தேனி மக்களின் பல வருட கனவு.. திண்டுக்கல்-சபரிமலை இடையே புதிய ரயில் பாதை திட்டம் நிறைவேறுது
தேனி: திண்டுக்கல்லில் இருந்து சபரிமலைக்கு ரயில் பாதை அமைக்க வேண்டும் என்பது தேனி, திண்டுக்கல் மற்றும் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த பொது மக்களின் நீண்டகால கனவு ஆகும். இந்த கனவிற்கு அவ்வப்போது புத்துயிரூட்டும் சம்பவங்கள் நடைபெறுவது உண்டு. அதன்படி இப்போது புத்துயிர் பெற்றுள்ளது. திண்டுக்கல்-சபரிமலை இடையே புதிய ரயில் பாதை அமைப்பதற்கான ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதனால் 3 மாவட்ட பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திண்டுக்கல்லில் இருந்து சபரிமலைக்கு ரயில் பாதை அமைக்க வேண்டும் என்பது தேனி, திண்டுக்கல் மற்றும் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த பொது மக்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது. அதாவது திண்டுக்கல்-சபரிமலை அகல ரயில் பாதை திட்டத்திற்காக கடந்த 60 ஆண்டுகளாக தொடர்ந்து கோரிக்கை உள்ளது. ஆண்டுதோறும் சுமார் 1.5 கோடி பக்தர்கள் சபரிமலைக்கு வரும் நிலையில், மாதந்தோறும் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வருகை தருகிறார்கள். ரயில்வேக்கு பெரும் வருமானத்தைத் தரக்கூடிய இந்த திட்டத்தை இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை..

இதன் காரணமாக சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சீசன் காலங்களில் தேனி வழியாக பல்லாயிரக்கணக்கான வாகனங்களில் பக்தர்கள் வந்து செல்வது தொடர்கிறது. திண்டுக்கல்-சபரிமலை ரயில் பாதை திட்டம் செயல்படுத்தப்பட்டால் பக்தர்கள் நலனுக்கும், இருமாநிலங்களுக்கு இடையிலான சரக்கு மற்றும் மக்கள் போக்குவரத்துக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் இருமாநில மக்களுமே தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்கள். குறிப்பாக திண்டுக்கல், தேனி, இடுக்கி(கேரளா) ஆகிய மாவட்ட மக்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். இதற்காகவே தேனி மாவட்டத்தில் திண்டுக்கல்-குமுளி அகல ரயில் பாதை திட்ட போராட்டக்குழு தொடங்கப்பட்டு பல ஆண்டுகளாக தொடர் போராட்டங்களும் நடத்தி வருகிறார்கள்.
தற்போதைய சூழலில் சபரிமலை வரை ரயில் பாதை அமைப்பது சாத்தியமில்லையெனில், குறைந்தது திண்டுக்கல் முதல் பம்பை வரை, அல்லது லோயர் கேம்ப் வரை அகல ரயில் பாதையை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை மக்கள் தொடர்ந்து எழுப்பி வந்தனர்.
இதுபற்றி ஒருமுறை பதில் அளித்த ரயில்வே அதிகாரிகள், சபரிமலை வரையிலான பாதை அமைப்பதற்காக மத்திய வனத்துறையின் அனுமதி தேவைப்படுகிறது. இதனால் சாத்தியக்கூறு குறைவாக உள்ளது எனறும் தற்போது திண்டுக்கல்-பம்பை பாதைக்கான ஆய்வு நிறைவடைந்துள்ளது என்றும் வரும் ஆண்டில் திட்ட அனுமதிக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறியிருந்தனர்.
இந்தநிலையில் தான் திண்டுக்கல்-சபரிமலை இடையே புதிய ரெயில் வழித்தடம் அமைக்கவும் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. திண்டுக்கல்-சபரிமலை இடையே சுமார் 201 கி.மீ. தூரம் ரயில்பாதை அமைப்பதற்கு ஆய்வுப் பணிகள் மேற்கொள்ள ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் குமுளியில் இருந்து சபரிமலைக்கு 106 கி.மீ. தூரம் ரயில் பாதை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வதற்கும் ரூ.16 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
தேனி சாக்கலூத்து மெட்டில் தங்கம் தந்த சர்ப்ரைஸ்.. கேரளாவிற்கு 4வது பாதை.. 44 வருட கனவு நிறைவேறுது?
இதுதொடர்பாக தேனி எம்.பி. தங்கதமிழ்செல்வன் தனது 'எக்ஸ்' சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறுகையில், 'திண்டுக்கல்-சபரிமலை இடையே புதிய வழித்தடம் அமைக்க வேண்டும் என்று தேனி மாவட்ட மக்களின் 100 ஆண்டு கால கோரிக்கையின் பொருட்டு நாடாளுமன்ற மக்களவையில் இடைவிடாது முன்வைத்த எனது வேண்டுகோளின் காரணமாக திண்டுக்கல்-சபரிமலை இடையே அமைக்கப்படவுள்ள புதிய ரயில் போக்குவரத்து குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது' என்று கூறியுள்ளார். ரயில்வேயின் இந்த அறிவிப்பை தேனி மாவட்ட மக்கள் வரவேற்றுள்ளனர்.
-
நடுவழியில் நாகர்கோவில் வந்தே பாரத்.. மதுவில் மயங்கிய நாங்குநேரி கேட் கீப்பர்கள்.. கடைசியில் ட்விஸ்ட் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா?












Click it and Unblock the Notifications