தேனி சின்னமனூரில் நடுரோட்டில் கொடூரமாக கொல்லப்பட்ட இளைஞர்.. 6 பேர் அதிரடியாக கைது
தேனி: தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே நண்பரிடம் கொடுத்த செல்போனை திருப்பி கேட்ட இளைஞர் சரமாரி குத்திக்கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
தேனி மாவட்டம் சின்னமனூரை சேர்ந்த 25 வயதாகும் ஒண்டி என்பவரும் சின்னமனூர் அருகே உள்ள எரசக்கநாயக்கனூர் பகுதியை சேர்ந்தவர் யுவராஜா என்பவரும் நண்பர்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு யுவராஜா செல்போனை ஒண்டி வாங்கி உள்ளார அதன்பின்னர் செல்போனை யுவராஜா திருப்பி கேட்டார். ஆனால் அவர் செல்போனை தர மறுத்ததாக கூறப்படுகிறது.

பல முறை கேட்டும் செல்போனை திருப்பித்தராததால் இதையடுத்து ஒண்டியிடம் பேசி தனது செல்போனை வாங்கி தருமாறு தனது நண்பரான வினோத் குமார் (24) என்பவரிடம் யுவராஜா தெரிவித்தார். இந்நிலையில் வியாழக்கிழமை இரவு சின்னமனூர் நகராட்சி அலுவலகம் அருகே வாரச்சந்தை பகுதியில் ஒண்டி மற்றும் அவரது நண்பர்கள் இருந்தனர்.
இதை கேள்விபட்டு யுவராஜா தனது செல்போனை வாங்கி தருமாறு வினோத்குமாரை அங்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு செல்போன் வாங்கியது தொடர்பாக இரு தரப்பினரும் பேசி கொண்டிருந்தனர். அப்போது இரு தரப்பினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த ஒண்டி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் வினோத்குமாரை சரமாரியாக குத்தினார். இதனை தடுக்க வந்த யுவராஜாவை ஒண்டியின் நண்பர்கள் தடுத்துள்ளனர்.

ரத்த வௌ்ளத்தில் வினோத் குமார் சுருண்டு விழுந்தார். இதையடுத்து ஒண்டி மற்றும் அவரது நண்பர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்கள்.
இதையடுத்து அக்கம்பக்கத்தினர் படுகாயம் அடைந்த வினோத்குமாரை மீட்டு சிகிச்சைக்காக சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை காலை வினோத்குமார் உயிரிழந்தார்.
இதுகுறித்து சின்னமனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய ஒண்டி மற்றும் அவரது நண்பர்களை தீவிரமாக தேடி வந்தனர். செல்போனை திருப்பி கேட்டதால் வாலிபர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் சின்னமனூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் வினோத் குமார் உடலை வாங்க மறுத்து தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை பிரேத பரிசோதனை அறை முன்பு அவரது உறவினர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். அப்போது தப்பி சென்ற ஒண்டி மற்றும் அவரது நண்பர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். வினோத்குமாரின் குடும்பத்திற்கு முதல்வரின் நிவாரண நிதி மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்,

இதுகுறித்து கேள்விபட்டு அங்கு வந்த போலீசார்,பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குற்றவாளிகளை விரைந்து பிடிப்போம் என போலீசார் உறுதியளித்தனர். ஆனால் குற்றவாளியை கைது செய்வதுடன், தங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை வினோத்குமார் உடலை வாங்க மாட்டோம் என்று கூறி போராட்டத்தை கைவிட்டு அவரது உறவினர்கள் கலைந்து சென்றார்கள்.
இதையடுத்து இந்த வழக்கில் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்த சின்னமனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாயன் தலைமையிலான போலீசார்,ஒண்டி என்ற ஒல்லிக்குச்சி (வயது25), கார்த்தி (24), அஜய் (23), செல்வேந்திரன் (24), மாதவன் (24), செல்வா (24) ஆகிய 6 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications