Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முழு கொள்ளவை நெருங்கும் வைகை அணை.. 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாயம்! தொடர்ந்து அதிகரிக்கும் நீர்வரத்து

Subscribe to Oneindia Tamil

தேனி: வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக அணையின் நீர் வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் வைகை ஆற்றின் கரையோரம் உள்ள தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாண்டஸ் புயல் காரணமாக தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்தது. இதனையடுத்து புயல் மாமல்லபுரத்தில் கரையை கடந்து கேரளா வழியாக பயணித்து அரபி கடலில் கலந்தது.

இந்த புயல் கடந்து சென்ற பாதையில் விட்டு சென்ற மழை மேகங்கள் தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் மழையை உருவாக்கியது. இந்நிலையில் தேனியில் பெய்த கனமழை காரணமாக வைகை அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

நீர் வரத்து

நீர் வரத்து

நேற்று அதிகாலை தொடங்கி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வந்துள்ளது. இதன் காரணமாக வைகை ஆற்றின் மூல ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அணையின் 71 அடி கொள்ளவில் நேற்றிரவு நிலவரப்படி 66 அடி வரை நீர் மட்டம் உயர்ந்திருக்கிறது. இது 69 அடியை தொடும்போது அணை முழு கொள்ளளவை எட்டியதாக கருதி உபரிநீர் திறக்கப்படும். தற்போது மழையின் காரணமாக நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மூல வைகை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ள பெருக்கு காரணமாக அணைக்கு விநாடிக்கு 3 ஆயிரம் கனஅடி அளவில் நீர் வந்துகொண்டிருக்கிறது.

வெள்ள அபாயம்

வெள்ள அபாயம்

இதன் காரணமாக வைகை ஆற்றின் கரையோரம் உள்ள தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல அணையின் நீர்மட்டம் 68.5 அடியை எட்டும்போது இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும், 69 அடியை எட்டும்போது மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்படும். அதன் பின்னர் அணைக்கு வரும் நீர் முழுவதும் அப்படியே உபரி நீராக வெளியேற்றப்படும்.

லேசான மழை

லேசான மழை

இன்று தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால் தமிழ்நாட்டில் அடுத்த நான்கு நாட்களுக்கு பரவலாக மழை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பல்வேறு அணைகளின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இன்று தமிழ்நாடு மட்டும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்த அளவில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூறாவளிக்காற்று

சூறாவளிக்காற்று

அதேபோல மீனவர்களுக்கான எச்சரிக்கையை பொருத்த அளவில், மத்திய கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் மணிக்கு 45-55 கி.மீ வேகத்தில் சூறாவளிக்காற்று வீசும் என்பதாலும், அந்தமான் கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் சூறாவளிக்காற்று 40-55 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் இப்பகுதிக்கு செல்வதை மீனவர்கள் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+