"மிஸ்ராவை மிஸ் பண்ணிடாதீங்க"! வீல்சேரில் வந்த பொன்னம்பலமா இது! தவெகவுக்கு பிரச்சாரம் செய்றாரே!
கம்பம்: கம்பம் சட்டசபை தொகுதியின் தவெக வேட்பாளர் மிஸ்ராவை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் பொன்னம்பலம் இறங்கியுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாத நிலையில் வீல் சேரில் வந்த தற்போது நல்ல உடல் ஆரோக்கியத்துடன் பிரச்சாரம் செய்வது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தவெக தனித்து போட்டியிடுகிறது. கட்சி வேட்பாளர்களை ஆதரித்து விஜய் பிரச்சாரம் செய்து வருகிறார்.

அந்த வகையில் தேனி மாவட்டம் கம்பம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஜெகநாத் மிஸ்ராவை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் நடிகர் பொன்னம்பலம் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசுகையில் தவெக தலைவர் விஜய் மக்களுக்காக பணத்தை இழந்து வந்துள்ளார். விஜயகாந்த் சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது. "பணத்தை வைத்து என்னடா பண்ண போறீங்க" என்றார்.
அவர் சொன்னதை போல விஜய் இன்று மக்களுக்காக வந்திருக்கிறார். வேட்பாளர் மிஸ்ராவை மிஸ் பண்ணிடாதீங்க. மிஸ்ராவை மிஸ் பண்ணா வாழ்க்கையவே மிஸ் பண்ண மாதிரி என பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் மிரட்டலான வில்லனாக அறியப்பட்ட நடிகர் பொன்னம்பலம் , கடந்த சில ஆண்டுகளாக கடுமையான சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். தற்போது அவர் ஓரளவு குணமாகி மீண்டும் பொதுவெளிக்கு வரத் தொடங்கியுள்ளது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
சிறுநீரகக் கோளாறு: கடந்த 2020-ம் ஆண்டு முதல் சிறுநீரக செயலிழப்பு காரணமாக பொன்னம்பலம் அவதிப்பட்டு வந்தார். வாரத்திற்கு இரண்டு மூன்று முறை டயாலிசிஸ் (Dialysis) செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை: 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அவருக்கு வெற்றிகரமாகச் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவரது அக்கா மகன் ஜெகநாதன் என்பவர் ஒரு சிறுநீரகத்தைத் தானமாக வழங்கினார்.
பொருளாதார நெருக்கடி: சிகிச்சையின் போது கடும் பண நெருக்கடியைச் சந்தித்த அவர், தனக்கு உதவி செய்யுமாறு திரைத்துறையினரிடம் கோரிக்கை வைத்தார். இதற்காக அவர் 20 முறைக்கு மேல் தற்கொலை எண்ணம் வந்ததாக உருக்கமான பேட்டிகளில் தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசன்: பொன்னம்பலத்தின் மருத்துவச் செலவுகளை முழுமையாக ஏற்றதோடு, அவருடைய குழந்தைகளின் கல்விச் செலவையும் பொறுப்பேற்றுக் கொண்டார்.
சிரஞ்சீவி: தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி சுமார் 45 லட்சம் ரூபாய் வழங்கி உதவியதாகக் கூறப்படுகிறது.
பிற நடிகர்கள்: ரஜினிகாந்த், சரத்குமார், தனுஷ், விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ், அர்ஜுன் மற்றும் இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் ஆகியோரும் தங்களால் இயன்ற நிதி உதவிகளைச் செய்தனர். பொன்னம்பலம் மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்.
வீல்சேர் நடனம்: சில மாதங்களுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சியில் வீல்சேரில் அமர்ந்தபடியே அவர் உற்சாகமாக நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, ரசிகர்களை நெகிழ வைத்தது.
அரசியல் வருகை: தற்போது நடைபெற்று வரும் 2026 சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தில் அவர் ஈடுபடத் தொடங்கியுள்ளார். குறிப்பாக, தமிழக வெற்றி கழகம் வேட்பாளரை ஆதரித்து தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
ஒரு காலத்துல பறந்து பறந்து சண்டை போட்ட 'ஸ்பேர் பார்ட்ஸ்' பொன்னம்பலம், இன்று மீண்டும் பழைய உத்வேகத்துடன் எழுந்து வருவது பலருக்கும் ஒரு பாசிட்டிவ் எனர்ஜியைத் தருகிறது.












Click it and Unblock the Notifications