ஆட்டம் ஆரம்பம்.. ‘வேலையை காட்டும் தீர்ப்பு’ வீட்டுக்கு போனதுமே ஓபிஎஸ்-க்கு செம நியூஸ்.. ஈபிஎஸ் ஷாக்!
தேனி : அதிமுக பொதுக்குழு வழக்கின் தீர்ப்பு, ஓ.பன்னீர்செல்வம் தரப்பை உற்சாகம் கொள்ளச் செய்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி பக்கமிருந்து சிலர் ஓபிஎஸ் பக்கம் தாவியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
அதிமுக பொதுக்குழு வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைத்த நிலையில், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தனது சொந்த ஊரான பெரியகுளத்திற்குச் சென்றுள்ளார்.
அங்கு ஓபிஎஸ் ஆதரவாளர்கள், அவருக்கு பிரமாண்ட வரவேற்பை அளித்தனர். இதைத்தொடர்ந்து முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார் ஓபிஎஸ்.
தொடர்ந்து, பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளும் ஓபிஎஸ்ஸை சந்தித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் ஓபிஎஸ்ஸை அவரது வீட்டில் சந்தித்துள்ளனர்.

அடுத்தகட்ட ஆலோசனை
அதிமுக பொதுக்குழு செல்லாது, ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் தொடரும் என சென்னை உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின் மூலம், எடப்பாடி பழனிசாமி இடைக்காலப் பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டது செல்லாததாகியுள்ளது. இந்த நிலையில், ஓபிஎஸ் ஈபிஎஸ் இருதரப்பிலும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து மிகத் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

கேவியட் மனு
இந்நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி, சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்துள்ள நிலையில் இந்த வழக்கில் தன் தரப்பு வாதத்தை கேட்ட பிறகே உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.

சொந்த ஊர் சென்ற ஓபிஎஸ்
ஈபிஎஸ்ஸால் நடத்தப்பட்ட பொதுக்குழு கூட்டம் செல்லாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் இருந்து தனது சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளத்திற்கு வருகை தந்துள்ளார். அவர் 3 நாட்கள் தனது வீட்டில் இருந்து முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனைகளை நடத்த இருப்பதாகக் கூறப்படுகிறது.

வழிநெடுக வரவேற்பு
சென்னையில் இருந்து மதுரை வந்து, மதுரையில் இருந்து காரில் பெரியகுளம் வந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு அதிமுகவினர் பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். பெருமாள் கோவில் முதல் அவரது வீடு வரை வழிநெடுக சாலையின் இருபுறமும் பெண்கள் நின்று மலர் தூவி ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். கட்சி நிர்வாகிகள் அவருக்கு மாலை அணிவித்து, வீரவாள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

ஆதரவாளர்களுடன் ஆலோசனை
பின்னர் வீட்டுக்கு வந்த ஓ.பன்னீர்செல்வத்துடன், அவரது ஆதரவாளர்களான முக்கிய நிர்வாகிகள் சந்தித்துப் பேசினர். அப்போது, ஐகோர்ட் தீர்ப்பு பற்றியும், தான் இணக்கமாகச் செயல்பட அழைப்பு விடுத்ததற்கு எடப்பாடி பழனிசாமியின் கருத்து பற்றியும் தனது ஆதரவாளர்களிடம் ஆலோசித்துள்ளார் ஓபிஎஸ். தொடர்ந்து, பல்வேறு தென் மாவட்டங்களைச் சேர்ந்த ஓபிஎஸ் ஆதரவாளர்களும், அவரை சந்தித்துப் பேசினர்.

திண்டுக்கல் மாவட்ட புள்ளி
எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளராக இருந்த திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஓ.பன்னீர்செல்வத்தை அவரது வீட்டில் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார். இது திண்டுக்கல் மாவட்ட அதிமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆட்டம் ஆரம்பம்
எடப்பாடி பழனிசாமி தரப்பு பொதுக்குழுவை நடத்தத் திட்டமிட்டபோது, ஓபிஎஸ் தரப்பில் இருந்து பெருவாரியான முக்கிய நிர்வாகிகள் ஈபிஎஸ் பக்கம் தாவினர். இப்போது, பொதுக்குழு செல்லாது என தீர்ப்பு வந்திருக்கும் நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து ஓபிஎஸ் பக்கம் நிர்வாகிகள் தாவத் தொடங்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈபிஎஸ் அப்செட்
பொதுக்குழு வழக்கு ஏற்படுத்திய பாதிப்பால் இன்னும் பலரும் ஓபிஎஸ் பக்கம் தாவக்கூடும் எனக் கிடைத்திருக்கும் தகவலால் எடப்பாடி பழனிசாமி அப்செட் ஆகியுள்ளார். தனது ஆதரவாளர்களான முக்கிய நிர்வாகிகளிடம், யாரையும் அணி மாறிச் செல்ல விடக் கூடாது, விரைவில் தீர்ப்பு நமக்குச் சாதகமாகத் திரும்பும் எனக் கூறி வருகிறாராம்.
-
பனையூர் பக்கம் திரும்பும் ரராக்கள்.. காலியாகும் அதிமுக கூடாரம்? எடப்பாடி பழனிசாமி முக்கிய மீட்டிங்! -
“எந்த ரீல்ஸ் மூலம் தவெக வென்றதோ அதன் மூலமே நாமும் வெற்றி பெறுவோம்”.. அதிமுகவினருக்கு எடப்பாடி ஆர்டர் -
அவர் வரலாறு தெரியுமா.. சந்தர்ப்பவாத அரசியல்வாதி.. ஆதவ் அர்ஜுனாவை வெளுத்த கேபி முனுசாமி -
பனையூரில் மெகா சம்பவம் ரெடி.. முதல்வர் விஜய்யின் பிறந்தநாளில் தவெகவில் இணையும் மாஜி அமைச்சர்கள்! -
களத்தில் இறங்கிய எடப்பாடி.. தவெக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு! -
சனிக்கிழமை தோறும் ஆள்பிடிக்கும் விஜய்.. அதிமுக மாஜி அமைச்சர் ஆர்பி உதயகுமார் கடும் டென்ஷன் -
ராஜினாமா செய்து தவெகவில் சேர்ந்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சிக்கல்.. நோட்டீஸ் அனுப்பியது ஏன்? சபாநாயகர் விளக்கம் -
திமுகவின் கோட்டையை சிதறடித்த தவெக.. சென்னை அதிமுக நிர்வாகிகளை தூக்கும் அறிவாலயம்.. பின்னணி! -
கருகுது இரட்டை இலை.. திமுகவுக்கு தாவும் சி.விஜயபாஸ்கர்? பெரிய பொறுப்புடன் வரவேற்கும் மு.க.ஸ்டாலின்! -
“தீயசக்தி, தீர்ந்துபோன சக்தி.. கூப்புக்காலம் கூடிக்கொண்டே போகும்” - திமுக, அதிமுகவுக்கு தவெக பதிலடி! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications