தேனியில் திமுக நிர்வாகியின் நிறுவனத்தில் ED சோதனை.. பூட்டை உடைத்து உள்ளே சென்ற அதிகாரிகள்
தேனி: தேனியில் திமுக மாநில செயற்குழு உறுப்பினராக உள்ள சங்கர் என்பவருக்கு சொந்தமான இடங்களில் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். கேரள பதிவு எண் கொண்ட காரில் வந்த அதிகாரில் குடோனில் பூட்டை உடைத்து உள்ளே சென்று சோதனை நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கேரள பதிவு எண் கொண்ட காரில் வருகை தந்த அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டது பரபரப்பை ஏறபடுத்தியிருக்கிறது.
சட்ட விரோத பணபரிமாற்றம் முறைகேடு புகார்கள் தொடர்பாக அமலாக்கத்துறை அவ்வப்போது அதிரடி சோதனை நடத்தி வருகிறது. இந்த நிலையில்தான் தேனி மாவட்டத்தில் திமுக பிரமுகருக்கு சொந்தமான ஏலக்காய் நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீரென சோதனை மேற்கொண்டனர். தேனி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

திமுக மாநில செயற்குழு உறுப்பினர்
தேனி மாவட்டம் போடியை சேர்ந்தவர் சங்கர். இவர் திமுகவில் மாநில செயற்குழு உறுப்பினராக உள்ளார். தேனி அருகே உள்ள போடி இரட்டை வாய்க்கால் அருகில் ஏலக்காய் வர்த்தக நிறுவனம் நடத்தி வருகிறார். இவருடைய மனைவி ராஜராஜேஸ்வரி, போடி நகராட்சி தலைவராக இருக்கிறார். இவர்களின் மகன் லோகேஷ் திமுக இளைஞரணி நிர்வாகியாக உள்ளார்.
சங்கர் நடத்தி வரும் ஏலக்காய் வர்த்தக நிறுவனத்தில் வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக கடந்த இரு தினங்களுக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த சூழலில், நேற்று கேரள பதிவெண் கொண்ட காரில் அமலாக்கத்துறை அதிகாரிகள், மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்புடன் வருகை தந்தனர்.
50க்கும் மேற்பட்ட அதிகாரிகள்
அவருடன் 50 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் வருகை தந்த நிலையில், குடோனுன் ஒட்டி இருந்த வர்த்தக நிறுவனம் பூட்டிக்கிடந்தது. இதையடுத்து பூட்டை உடைத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக உள்ளே நுழைந்தனர். குடோனுக்கு வெளியே துப்பாக்கி ஏந்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். காலையில் தொடங்கிய இந்த சோதனை பிற்பகல் 3 மணி வரை நடைபெற்றது.
திமுக நிர்வாகி சங்கரின் வீடு அலுவலகம், ஆகிய இடங்களுக்கும் அமலாக்கத்துறையினர் சோதனைக்காக சென்றனர். ஆனால் பூட்டிக்கிடந்ததால், திரும்பி குடோனுக்கே வந்துவிட்டனர். அதேபோல, போடியை சேர்ந்த ஏலக்காய் வியாபாரியான சுந்தர் ராஜன், என்பவரது வீடு மற்றும் ஏலக்காய் விற்பனை கடையிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
ரூ.1,200 கோடி ஏலக்காய் வர்த்தகம்
ஏலக்காய் வர்த்தகம் செய்ததில், வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரின் பேரில் இந்த சோதனை நடைபெற்றதாக சொல்லப்படுகிறது. திமுக நிர்வாகி வீட்டில் நடைபெற்ற இந்த சோதனை தேனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் கடந்த 7 மாதத்தில் ரூ.1, 200 கோடி அளவுக்கு ஏலக்காய் வர்த்தகம் செய்திருந்தது கண்டறியப்பட்டது.
இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. அதிகாரிகள் ஆவணங்களை கைப்பற்றி தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். இதில் கிடைத்த தகவலின் அடிப்படையில் போடியில் கடந்த 4 ஆம் தேதி முதற்கட்ட சோதனை நடைபெற்றது" என்று தெரிவித்தனர். நேற்று மாலை தொடங்கிய சோதனை இன்றும் தொடர்ந்து நடைபெற்றது வருவதாக கூறப்படுகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications