தேனியில் ஒரே நிமிடத்தில் 20 லட்சம் லாபம்.. வங்கி ஊழியரின் சாமர்த்தியம்.. இறுதியில் ட்விஸ்ட்
தேனி: தேனி மாவட்டம் மேல்மங்கலம் பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கருப்பசாமி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே எல்.புதூரை சேர்ந்த ராஜன், மற்றும் கண்னன் ஆகியோரிடம் அரசு வேலை வாங்கி தருவாத ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பி ரூ.20½ லட்சம் வரை தந்துள்ளார்கள். இந்த மோசடி தொடர்பாக வேளாண்மைத்துறை ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே எல்.புதூரை சேர்ந்த 42 வயதாகும் ராஜன் என்பவருடைய உறவினர் கண்ணன். கண்ணன் தேனி மாவட்டம் மேல்மங்கலம் பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். அவர் மூலமாக சின்னமனூர் அருகே கரிச்சிப்பட்டியை சேர்ந்த 47 வயதாகும் கருப்பசாமி என்பவர், வாடிப்பட்டி ராஜனுக்கு அறிமுகம் ஆனார். கருப்பசாமி தேனி வேளாண்மைத்துறை அலுவலகத்தில் உதவியாளராக வேலை செய்து வருகிறார்.

13 லட்சம் ஏமாந்தார்
இந்நிலையில், கருப்பசாமி தனக்கு தெரிந்த அரசியல்வாதிகள், அதிகாரிகள் மூலம் பலருக்கு அரசு வேலை வாங்கித் கொடுத்துள்ளதாக ஆசை வார்த்தை கூறினாராம். பணம் கொடுத்தால் தேனி கலெக்டர் அலுவலகம், இந்து சமய அறநிலையத்துறையில் அரசு வேலை வாங்கித் தருவதாக கண்ணன், ராஜன் ஆகியோரிடம் கூறினாராம. அவர் கூறிய ஆசை வார்த்தைகளை இருவரும் அப்படியே நம்பி விட்டனர். இதையடுத்து கண்ணன் தனது மகனுக்கும், ராஜன் தனது மகன் மற்றும் மகளுக்கும் அரசு வேலை பெற முயற்சி செய்தனர். இதற்காக அவர்கள் சேர்ந்து மொத்தம் ரூ.13 லட்சத்தை கருப்பசாமியிடம் கொடுத்துள்ளார்கள்.
20 லட்சம் மோசடி தொடர்பாக வழக்கு
இதுகுறித்து வாடிப்பட்டி ராஜன் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில், மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மாயாராஜலட்சுமி தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையை தொடர்ந்து 2 பெண்கள் உள்பட 4 பேரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.20 லட்சத்து 50 ஆயிரம் மோசடி செய்தது தொடர்பாக கருப்பசாமி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கூட்டுறவு வங்கி ஊழியர்
இந்த வழக்கில் கருப்பசாமியை போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு வேலை வாங்கித்தருவதாக யாராவது பணம் கேட்டால் தர வேண்டாம் என்றும், இதுபோன்ற மோசடி நபர்கள் குறித்து காவல்துறையில் புகார் அளித்தால், அவர்கள் மீது போலீசார் உடனே நடவடிக்கை எடுப்பார்கள். அரசு வேலைக்காக பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்று போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications