Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டிஐஜி விஜயகுமார் உடலைப்பார்த்து கதறிய தாய்.. கலங்கிய டிஜிபி சங்கர் ஜிவால் ஆறுதல்.. தேனியில் தகனம்

Subscribe to Oneindia Tamil

தேனி: கோவையில் தற்கொலை செய்து உயிரிழந்த கோவை சரக டிஐஜி விஜயகுமார் உடல் உறவினர்கள் அஞ்சலி செலுத்த சொந்த ஊரான தேனிக்கு கொண்டு வரப்பட்டது. விஜயகுமாரின் உடலைப்பார்த்து கதறிய தாயாருக்கு டிஜிபி சங்கர் ஜிவால் ஆறுதல் கூறினார். அரசியல் பிரமுகர்கள் , காவல்துறை உயர் அதிகாரிகள் அஞ்சலி செலுத்திய பின்னர் காவல்துறை மரியாதையுடன் விஜயகுமாரின் உடல் தகனம் செய்யப்பட்டது.

கோவை சரக டிஐஜியாக கடந்த ஜனவரி மாதம் முதல் பணியாற்றி வந்த விஜயகுமார், இன்று அதிகாலை தனது வீட்டில் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். பிரேதப் பரிசோதனைக்காக அவரது உடல் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, டிஐஜி தற்கொலை குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

DGP Shankar Jiwal tributes Coimbatore DIG Vijayakumar body cremated in Theni

டி.ஐ.ஜி.யின் இந்த தற்கொலைக்கு குடும்ப பிரச்சனை காரணமாக இருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. தனது பாதுகாவலரின் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் போலீசார் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை செய்து கொண்ட விஜயகுமார் போடிநாயக்கனூர் அருகே அணைக்கரைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆவார். கீதா வாணி என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். இதனிடையே கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்த நிலையில், டிஐஜி விஜயகுமாரின் உடல் அவரது சொந்த ஊரான தேனிக்கு கொண்டுசெல்லப்பட்டது. அங்கு அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டது.

அப்போது டிஜிபி சங்கர் ஜிவால் நேரில் சென்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.டி.ஜி.பி முன் விஜயகுமாரின் குடும்பத்தினர் கதறி அழுதனர். அப்போது என் கண்ணே.. உன்னை நம்பிதானே இருந்தோம் என அவரது தாய் ராஜாத்தி கதறி அழுதது அனைவரையும் கலங்க வைத்தது.

டிஜிபி சங்கர் ஜிவாலுடன், காவல் துறை உயர் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர். கோவை மேற்கு மண்டல ஐஜி சுதாகர் மற்றும் தென் மண்டல ஐஜி அஸ்ரா கார்க் ஆகியோரும் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். அதோடு, மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட மாவட்ட எஸ்.பி க்களும் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். அப்போது ஐபிஎஸ் அதிகாரி துரை கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, பெரியகுளம் எம்.எல்.ஏ சரவணக்குமார் ஆகியோரும் டிஐஜி விஜயகுமாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியதோடு, அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறினர். இவர்களை தொடர்ந்து தேனியில் பள்ளி பருவத்தில் விஜயகுமாருடன் படித்த 20 க்கும் மேற்பட்ட அவரது பள்ளி நண்பர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். மேலும், பள்ளியில் அவருக்கு பாடம் எடுத்த ஆசிரியர்களும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

உயிரிழந்த விஜயகுமாருக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்ட பின்னர் இறுதி சடங்குகள் செய்யப்பட்டன. பின்னர் டிஜிபி சங்கர் ஜிவால் உள்ளிட்ட காவல்துறை உயரதிகாரிகள் டிஐஜி விஜயகுமாரின் உடலை சுமந்து சென்றனர். விஜயகுமாரின் உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு காவல்துறை மரியாதைக்கு பின்னர் தேனியின் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+