங்கள் இல்லாததே காரணம் என்று மதுரை ஆதீனம் மறுபடியும் சாபம் விட்டுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள திருப்புறம்பியத்தில் உள்ள கரும்படு சொல்லியம்மை சமேத சாட்சிநாதசுவாமி திருக்கோயில், மதுரை ஆதீனத்திற்கு சொந்தமானதாகும்.
மதுரை ஆதீனத்தின் 293வது குருமகா சன்னிதானமாக ஸ்ரீ ஹரிஹர ஞானசம்மந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பொறுப்பேற்ற பின் முதன்முறையாக திருப்புறம்பியம் திருக்கோயிலுக்கு வருகை தந்திருந்தார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது...

பேட்டி
சாமி தரிசனத்துக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் சொன்னதாவது: குருமகா சன்னிதானம், திருக்கோயில்களின் கும்பாபிஷேகங்கள் தாமதமாவதற்கு காரணம், அரசியல்வாதிகள் தான்.. ஆதீன நிலங்கள் பல ஆளுங்கட்சி, எதிர்கட்சிக்காரர்களிடம் உள்ளது, அதற்கான குத்தகை முறையாக அவர்கள் செலுத்தாததுடன், பல இடங்களில், ஆதீன நிலங்களை விற்பனையும் செய்து மோசடி செய்துள்ளனர். குத்தகை தொகையை கட்டாதவர்கள் அடுத்த பிறவியில் வௌவாலாக பிறப்பார்கள், இதற்கு சரியான சட்டத்திட்டங்கள் இல்லாததே காரணம்.

டாஸ்மாக்
இன்றைய இளைய சமுதாயம் கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்ற ரீதியில் செயல்படுகிறார்கள், அரசியலும், சினிமாவும் அவர்களை பெரிய அளவில் குழப்பத்தில் ஆழ்த்துகிறது. பள்ளி கல்லூரி மாணவர்கள் பாஸ் மார்க் வாங்குகிறார்களோ இல்லையோ டாஸ்மாக் செல்கிறார்கள். இதனை தடுக்க அரசு மதுபான கடைகளை மூட வேண்டும்.. கல்வி கற்பதற்காக வெளிநாடுகள் செல்வதை இன்றைய இளைய தலைமுறையினர் தவிர்க்க வேண்டும்.

உதவிகள்
நம் நாட்டிலேயே கல்வி கற்க வேண்டும். சுயதொழில்கள் பல புரிய முன்வரவேண்டும். பெரும்பான்மையினர் கல்வி நிறுவனங்கள் தொடங்க, போதுமான உதவிகளும், ஒத்துழைப்பும் கிடைப்பதில்லை, ஆனால் சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்கள் தொடங்க நிறைய உதவிகளும், சலுகைகளும் வழங்கப்படுகிறது.. தமிழகம் ஆழ்வார்கள், நாயன்மார்கள் தோன்றிய புண்ணிய பூமி தமிழர்களுக்கு கெடுதல் மற்றும் துரோகம் செய்பவர்கள் அதற்கான பல பலன்களை கண்டிப்பாக அடைந்தே தீருவார்கள்..

கோயில்கள்
ஒருகாலத்தில், இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அரசுடன் கைகோர்த்திருந்தவர்கள் தான் முந்திய மத்திய அரசான ராஜீவ்காந்தி குடும்பமும், இன்றைய உக்ரைன் தேசம், உக்ரைனில் இருந்து தமிழர்களை மீட்பதில், தமிழக அரசும், மத்திய அரசும் சிறப்பாக செயல்பட்டுள்ளது. நான் பொறுப்பேற்று ஆறு மாதங்கள் தான் ஆகிறது. ஆதீன கோயில்களை முறையாக பூஜைகள் நடக்கவும், கோயிலுக்குரிய நிலங்கள், சொத்துக்கள் முறையாக பராமரிக்க தகுந்த நடவடிக்கை எடுத்து வருகிறேன்.

கெட்டப்பழக்கவழக்கம்
கோயில் கும்பாபிஷேகங்களை தமிழில் செய்வதில் தவறில்லை. இன்றைய அர்ச்சகர்கள் பலர் வெற்றிலை பாக்கு தரித்துக் கொண்டும், சகல விதமான கெட்டப்பழக்கங்களுடன் உள்ளனர். சுவாமியை தொட்டு பூஜிக்கும் அவர்கள் சுத்தமாக இருக்க வேண்டியது அவசியம்.. அனைத்து சமூகத்தினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதும் வரவேற்புக்குரியதே, ஓதுவார்கள் இல்லாத கோயிலில்களில் ஓதுவார்களை நியமிக்கும் பணியிலும் தற்போது ஈடுபட்டு வருகிறோம்" என்றார்.

சர்ச்சை
சில மாதங்களுக்கு முன்பு இவர் அளித்த பேட்டியிலும், வவ்வாலாக பிறப்பீர்கள் என்று இப்படியேதான் சாபம் விட்டபடியே பேசினார்.. விட்டார்.. கடந்த டிசம்பர் 9-ம் தேதி மானாமதுரை அருகே நடந்த விழாவில் பங்கேற்க வந்தவர் சொற்பொழிவாற்றினார்.. அப்போது, இவரது பேச்சு சர்ச்சையையே ஏற்படுத்தியிருந்தது.. "கோயில் நிலத்தை வைத்திருந்தாலோ, கோயிலுக்கு செலுத்த வேண்டிய கடனைச் செலுத்தாமல் இருந்தாலோ, அதனை விரைவில் கொடுத்து விடுங்கள். இல்லைவிட்டால், அடுத்த ஜென்மத்தில் பெருச்சாளி, மூஞ்சுறு எலி, வவ்வால், ஆகியவையாக பிறக்க நேரிடும்.. சிவன் சொத்து குலநாசம்.. ஏனென்றால், பலருக்கு நல்ல எண்ணங்கள் இல்லை"

சைவ கொடி
"நல்ல சம்பளம் அழகு இருந்தாலும் பெண் கிடைப்பதில்லை.. பெண் கிடைத்தாலும் நல்ல மாமியார் கிடைப்பதில்லை.. மாமியார் நல்லவிதமாக இருந்தால் மருமகள் சரியாக இருப்பது இல்லை.. தேசிய கொடி சைவ மதத்தை சேர்ந்த கொடி. அதிலுள்ள பச்சை நிறம் அம்பாளைக் குறிக்கிறது.. சிவப்பு நிறம் செம்மேனி அம்மாளின் நிறத்தைக் குறிக்கிறது.. வெள்ளை நிறம் ரிஷபத்தைக் குறிக்கிறது. அதனால் தேசியக் கொடி என்பது சைவக் கொடியே" என்று பேசியிருந்தது நினைவுகூரத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications