தேனி அருகே பெண் மீது கொடூர தாக்குதல்.. 5 பேர் அதிரடியாக கைது
Subscribe to Oneindia Tamil
தேனி: தேனி அருகே கழிவுநீர் பொதுப்பாதையில் செல்வது தொடர்பான பிரச்சினையில் பெண் உள்பட 3 பேர் மீது சரமாரி தாக்குதல் நடத்திய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே கரட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன். அவருடைய மனைவி ஜெயலட்சுமி (வயது 34). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் என்பவருக்கும் கழிவுநீர் பொதுப்பாதையில் செல்வது தொடர்பாக நீண்ட காலமாக பிரச்சினை இருந்து வந்ததாம். இதனால் 2 பேருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்தநிலையில் கடந்த மே 26 ம் தேதி பாலமுருகன் மனைவி ஜெயலட்சுமி, முன் விரோதம் காரணமாக சதீஷ்குமார் குடும்பத்தினரை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் மீண்டும் அவர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஆத்திரம் முற்றி கைகலப்பாக மாறியது.
அப்போது சதீஷ்குமாரின் வீட்டிற்கு மஞ்சனூத்து கிராமத்தை சேர்ந்த உறவினர்களான குமரேசன் (32), அபிமன்யூ (34), விக்னேஷ் (30), மனோஜ் (32), மதன் (34), தனபாண்டி (36), ராமர் (38), ஆதி (32), ஜெயக்குமார் (32) ஆகியோர் வந்தனர்.
அப்போது அவர்கள், சதீஷ்குமாரிடம் தகராறில் ஈடுபட்ட ஜெயலட்சுமி, அவருடைய அண்ணன் வாசககுமார், உறவினர் மாலியன் ஆகிய 3 பேரை கம்பு, மண்வெட்டி பிடி, உருட்டுக்கட்டை, கம்பி உள்ளிட்டவற்றால் கடுமையாக தாக்கினர்.
இதில் ஜெயலட்சுமி, வாசககுமார் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
இதையடுத்து அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக ஜெயலட்சுமி, தேனி மாவட்டம் கடமலைக்குண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குமரேசன், அபிமன்யூ, விக்னேஷ், மனோஜ், மதன்குமார் ஆகிய 5 பேரை கைது செய்தார்கள் .மேலும் தலைமறைவாக உள்ள 4 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதற்கிடையே ஜெயலட்சுமி மற்றும் அவரது உறவினர்களை கம்பு, கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்குவதை அப்பகுதியை சேர்ந்த சிலர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பி விட்டனர்.. அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
More From
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications