சாப்பிட்டு 8 நாளாச்சு.. ஒற்றை வாழைப்பழத்தோட இருக்கேன்கா.. மாரிமுத்து பட்ட கஷ்டம்.. அக்கா கண்ணீர்
தேனி: 4 வருஷத்தில நான் சாதிக்கலைன்னா மெரினா கடல்ல குதிச்சிடுவேன்னு சொன்னான் என மாரிமுத்து குறித்து அக்கா பாக்கியம் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
நடிகரும் இயக்குநருமான மாரிமுத்து நேற்றைய தினம் தமிழகத்தை மட்டுமல்லாமல் உலகத் தமிழ் ரசிகர்களையும் கண்ணீரில் ஆழ்த்திவிட்டு சென்றுவிட்டார்.
நேற்று காலை டப்பிங் பேசுவதற்காக ஸ்டூடியோ சென்ற அவருக்கு திடீரென வியர்த்தது, மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் அவர் ஸ்டூடியோவை விட்டு வெளியே வரும் காட்சிகளை பார்த்தோம். அதில் வெளியே வரும் அவர் நடக்க முடியாமல் நடந்து காரை தானே ஓட்டிச் செல்கிறார்.

பின்னர் சாலிகிராமத்தில் உள்ள சூர்யா மருத்துவமனைக்கு சென்ற அவர் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இதையடுத்து அவருடைய உடல் நேற்றைய தினம் அஞ்சலிக்காக வளசரவாக்கத்தில் வைக்கப்பட்டது. இந்த நிலையில் அவருடைய உடல் நேற்று மாலை ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் சொந்த ஊரான தேனி மாவட்டம் பசுமலைத்தேரிக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்த நிலையில் இவருடைய இறப்பு குறித்து தேனியில் உள்ள இவரது அக்கா பாக்கியம் கூறுகையில், என் தம்பி நல்லாதான் இருந்தான். எந்த நோய் நொடியும் இல்லாமல்தான் இருந்தது. ஆனால் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு எங்களை விட்டு போய்விட்டான். சினிமாவில் சாதிக்க எத்தனையோ கஷ்டங்களை பட்டானே அய்யா!
சுவற்றில் கரியால் எழுதிவைத்துவிட்டு சென்னை செல்வதாக வந்தான். என்னை பார்க்கும் போதெல்லாம், அக்கா சாப்பிட்டு 8 நாளாச்சுக்கா, ஒரு வாழைப்பழம்தான் கடைசியாக சாப்பிட்டது, பசிக்குது அக்கா என்பான். போர்த்திக்க போர்வை கூட இல்லை, பசங்கதான் கொடுத்தாங்க என்பான். நானும் உனக்கு ஏன்யா இந்த தலையெழுத்து, ஊருக்கு வந்துடு விவசாயம் பார்த்துகிட்டு ராஜா மாதிரி இருப்பே என்பேன்.
ஆனால் என் தம்பியோ அக்கா 4 வருஷத்தில் நான் சாதிப்பேன், இல்லாவிட்டாலும் மெரினா கடலில் குதித்து செத்துடுவேன்னு சொன்னானே! அப்பறம் படாதபாடுபட்டு சினிமாவில் சேர்ந்தான், இப்போதான் சீரியல் , பேட்டினு பிரபலமடைந்தான். ஆனால் அதற்குள் இப்படி போய்விட்டான். என் தம்பி படிப்பில் கெட்டிக்காரன், என்னுடைய மற்ற தம்பிகள் புத்தகத்தை விழுந்து விழுந்து படித்தாலும் மதிப்பெண்களை குறைவாகவே வாங்குவார்கள்.
ஆனால் மாரிமுத்து ஒரு புத்தகத்தை சும்மா வாசிப்பான், ஆனால் நல்ல மார்க் எடுப்பான். கையெழுத்து முத்துமுத்தாக இருக்கும். வாத்தியார் எல்லாம் மாரிமுத்து மாதிரி படியுங்கள்னு சொல்லுவாங்க. அப்படிப்பட்ட என் தம்பி இன்று இப்படி இருக்கிறானே! என் அப்பா கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்புதான் இறந்தார். இவ்வாறு பாக்கியம் கண்ணீர் மல்க தெரிவித்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications