"நானும் ஓ பன்னீர்செல்வமும்.." டிடிவி தினகரன் சொன்ன அந்த வார்த்தை.. நோட் பண்ணீங்களா! கிளைமேட் மாறுதே
எடப்பாடி பழனிசாமியை டிடிவி தினகரன் கடுமையாகச் சாடிய பேசினார்.
தேனி: ஜெயலலிதாவின் 75ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய டிடிவி தினகரன், எடப்பாடி பழனிசாமியை மிகக் கடுமையாகச் சாடி பேசினார். எடப்பாடி துரோகத்தால் இந்த இடத்தை அடைந்துள்ளதாகவும் அவர் விமர்சித்தார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75ஆவது பிறந்த நாள் விழாவை அவரது தொண்டர்கள் நேற்று கொண்டாடினர். இதற்காக பல்வேறு தலைவர்கள் ஜெயலலிதா படங்களுக்கு மரியாதை செலுத்தினர்.
அதிமுக சார்பில் எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் என இருவரும் தனித்தனியாக மரியாதை செலுத்தினர். அதேபோல அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் ஜெயலலிதா படத்திற்கு மரியாதை செலுத்தினார்.

பொதுக் கூட்டம்
இதற்கிடையே அமமுக சார்பில் தேனியில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75வது பிறந்த நாளுக்காக டிடிவி தினகரன் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பங்களாமேடு பகுதியில் நடைபெற்ற இந்த பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பலநூறு அமமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் பேசிய டிடிவி தினகரன், "நான் என்ன தான் தஞ்சையைச் சேர்ந்தவனாக இருந்தாலும்... என்னை ஜெயலலிதா அறிமுகப்படுத்தியது இந்த தேனியில் இருந்து தான்.

டிடிவி தினகரன்
இதன் காரணமாகவே தேனி எனக்கு ரொம்பவே பிடிக்கும். கோடைக் காலங்களில் தேனியில் தங்க வீடு பார்த்து வருகிறேன். இதற்கு அரசியலுக்காக இல்லை.. தேனி மாவட்டத்தில் இருக்கும் அமமுக தொண்டர்களைச் சந்திக்க.. நான் இங்குப் போட்டியிட்ட நாடாளுமன்றத் தேர்தலில் அதிகபட்ச வாக்குகள் பெற்று வெற்றி அடைந்தேன். அதேபோல குறைந்த வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்தோம் இதே தேனி தான்.. சிலர் செய்த அரசியல் சதியால் 2021 சட்டசபைத் தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தோம்.

சதியை முறியடிப்போம்
வரும் மக்களவை தேர்தலில் அந்த சதித் திட்டத்தை முறியடிப்போம்... அடுத்த மக்களவை தேர்தலில் நிச்சயம் வெல்வோம். நமது வெற்றியை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது.. இந்த பொதுக்கூட்டத்திற்கு அமமுக தொண்டர்களும் நிர்வாகிகளும் வந்துள்ளார்கள். நீங்கள் யாரும் டெண்டருக்காக வந்தவர்கள் அல்ல.. எந்த பலனை எதிர்பார்க்காத தொண்டர்கள் நீங்கள். ஆனால், சிலர் எம்ஜிஆர் தொடங்கிய இயக்கத்திற்குத் துரோகம் மட்டுமே செய்து வந்துள்ளனர்.

துரோகம்
துரோகம் மட்டுமே செய்து பொதுச்செயலாளர் பதவியை அடைந்துள்ளனர். இதை எம்ஜிஆரின் ஆன்மா கண்டிப்பாக மன்னிக்கவே மன்னிக்காது... ஜெயலலிதாவின் ஆன்மாவும் மன்னிக்காது.. இந்த காலம் எல்லாம் மாறும்.. அப்போது காட்சிகளும் மாறும். எடப்பாடிக்கு விரைவில் பாடம் கற்பிப்போம். 2021 சட்டசபைத் தேர்தலில் அதிமுகவினர் ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்தனர்.. செலவு செய்து என்ன பயன்..

நானும் ஓ பன்னீர்செல்வமும்
அப்போது அவர்களிடம் ஆட்சி அதிகாரம் இருந்தது. வலுவான ஒரு கூட்டணியும் இருந்தது. ஆனாலும் அப்போது அதிமுகவால் ஆட்சியைத் தக்க வைக்க முடியவில்லை.. இப்போது ஈரோடு கிழக்கில் இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் திமுகவை வெற்றி பெற வைக்க எடப்பாடி செயல்பட்டு வருகிறார். இதற்காகவே எடப்பாடி ஜெயலலிதாவின் தொண்டர்களைப் பலவீனப்படுத்தி வருகிறார். எடப்பாடிக்குப் போட்டியே திமுக இல்லை. நானும் ஓ பன்னீர்செல்வமும் தான் போட்டி.

எடப்பாடி மீது தாக்கு
எடப்பாடி பழனிசாமியால் இரட்டை இலை சின்னத்தை வைத்து ஏமாற்ற முடியாது. பொதுமக்கள் நிச்சயம் தூக்கி எரிந்துவிடுவார்கள். அப்போது நாம் மீட்டெடுப்போம்.. உண்மையான தொண்டர்கள் யாருமே அங்கு இல்லை.. உண்மை தொண்டர்கள் எங்கள் பின்னால் தான் இருக்கிறார்கள். அவர்கள் இருக்கும் வரை இரண்டில் ஒன்று பார்த்து விடலாம்.. ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சியை அமமுக தான் நிச்சயம் தமிழ்நாட்டிற்குக் கொண்டுவரும்" என்று அவர் தெரிவித்தார்.

கிளைமேட் மாறுதே
இப்போது சுப்ரீம் கோர்ட் எடப்பாடிக்குச் சாதகமாக வந்துள்ள நிலையில், டிடிவி தினகரன் ஓபிஎஸை விமர்சிப்பதைத் தவிர்த்துள்ளார். தீர்ப்பு வந்த நாளில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், ஓபிஎஸ் தன்னுடைய பழைய நண்பர் என்று கூறி அதிர்ச்சி அளித்தார். அவரது முழு பேச்சிலும் எடப்பாடியையே தாக்கி பேசினார். இந்தச் சூழலில் தானும் ஓபிஎஸும் தான் எடப்பாடிக்கு எதிரிகள் என்று சொன்னது முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications