அரசு பேருந்துக்குள் ஏறி ஓட்டுநர் மீது கொலைவெறித் தாக்குதல்... கஞ்சா போதையில் இளைஞர்கள் வெறிச்செயல்!
தஞ்சாவூர்: கும்பகோணத்தில் அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது இளைஞர்கள் சிலர் கொலைவெறித் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கஞ்சா உள்ளிட்ட போதை பழக்க வழக்கங்களால், குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கஞ்சா போதையில் இளைஞர்கள் கும்பல், கொலை வெறித் தாக்குதல் நடத்தி அட்டகாசம் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே பாலக்கரை பகுதியில் நேற்று இரவு பந்தநல்லூரில் இருந்து கும்பகோணம் நோக்கி அரசு நகரப் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. பேருந்தை ஓட்டுநர் ரமேஷ் ஒட்டி வந்தார். நடத்துநர் செந்தில் குமார் பேருந்தில் இருந்தார்.
அந்த அரசுப் பேருந்து பாலக்கரை அருகே வந்தபோது, சாலையின் நடுவே இளைஞர்கள் சிலர் பைக்கில் நின்று கொண்டிருந்துள்ளனர். அப்போது ஓட்டுநர் ரமேஷ் அவர்களை ஓரமாகச் செல்லுமாறு கூறியுள்ளார். ஆனால், இளைஞர்கள் தொடர்ந்து சாலையிலேயே நின்றிருந்த நிலையில், பேருந்தை ஒதுக்கிச் செல்ல முயன்றபோதும் அவர்கள் மீது பேருந்து லேசாக உரசியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த ஐந்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள், பேருந்துக்குள் ஏறி ஓட்டுநரை தகாத வார்த்தைகளால் திட்டி வாக்குவாதம் செய்துள்ளனர். மேலும், ஓட்டுநர் ரமேஷை பேருந்துக்கு வெளியே இழுத்து வந்து அவரை சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். தடுக்க முயன்ற நடத்துநர் செந்தில்குமார் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதனை அருகில் இருந்தவர்கள் தடுக்க முயன்ற போது அந்த இளைஞர்கள் அவர்களையும் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். அந்த வழியே சென்று கொண்டிருந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்கள் இருவர் இந்த சம்பவத்தை படம் எடுத்தபோது அவர்களையும் தகாத வார்த்தைகளால் பேசி தாக்க முயன்றுள்ளனர்.
இந்த சம்பவத்தில் ஓட்டுநர் ரமேஷ் படுகாயமடைந்தார். நடத்துநர் செந்தில் குமார், மற்றும் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். இதையடுத்து காயமடைந்த 4 பேரும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, தாக்கிவிட்டு தப்ப முயன்ற 2 இளைஞர்களை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளனர். சுதர்சன், ஜனார்த்தனன் ஆகிய அந்த இருவரை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரசு பேருந்து டிரைவர் உள்ளிட்டோர் மீது தாக்குதல் நடத்திய இளைஞர்கள் அனைவரும் கஞ்சா போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications