தமிழகத்தில் நெடுஞ்சாலை திட்டங்கள் தாமதம் ஏன்? சட்டென நிதின் கட்கரி சொன்ன பதில்.. மக்கள் ஷாக்
தஞ்சாவூர்: தமிழ்நாட்டில் நிலம் கையகப்படுத்தும் பணிகளில் சிரமம் இருப்பதாகத் தெரிவித்த அமைச்சர் நிதின் கட்கரி, நெடுஞ்சாலை பணிகள் இங்கு அதிகம் நடக்காமல் இருக்க இதுவே காரணம் என்றும் தெரிவித்தார். மேலும், தமிழ்நாடு, ஆந்திரா , கர்நாடகா ஆகிய மாநிலங்களை இணைக்கும் வகையில் புதிய திட்டங்கள் தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தேசிய நெடுஞ்சாலை பணிகளை ஆய்வு செய்ய ஹெலிகாப்டர் மூலம் மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கும்பகோணம் வந்தடைந்தார். அங்கு அவர் தஞ்சாவூர் -கும்பகோணம் - விக்கிரவாண்டி இடையே அமைக்கப்பட்டு வரும் நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை பணிகளை ஆய்வு செய்தார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிதின் கட்கரி, பல முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார். சர்வதேச அளவில் வாகன உற்பத்தியில் மூன்றாவது இடத்தில் இந்தியா இருப்பதாகத் தெரிவித்த நிதின் கட்கரி, அதில் இந்தியாவின் பங்கும் மிக முக்கியமானது எனத் தெரிவித்தார்.
நிதின் கட்கரி: இன்று கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஒன்றிய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி, "இப்போது சர்வதேச அளவில் நீங்கள் பார்த்தீர்கள் என்றால் வாகன உற்பத்தியில் இந்தியா 3வது இடத்தில் இருக்கிறது. அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்து 3வது இடத்தில் இந்தியா இருக்கிறது. இதில் தமிழ்நாட்டின் பங்கு முக்கியமானது. இந்தியாவில் வாகன உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் மாநிலம் தமிழ்நாடு.. வாகன உற்பத்தித் துறையில் தமிழகத்தின் பங்கு அளப்பரியது.
விக்கிரவாண்டி - கும்பகோணம் -தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை பணி ஏற்கனவே சுமார் 4 ஆண்டுகள் கால தாமதமாகிவிட்டது. இப்போது பணிகளைத் துரிதப்படுத்தி இருக்கிறோம். அடுத்த மூன்று மாதங்களில் இந்த சாலைப் பணிகள் முழுமையாக முடியும். இதற்கு மேல் இந்த சாலைப் பணிகள் நிச்சயம் தாமதமாகாது.
சிக்கல்: தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இங்குச் சாகுபடி நிலங்கள் அதிகம் இருக்கிறது. இதனால் நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் இருக்கிறது. இங்கு நெடுஞ்சாலை பணிகள் தாமதமாக இதுவே முக்கிய காரணம். தமிழ்நாடு அரசு நிலம் கையகப்படுத்திக் கொடுத்தால் மேலும் பல சாலை திட்டங்கள் தமிழகத்தில் அமல்படுத்தப்படும்.
விரைவில் தஞ்சாவூர் -அரியலூர் - பெரம்பலூர் நகரங்களை இணைக்கும் புதிய சாலை திட்டத்தை அமைக்க உள்ளோம். இதன் மூலம் சிமெண்ட் தொழிற்சாலைகள் அதிகம் உள்ள பகுதிகள் எளிதாக வளர்ச்சி அடையும். மேலும், தஞ்சாவூரில் சுற்றுலாத் துறையில் வளர்ச்சி அதிகரிக்கும். தஞ்சாவூரில் புகழ்வாய்ந்த பிரகதீஸ்வரர் கோயில் உள்ள நிலையில், அங்குச் சுற்றுலாத் துறை வேகமாக வளர்ச்சி அடையும்.
3 மாநிலங்களை இணைக்கும் திட்டம்: இப்போது தமிழ்நாடு, ஆந்திரா , கர்நாடகா ஆகிய மாநிலங்களை இணைக்கும் வகையில் திட்டங்களைச் செயல்படுத்த உள்ளோம். குறிப்பாக இங்குள்ள தொழில் நகரங்களை இணைப்பதே முக்கியம். விழுப்புரத்திலிருந்து பெங்களூர் வரை 180 கிலோமீட்டர் தொலைவிற்கு 5400 கோடி ரூபாய் மதிப்பில் நான்கு வழி சாலை அமைக்கப்படும். இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது தவிரச் சிவகங்கை -தொண்டி - ராமேஸ்வரம் மற்றும் சென்னை -கல்பாக்கம் - மகாபலிபுரம் பகுதிகளை இணைக்கும் திட்டங்களும் உள்ளது.
கர்நாடக தலைநகர் பெங்களூரைச் சுற்றி புதிய புறவழிச்சாலை அமைக்கப்படும். இதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறோம். தேசிய நெடுஞ்சாலை திட்டப் பணிகளைப் பொறுத்தவரை நிதி கிடைப்பது பெரிய விஷயம் இல்லை. எளிதாக நிதி கிடைத்துவிடும். ஆனால், சாலைப் பணிகளுக்கு நிலங்கள் கையகப்படுத்துவதில் மிகப் பெரிய காரியம். அதற்குத் தான் அதிக காலதாமதம் ஆகிறது.
தாமதம்: கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்கள் தேசிய நெடுஞ்சாலை பணிகள் என்று வந்துவிட்டால்.. உடனே தேவையான நிலங்களைக் கையகப்படுத்தித் தருகின்றன. இதனால் அங்குச் சாலைப் பணிகள் வேகமாக நடக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் நிலம் கையகப்படுத்துவதில் சிரமம் இருக்கிறது. இதனால் தான் தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளை அமைப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது" என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications