விநாயகர் சிலை ஊர்வலத்தை தடுத்தால் திமுக ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும்...சொல்வது அண்ணாமலை
யார் தடுத்தாலும் விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தே தீரும் என்று மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். தமிழகத்தைவிட அதிக கொரோனா தொற்று இருக்கும் மகாராஷ்டிராவில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்
தென்காசி: எந்த அரசு தடுத்தாலும் விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தே தீரும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு தடை விதிக்கும் அரசு, எதற்காக டாஸ்மாக் கடையை திறக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
Recommended Video
விநாயகர் சதுர்த்தி விழா வரும் 10ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் சிலை வைத்து வழிபடவும், ஊர்வலம் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக பொது இடங்களில் சிலைகளை நிறுவுவது அல்லது பொது இடங்களில் விழா கொண்டாடுவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. அதுபோன்று சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்வதற்கும் நீர்நிலைகளில் சிலைகளைக் கரைப்பதற்கு அனுமதி இல்லாத நிலையில் சமய விழாக்களைப் பொதுமக்கள் தங்கள் வீடுகளிலேயே கொண்டாடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக தனி நபர்கள் தங்களது இல்லங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், தனி நபர்களாகச் சென்று அருகிலுள்ள நீர்நிலைகளில்' சிலைகளைக் கரைப்பதற்கும் அனுமதிக்கப்படுகிறது. சென்னையைப் பொருத்தவரை, கடற்கரையில் குறிப்பாக சாந்தோம் முதல் நேப்பியர் பாலம் வரையிலான வழித்தடத்தில் இச்செயல்பாட்டிற்கு முற்றிலுமாக தடை விதிக்கப்படுகிறது. மேற்குறிப்பிட்ட அனுமதி தனிநபர்களுக்கு மட்டும் பொருந்தும். அமைப்புகள் இச்செயல்பாடுகளில் ஈடுபடுவது முழுவதுமாக தடைசெய்யப்படுகிறது.

சட்ட நடவடிக்கை
தனிநபர்கள், தங்களது இல்லங்களில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட சிலைகளை ஆலயங்களின் வெளிப்புறத்திலோ சுற்றுப்புறத்திலோ வைத்துச் செல்வதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இச்சிலைகளைப் பின்னர் முறையாக அகற்றுவதற்கு இந்து சமய அறநிலையத் துறையினரால் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது நடைமுறையில் உள்ள சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் மற்றும் இதர கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு மேற்குறிப்பிட்டுள்ள அனுமதி வழங்கப்படுகிறது. இந்த அனுமதி தனி நபர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதால் மேற்குறிப்பிட்டுள்ள வழிமுறைகளை எவ்வகையிலேனும் மீறுபவர்கள் மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணாமலை பேச்சு
அரசின் இந்த அறிவிப்புக்கு இந்து முன்னணி, பாஜக உள்ளிட்ட கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்பவர்களிடம் விட்டு விடுங்கள். கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றி விழாவை சிறப்பாக நடத்திக் காட்டுவார்கள் என்று கூறியுள்ளார். அரசு கட்டுப்பாடுகளை விதிக்கலாம். ஆனால், நடத்தவே கூடாது என்று சொல்வதை பாஜக ஏற்றுக் கொள்ளாது என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தடை விதிப்பது ஏன்
தென்காசி மாவட்ட பாவூர்சத்திரத்தில் நடந்த கட்சி ஊழியர் கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, தமிழகத்தில் விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி கிடையாது என்று மாநில அரசு சொல்லிவிட்டது. அத்துடன் அவரவர் வீட்டில் விநாயகர் சிலை வைத்துக் கொண்டாட அனுமதி கொடுப்பதாகத் தெரிவித்திருக்கிறது. வீட்டில் வைத்து வழிபட அரசின் அனுமதி தேவையில்லை. இதற்கு தடை விதிக்கும் அரசு, எதற்காக டாஸ்மாக் கடையை திறக்க வேண்டும்? எனவே, எந்த அரசு தடுத்தாலும் விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தே தீரும் என்று கூறினார்.

கொரோனா குறைந்து விட்டது
நமது பெரிய செல்வம் என்பது குழந்தைகள். அரசை நம்பி அவர்களை இன்று முதல் பள்ளிக்கு அனுப்புகிறோம். எல்லா இடத்திலும் கொரோனா குறைந்துவிட்டதாகச் சொல்லும் நீங்கள் எதற்காக விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்கு மட்டும் கொரோனா குறையவில்லை என்று சொல்கிறீர்கள்? தமிழகத்தைவிட அதிகம் கொரோனா தொற்று இருக்கும் மகாராஷ்டிராவில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

திமுக ஆட்சி
தமிழகத்தில் தனிமனிதனாகப் போய் சிலைகளைக் கரைக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதிலிருந்து, இவர்கள் நம்முடைய சித்தாந்தத்தை, தமிழக மண்ணின் பாரம்பரியத்தைப் புரிந்துகொள்ளவில்லை என்று தெரிகிறது. விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் என்பது நிச்சயமாக நடக்கும். அதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் கிடையாது. தி.மு.க அரசு விநாயகரைக் கையில் எடுத்து அரசியல் செய்தால், அதே விநாயகர் தி.மு.க அரசு முடிவுக்கு வருவதற்கு முடிவுரை எழுதுவார் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
-
கனிமொழி தனிக்கட்சி தொடங்குவார்.. திமுக யாரிடம் செல்லும் என்றே தெரியாது.. அண்ணாமலை பரபர பேச்சு -
அண்ணாமலையின் டெல்லி விசிட்.. ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்து கொடுத்த பாஜக தலைமை.. பின்னணி என்ன? -
அமித் ஷாவின் அதிரடி 30.. மோடி-யோகியின் 11:11 வியூகம்.. மம்தா கோட்டையை தகர்க்க மெகா பிளானில் பாஜக -
முக்குலத்தோர் VS நாயக்கர்.. நயினார் நாகேந்திரனின் சாத்தூர் தொகுதியில் எந்த ஜாதி வாக்காளர்கள் அதிகம்? -
போய் டவுசரை போட்டு வேலையை பார்க்க சொல்லுங்க.. அண்ணாமலைக்கு செந்தில் பாலாஜி பதிலடி -
முதலில் தமிழன், அப்புறம் தான் இந்து! மேலூர் பாஜகவை அதிரவிட்ட வார்த்தை.. பின்னணியில் விகே பாண்டியன்? -
ஹெலிகாப்டரில் பறந்த அண்ணாமலை.. தரையிறங்கியதும் சுத்துப்போட்ட அதிகாரிகள்! என்ன நடந்தது? பரபரப்பு -
முதல்வர் பதவியை பிடுங்கிய பிறகும் இப்படியா! நிதிஷுக்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக.. ஜனாதிபதி மூலம் செக் -
சாத்தூரில் நயினார் வெல்வாரா? தோற்கடிக்க ஸ்டாலின் 2 முக்கிய ‘மூவ்'.. இதை கவனிச்சீங்களா -
துரந்தர் 2.. தமிழ்நாட்டில் தடை செய்ய கோரி வழக்கு தள்ளுபடி ஏன்.. ஐகோர்ட் தீர்ப்பு என்ன -
மம்தாவை தூக்கி எறியும் பாஜக? ஸ்கெட்ச் போட்டு இறங்கிய அமித் ஷா.. மேற்கு வங்கத்தில் பரபர அரசியல் களம் -
கந்தசாமியா.. பழனிசாமியா.. கன்ஃபியூஷ் ஆன அண்ணாமலை.. ஷாக்கான அதிமுக வேட்பாளர்












Click it and Unblock the Notifications