Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தேனி ரூட்டில் நெளியும் நாகப்பாம்பு? சபரிமலை காட்டில் 22 நாளில் பிடிபட்ட 95 பாம்புகள்! வனத்துறை சபாஷ்

Subscribe to Oneindia Tamil

தேனி: சபரிமலை சீசன் என்பதால், ஐயப்ப பக்தர்கள் மாலை போட்டு கோயிலுக்கு சென்று வருகிறார்கள்.. எனினும் வன விலங்குகள் அச்சுறுத்தல் ஐயப்ப பக்தர்களுக்கு இருக்கவே செய்கிறது.. எனவே, பக்தர்களை பாதுகாக்கும் பொருட்டு, வனத்துறையினர் தீவிர நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்கள். அந்தவகையில் சபரிமலையில் கடந்த 22 நாட்களில் மட்டும், 95 பாம்புகள் பிடிபட்டுள்ளதாக வனத்துறை அதிகரிகள் கூறுகிறார்கள்.

தேனி-தேக்கடி வழியில் சில இடங்கள் வனப்பகுதி அருகே இருப்பதால், யானை, பாம்பு போன்ற விலங்குகள் காணப்படும் வாய்ப்பு உண்டு. ஆனாலும் இந்த சாலை பாதுகாப்பாகத்தான் இருக்கும்; வனத்துறை தொடர்ந்து இங்கு தீவிரமாக கண்காணித்து வருகிறது.

Theni Sabarimala Snakes

தேனி மாவட்டத்திலிருந்து சபரிமலைக்கு யாத்திரை செல்லும் பக்தர்கள், குறிப்பாக வனப்பகுதி வழியாக செல்லும்போதும், மலைப் பாதைகளிலும், சபரிமலை சன்னிதானத்தின் சுற்றுவட்டாரத்திலும் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சபரிமலை பக்தர்கள் கூட்டம்

தற்போது கார்த்திகை மாதம் பிறந்ததையொட்டி, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல பக்தர்கள் மாலை அணிந்துள்ளனர். தற்போது சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது... ஆனால், கோயிலை சுற்றி காடுகள் உள்ளதால், வன விலங்குகள் தொல்லைகள் நிறையவே உள்ளது..

எனவே, சபரிமலைக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பை கருதி, வனத்துறை பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தேக்கடி பெரியார் புலிகள் காப்பகத்தை சுற்றி உள்ள அடர்ந்த காட்டு பாதைகளில் பாம்பு, புலி, யானை போன்ற விலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளன..

இதனால் பக்தர்கள் பாதுகாப்பாக பயணம் செய்ய வனத்துறை பல வசதிகளையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் செய்து வருகிறது.

பாம்புகள் நடமாட்டம்

குறிப்பாக, சபரிமலை, பம்பை, நிலக்கல் போன்ற இடங்களில் குடிநீர், கழிவறை, தங்கும் விடுதி, அவசர சிகிச்சை மையம், மருத்துவமனை போன்ற வசதிகளை வனத்துறை அமைத்துள்ளது. மேலும், அவசர சூழ்நிலைகளை கண்காணிக்க பம்பையில் உதவி வனப் பாதுகாவலர் தலைமையில் சிறப்பு கட்டுப்பாட்டு அறையும் செயல்பட்டு வருகிறது.

ஆனால், பக்தர்கள் அதிகம் வரும் இந்த காலத்தில் பாம்புகளின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது... கடந்த 16ம் தேதி நடை திறக்கப்பட்டதிலிருந்து இப்போது வரை சபரிமலை, சுற்றுப்புறங்களில் இருந்து வனத்துறை மொத்தம் 95க்கும் மேற்பட்ட பாம்புகளை பிடிபட்டுள்ளதாம்.

அந்த பிடிபட்ட பாம்புகளை பெரியார் புலிகள் சரணாலயத்தின் அடர்ந்த காட்டுக்குள் வனத்துறையினர் பாதுகாப்பாக விட்டுள்ளனர்.. பாம்புகளை பிடித்து காட்டுக்குள் கொண்டுபோய் விடுவதற்கு 6 ஊழியர்கள் ஸ்பெஷலாக நியமிக்கப்பட்டுள்ளனர்

நாகப்பாம்பு

இந்த பிடிபட்ட பாம்புகளில் 16 சேரை, 11 விரியன், 8 நாகப் பாம்புகள் அடக்கம்.. 15 பாம்புகள் மட்டும் கொஞ்சம் அதிக விஷத்தன்மை கொண்டவை என்றும், மீதியவை குறைந்த விஷத்தன்மையுடையவை என்றும் பாம்பு பிடிப்பில் நிபுணத்துவம் பெற்ற குழுவின் தலைவர் பைஜூ தெரிவித்துள்ளார்..

பாம்புகளை பிடிக்கும் பணிக்காக 12 சான்றளிக்கப்பட்ட பாம்பு பிடி வீரர்கள், அவர்களுக்கு உதவியாக 60க்கும் மேற்பட்ட வனத்துறை மற்றும் பழங்குடியினர் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். மேலும், சன்னிதான பகுதியில் மட்டும் அனுபவம் வாய்ந்த 6 பேர் கொண்ட குழு முழு நேர பணியில் ஈடுபட்டு வருகிறது.

365 பாம்புகள்

கடந்த ஆண்டு மண்டல காலத்தில் 365க்கும் மேற்பட்ட பாம்புகள் பிடிக்கப்பட்டதாகவும், சீசன் அல்லாத நேரத்திலும் பாம்பு நடமாட்டம் அதிகமாக இருக்கும் என்றும் வனத்துறை அதிகாரிகள் கூறுகிறார்கள்.. 6 மாதங்களுக்கு முன்புகூட, சன்னிதானத்திலிருந்து 4 ராஜ வெம்பாலா பாம்புகள் பிடிக்கப்பட்டு காட்டின் உட்பகுதியில் கொண்டுபோய் விடப்பட்டதாம்.

எனினும், பக்தர்கள் பாம்பை கண்டால் அதை பிடிக்கவோ, துரத்தவோ முயற்சி செய்யக் கூடாது என்றும் பாம்பை பார்த்தால் உடனடியாக அருகிலுள்ள போலீஸ் ஸ்டேஷன் அல்லது வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்..

மருந்துகள் தயார்

அதுமட்டுமல்ல, காட்டு பகுதிகளில் புதர்கள் போல வளர்ந்த பகுதிகளிலும், புல் வளர்ந்த பகுதிகளிலும் செல்லாமல், வழக்கமாக பயன்படுத்தும் பாதைகளிலேயே நடக்க வேண்டும் என்றும் வனத்துறை அறிவுறுத்தியுள்ளது...

பாம்பு கடித்த நிலை ஏற்பட்டால் அதற்கான அவசர சிகிச்சைக்காக சன்னிதானம் மற்றும் பம்பை மருத்துவமனைகளில் போதுமான மருந்துகள், மருத்துவ வசதிகள் தயாராக இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 22 நாட்கள் கடந்த நிலையில் சன்னிதானம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் இருந்து 95 பாம்புகள் பிடிக்கப்பட்டு பெரியார் புலிகள் சரணாலய உட்காட்டுக்குள் விடப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை தந்து வருகின்றன.

முன்னதாக, சபரிமலை சன்னிதான திருமுற்றத்தில், பக்தர்கள் தங்கள் செல்போன்களில் போட்டோ எடுக்க தடை செய்யப்பட்டுள்ளது. இதை மீறுபவர்களின் செல்போன் பறிமுதல் செய்யப்படுவதுடன் அபராதமும் விதிக்கப்படும் என்ற தேவசம்போர்டு அறிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+