எங்க போனாலும் இந்த கொசுத் தொல்லை தாங்க முடியல.. ஓபிஎஸ்ஸை சீண்டிய ஆர்பி உதயகுமார்!
தேனி: தேனி மாவட்டம் ஓபிஎஸ்ஸை முதலமைச்சர் ஆக்கியதால் அதிமுக சந்தித்த சோதனைகள் கொஞ்சம் நஞ்சமல்ல. எங்கு சென்றாலும் இந்த கொசு தொல்லை தாங்க முடியவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் பேசினார்.
மதுரையில் வரும் ஆகஸ்ட் 20ம் தேதி அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பிரமாண்ட மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான ஆலோசனை கூட்டம் தேனியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், "எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை முதலமைச்சர் ஆக்கியது தேனி மாவட்டம். தேனி மாவட்டம் ஓபிஎஸ்ஸை முதலமைச்சர் ஆக்கியதால் அதிமுக சந்தித்த சோதனைகள் கொஞ்சம் நஞ்சமல்ல. ஓபிஎஸ் தொல்லை தாங்க முடியவில்லை.
நீதிமன்றம், தேர்தல் ஆணையம் என எங்கு சென்றாலும் இந்த கொசு தொல்லை தாங்க முடியவில்லை. இங்கு வந்திருக்கும் கூட்டத்தை பார்த்தால் தேனியில் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் நடத்தும் கூட்டம் ரத்து செய்யப்பட்டால் கூட ஆச்சிரியப்படுவதற்கு இல்லை.
நாளை தேர்தல் வைத்தாலும் எடப்பாடி பழனிசாமி தான் முதல்வராக வருவார். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்று எந்த நேரத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பதவி ஏற்றாரோ எல்லா விலைவாசியும் ஏறிவிட்டது. மக்கள் வீட்டில் தக்காளி சட்னி கூட வைக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது" என விமர்சித்தார்.
இதற்கிடையே, இன்று தேனியில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு நடத்திய ஆர்ப்பாட்டத்தில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பங்கேற்றார். கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி ஓபிஎஸ், டிடிவி தரப்பினர் இன்று தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
-
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications