தேனி குளக்கரையில் அலங்கோலமாக கிடந்த பிரவீனா! பெற்ற மகளையே இப்படியா? தந்தை எடுத்த கொடூர முடிவு

Subscribe to Oneindia Tamil

தேனி: தேனி மாவட்டம், போடியில் இளம்பெண் சந்தேக மரணத்தில் திடீர் திருப்பமாக அவரது தந்தையைப் போலீசார் கைது செய்துள்ளனர். மகள் பலருடன் திருமண கடந்த உறவில் இருந்ததால், தந்தையே அவரைக் கொலை செய்து உடலைக் குளத்தில் வீசிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

தேனி மாவட்டம் போடியில் நேற்று முன்தினம் பங்காருசாமி குளம் தெற்கு குளக்கரையில் இளம் பெண் சடலமாக இருப்பதாக போடி தாலுகா காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இளம் பெண்ணின் சடலத்தை மீட்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

இளம் பெண்ணின் அருகாமையில் தென்னை மர விஷ மாத்திரை இருந்த நிலையில் பெண் தற்கொலை செய்து கொண்டதாகப் பொதுமக்கள் நம்பிய நிலையில், காவல்துறையினர் பெண்ணின் கழுத்தில் உள்ள காயங்களைக் கண்டு சந்தேக மரணம் பதிவு செய்து விசாரணை தொடங்கினர்.

Father Kills Daughter

தேனி கொலை

விசாரணையில் அந்தப் பெண் சின்னமனூர் மார்க்கையன்கோட்டையைச் சேர்ந்த தங்கையா மகள் பிரவீனா என்பது தெரியவந்தது. திருமணம் முடிந்து ஒரு ஆண் குழந்தை இருந்த நிலையில் குழந்தையைத் தந்தையிடம் விட்டுவிட்டு, போடி முந்தலைச் சேர்ந்த மாசுகாளை என்பவருடன் கடந்த 10 வருடங்களாகக் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தது தெரியவந்தது. இருவருக்கும் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ள நிலையில் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.

பிரவீனா மரணம்

இந்நிலையில் பிரவீனா திருப்பூரில் உள்ள ஒரு நபரிடம் பழக்கம் ஏற்பட்டு அவரிடம் தொடர்ச்சியாகப் பழகி வந்துள்ளார். இதனை அறிந்த காதலன் மாசுகாளை உன்னைக் கொன்று விடுவேன் எனச் சண்டையிட்டு வெளியூர் சென்றுள்ளார். இந்நிலையில் பிரவீனா தனது தந்தை தங்கையாவிடம் தன்னைக் காதலன் மாசுகாளை அடித்துத் துன்புறுத்துவதாகவும் தன்னைக் காப்பாற்ற வேண்டுமெனக் கூறியுள்ளார். மேலும் பிரவீனா திருப்பூரில் உள்ள ஒரு நபரை காதலிப்பதும் அவருக்குத் தெரிய வந்துள்ளது. இதனால் மிகுந்த கோபத்துக்கு ஆளான தந்தை தங்கையா தனது மகள் பிரவீனாவைக் கொலை செய்யத் திட்டம் தீட்டினார்.

தந்தை கைது

தங்கையா, தனது மகன் திருமணம் தடைப்பட்டதற்கு காரணம் தனது மகள் பிரவீனாவின் முறையற்ற காதல் தான் என்று கோபத்தில் இருந்த நிலையில் மகளை கொன்றுவிட வேண்டும் என முடிவு செய்து இருசக்கர வாகனத்தில் மார்க்கையன்கோட்டையில் இருந்து முந்தல் காலனிக்கு சென்று தனது மகள் பிரவீனாவை அழைத்துக் கொண்டு, திருப்பூருக்கு தேனியில் இருந்து பேருந்து மூலம் அனுப்பி வைப்பதாக கூறி இரண்டு தினங்களுக்கு முன்பாக இரவு 11 மணி அளவில் தேனி நோக்கி அவரை அழைத்துச் சென்றுள்ளார்.

அதிர்ச்சி திருப்பம்

போடி சாலை காளியம்மன் கோவில் அருகே உள்ள பங்காரு சாமி குளத்தின் கரையில் இருசக்கர வாகனத்தை மேலே ஏற்றிச் சென்ற தங்கையா தான் மறைத்து வைத்திருந்த தென்னைமர விஷ மாத்திரையை கரைத்து வலுக்கட்டாயமாக மகள் பிரவீனாவின் வாயில் ஊற்றியுள்ளார். பிரவீனா மருந்தை உட்கொள்ள மறுத்து தப்பிச்செல்ல முயற்சித்த நிலையில் தங்கையா தனது மகளின் துப்பட்டாவை பிடுங்கி கழுத்தை சுற்றி நெரித்துக் கொலை செய்துள்ளார்.

தல் உறவு

தனது மகளை கொலை செய்த நிலையில் அவர் தற்கொலை செய்த மாதிரி மாத்திரைகளை ஆங்காங்கே வைத்துவிட்டு அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளார். மறுநாள் காலையில் காவல்துறையினர் பிரவீனாவின் பிரேதத்தைக் கைப்பற்றி சந்தேக மரணம் வழக்கு பதிவு செய்து விசாரணையில் இறங்கினர். காதலன் மாசுகாளையை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் பிரவீனாவிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்ட திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட ஒரு இளைஞரை கைது செய்து விசாரணை நடத்த முயன்றனர். அப்போது அந்த இளைஞரின் உறவினர்கள், பிரவீனாவின் தந்தைதான் இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றார்.

போலீஸ் விசாரணை

எதற்கு திருமணம் நிச்சயம் செய்த இந்த இளைஞரை கைது செய்து செல்கிறீர்கள் என வாக்குவாதம் செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து காவல்துறையினருக்கு பிரவீனாவின் தந்தை தங்கையா மீது சந்தேகம் ஏற்பட்டு அவரைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தன் மகள் பிரவீனாவை கொலை செய்ததை தங்கையா ஒப்புக்கொண்டார். கொலை நடந்த 24 மணி நேரத்தில், பெண்ணைத் தந்தையே கொலை செய்திருப்பதை உறுதி செய்த காவல்துறையினர் தங்கையாவைக் கைது செய்து வழக்கு பதிவு செய்து அவரைச் சிறையில் அடைத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+