ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் எம்பி வெளியிட்ட குறுப்படம்.. எதுக்காக தெரியுமா? தேனியே திகைச்சு போச்சு
தேனி: தேனி மலைச்சாரலில் இருந்து 10 ஆண்டுகளுக்கு முன்பு கிழக்கே போன இரயிலை மேற்கே எழில் கொஞ்சும் தேனி மாவட்டத்திற்கு திருப்பிய வரலாற்று நிகழ்வு குறித்து குறும்படத்தை தேனி தொகுதி எம்பியும், முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தின் மகனுமாகிய ரவீந்திரநாத் வெளியிட்டுள்ளார்.
இயற்கை எழில் கொஞ்சும் மேற்கு தொடர்ச்சி மலையும், அச்சாரலில் வாழும் அன்பு மிக்க மக்களின் அடையாளமாக திகழும் மாவட்டம் தேனி மாவட்டம். இந்த மாவட்டத்தின் போடிநாயக்கனூரில் இருந்து சரியாக 12 வருடங்களுக்கு முன்பு மேற்கே போன ரயில் கிழக்கே வந்துள்ளது. போடி நாயகக்கனூருக்கு வந்துள்ளது. இந்த கிழக்கே போகும் ரயில் குறித்து பார்ப்போம்.

சுமார் 110 வருடங்களுக்கு முன்பே அதாவது 1909-ல் மதுரை போடி இடையே மீட்டர்கேஜ் ரயில் பாதையை ஆங்கிலேயர்கள் அமைத்தனர். இந்த பாதை அமைக்கப்பட்டதற்கு காரணம். கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் விளையும் ஏலாக்காய், காபி, டீத்தூள் போன்ற விளை பொருட்களை எடுத்து செல்வதற்காகத்தான். மதுரை போடி இடையே 87 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரயில் பாதை அமைக்கப்பட்டது. இந்த பாதையில் பயணிகள் ரயில்கள் இயங்கி வந்தன.
பல சினிமா படங்களின் படப்பிடிப்புகள் மதுரை போடி ரயிலில் தான் அந்த காலத்தில் எடுக்கப்பட்டன. கேப்டன் பிரபாகரன்,கிழக்கே போகும் ரயில் போன்றவை வெகு பிரபலமான படங்கள் ஆகும். தேனி மாவட்டத்தின் வாழ்வியலை அங்கமாக இருந்த இந்த கிழக்கே போகும் ரயில், 2010 டிசம்பர் முதல் நிறுத்தப்பட்டது, அகல ரயில் பாதையாக மாற்றும் பணி தொடங்கியது. சுமார் 10 வருடங்களாக ஆமை வேகத்தில் நடந்த பணிகள், கடைசி 3 வருடங்களில் முழு தொகை ஒதுக்கப்பட்டு பணிகள் விறுவிறுப்பாக நடந்தது.
12 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் கட்டமாக மதுரை - தேனி வரையிலும் ரயில் சேவையை கடந்த ஆண்டு மே 26-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் தொடங்கிவைத்தார். இதனால் தேனி மாவட்ட மக்கள் உற்சாகம் அடைந்தனர். தேனி - போடி வரை 15 கி.மீ.க்கான பணி தொடர்ந்து நடந்தது. தற்போது அனைத்துக்கட்ட சோதனைகளும் நிறைவடைந்துள்ளது.
இன்று முதல் (ஜூன் 15-ம் தேதி முதல்) மதுரை- போடி அகல ரயில் பாதையில் தினமும் பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது. இதேபோல் சென்னை- மதுரை துரந்தோ ரயில் போடி வரை இன்று முதல் நீட்டிக்கப்பட்டுள்ளது. திங்கள், புதன், வெள்ளி ஆகிய தினங்களில் சென்னை ரயில் இயக்கப்பட உள்ளது.
இதன் தொடக்க விழா வரும் 15 ம் தேதி தேனி மாவட்டம் போடியில் இன்று நடக்கிறது. ரயில் சேவையை மத்திய இணை அமைச்சர் ஓ.முருகன் போடியில் இந்த சேவையைத் துவக்கி வைக்கிறார். இதேபோல் இரவு 8:30 மணிக்கு ரயில் எண் 20602 : போடி - சென்னை சென்ட்ரல் ரயில் சேவை தொடங்கி வைக்கப்படுகிறது. ரயில் எண் 20602: போடி - சென்னை ரயில் செவ்வாய், வியாழன், ஞாயிற்றுக்கிழமைகளிலும், ரயில் எண் 20601 சென்னை - போடி ரயில் திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளிலும் இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
போடி - சென்னை இடையே தேனி, ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டி, மதுரை, திண்டுக்கல், கரூர், சேலம், காட்பாடி மற்றும் பெரம்பூர் ஆகிய ரயில் நிறுத்தங்களில் நின்று செல்லும். 20601 சென்னை - போடி ரயில் சென்னை சென்ட்ரலில் இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9:35 மணிக்கு போடியைச் சென்றடையும். 20602 போடி - சென்னை ரயில் போடியில் இரவு 08.30 க்கு புறப்பட்டு மறுநாள் காலை 07.55 மணிக்கு சென்னை சென்ட்ரலை சென்றடையும். 15.06.23 இரவு 8.45 மணிக்கு போடி - மதுரை ரயில் சேவை தொடங்கி வைக்கப்படும்.
தேனி மலைச்சாரலில் இருந்து 10 ஆண்டுகளுக்கு முன்பு கிழக்கே போன இரயிலை மேற்கே எழில் கொஞ்சும் தேனி மாவட்டத்திற்கு திருப்பிய வரலாற்று நிகழ்வு குறும்படம். #Theni #Madurai #IndianRailways #southernrailways #India #TamilNadu #railways pic.twitter.com/z5w2oSi948
— P.Ravindhranath (@OPRavindhranath) June 15, 2023
போடி - மதுரை தினமும் மாலை 05.50 க்கு போடியில் புறப்பட்டு 07.50 க்கு மதுரை சென்றடையும். மதுரை - போடி தினசரி ரயில் காலை 08.20 க்கு மதுரையில் புறப்பட்டு 10:30 மணிக்கு போடியை சென்றடையும். இந்த ரயில் குறித்து தான் ஓ பன்னீர்செல்வம் மகனும் தேனி மாவட்ட எம்பியுமான ரவீந்திரநாத் குறும்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் மதுரை போடிநாயக்கனூர் ரயில் வர ரவீந்திரநாத் எம்பியாக என்னவெல்லாம் செய்தார் என்பதையும்,அதற்காக குரல் கொடுத்தது குறித்தும், தேனி மாவட்டத்திற்கு சென்னை ரயில் எவ்வளவு முக்கியம் என்பதும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications