வாகனத்தை முற்றுகையிட்ட மக்கள்.. அடிப்பது போல் பாய்ந்த திமுக எம்பி தங்க தமிழ்ச்செல்வன்.. தேனியில் பரபரப்பு
தேனி: தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே குச்சனூரில் கோவில் பூமி பூஜை நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற திமுக எம்பி தங்க தமிழ்ச்செல்வனை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது காரில் இருந்து இறங்கிய எம்பி தங்க தமிழ்ச்செல்வன் அடிப்பது போல் சென்றதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே குச்சனூரில் புகழ்பெற்ற சனி பகவான் கோவில் உள்ளது. சுயம்புவாக லிங்க வடிவில் அருள்பாலிக்கும் சனி பகவான் கோவிலானது பிரம்மஹத்தி தோஷம் நீக்கும் ஸ்தலமாகவும் விளங்குகிறது. இங்கு, ஆடி மாத சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதில் தமிழகத்தை சேர்ந்த பக்தர்கள் மட்டுமின்றி அண்டை மாநிலங்களை சேர்ந்தவர்களும் வந்து வழிபடுவார்கள்.

இந்த நிலையில் இன்று இந்த திருக்கோயிலில் பக்தர்கள் தங்கி இளைப்பாறுவதற்காக மண்டபம் ஒன்று கட்டுவதற்கான பூமி பூஜை ஏற்பாடுகள் நடந்து வந்தது. தொடர்ந்து காலையில் பூமி பூஜை நடந்தது. இதில் கலந்துகொள்வதற்காக திமுவை சேர்ந்த தேனி நாடாளுமன்ற எம்பி தங்க தமிழ்ச்செல்வன் வந்திருந்தார்.
அப்போது குச்சனூர் பகுதியில் மின் மயானம் அமைக்க வேண்டும் என்று ஒரு தரப்பினரும், மின் மயானம் அமைக்க கூடாது என்று ஒரு தரப்பினரும் கோஷமிட்டவாறு எம்பியை முற்றுகையிட்டனர். இதனால் போலீசாரும் அங்கு குவிக்கப்பட்டனர். இரு தரப்பினரையும் சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் அவர்கள் எம்பி தங்க தமிழ்ச்செல்வன் காரை முற்றுகையிட்டனர்.
போலீசார் தடுத்து நிறுத்தியும் அவர்கள் காரை நாலாபுறமும் சுற்றி நின்றதால் திடீரென ஆவேசமடைந்த அவர் கார் கதவை திறந்து வெளியே வந்தார். அப்போது எம்பி தங்க தமிழ்ச்செல்வன் அடிப்பது போல் சென்றதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா?












Click it and Unblock the Notifications