Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தேனியில் தங்க நகை அடகு கடை நடத்தும் பெண் குடும்பம்.. குழந்தையின் சின்ன தவறால் ரூ.24 லட்சம் காலி

Subscribe to Oneindia Tamil

தேனி: தேனி மாவட்டம் தேவாரம் பகுதியில் பலசரக்கு கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார் ஒருவர். அவரது மனைவி நகை அடகு கடை வைத்து நடத்தி வருகிறார். இவர்கள் வங்கிக் கணக்கு தொடர்பாக ஆப்களை செல்போனில் பதிவிறக்கம் செய்து வைத்துள்ளனர். அவர்கள் பயன்படுத்தி வந்த 3 வங்கிக் கணக்குகளில் இருந்து, மொத்தம் ரூ.24 லட்சத்து 69 ஆயிரத்து 600 அபேஸ் செய்யப்பட்டிருந்தது.. எப்படி என்று விசாரித்த போது,குழந்தைகள் பதிவிறக்கம் செய்த ஒரு செல்போன் செயலி பணம் திருடப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக பீகார் வாலிபர் அர்ஜுன் குமார் கைது செய்யப்பட்டார். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

குழந்தைகளுக்கு செல்போனை தரும் முன்பு கேம் டவுன்லோடு செய்வதற்கு வசதியுள்ள பிளே ஸ்டோர்களுக்கு பாஸ்வேர்டு போட்டு கொடுங்கள்.. இல்லை என்றால், செல்போனையே குழந்தைகளுக்கு கொடுக்காதீர்கள். குழந்தைகள் ஆண்ட்ராய்டு பிளே ஸ்டோரில் டவுன்லோடு செய்த ஹேம் காரணமாக பல லட்சம் பணத்தை பெற்றோர் இழந்துள்ளனர். குழந்தைகள் அவர்களுக்கே தெரியாத விளையாட்டுகளை டவுன்லோடு செய்தால் பல பெற்றோர் பணத்தை இழந்து வருகிறார்கள். அந்த வகையில் தான் தங்க நகை அடகு கடை நடத்தும் பெண் குடும்பத்தில் என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

theni money

தேனி மாவட்டம் தேவாரம் பகுதியை சேர்ந்த 42 வயது நபர் ஒருவர், பலசரக்கு கடை வைத்திருக்கிறார். அவருடைய மனைவி, தேவாரம் பகுதியில் நகை அடகு கடை ஒன்றை வைத்து வைத்திருக்கிறார் . கணவன், மனைவி இருவருமே வணிகம் செய்து வருவதால், இவர்கள் 2 பேரும், தனித்தனியாக ஆன்டிராய்டு வசதியுள்ள செல்போன்களை பயன்படுத்தி வந்ததுடன், வாடிக்கையாளர்கள் அனுப்பும் பணத்தை செல்போன்களில் உள்ள வங்கு கணக்கு ஆப்களின் மூலம் அவ்வப்போது கண்காணித்து வந்துள்ளார்கள். இதற்காக தங்களின் வங்கிக் கணக்கு தொடர்பான செயலிகளை செல்போனில் பதிவிறக்கம் செய்து வைத்திருக்கிறார்கள்.

இந்நிலையில் அவர்களுடைய குழந்தைகள் அடிக்கடி செல்போன்களை எடுத்து வீடியோ பார்ப்பது, விளையாடுவது வழக்கமாக வைத்துள்ளார்கள். மளிகை வியாபாரி தனது வங்கிக் கணக்கு இருப்பு மற்றும் மனைவியின் வங்கிக் கணக்கு இருப்பு விவரங்களை 3 மாதங்களுக்கு ஒருமுறை வங்கிக் சென்று சரிபார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.

அதன்படி கடந்த ஆண்டு இவர், வங்கிக்கு சென்று இருப்பு விவரங்களை சரிபார்த்துள்ளனர். அப்போது அவர்கள் பயன்படுத்தி வந்த 3 வங்கிக் கணக்குகளில் இருந்து, மொத்தம் ரூ.24 லட்சத்து 69 ஆயிரத்து 600 அபேஸ் செய்யப்பட்டிருந்தது. இதனையறிந்த அவர் ஆடிப்போனார்.

பணம் எங்கே சென்றது என்ற விவரங்களை சரிபார்த்த போது, பல்வேறு புதிய வங்கிக் கணக்குகளுக்கு பல்வேறு தவணையாக பணம் சென்று இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அந்த வியாபாரி தேனி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தாமரைக்கண்ணன் வழக்குப்பதிவு செய்தார். போலீசார் நடத்திய விசாரணையில், குழந்தைகள் பதிவிறக்கம் செய்த ஒரு செல்போன் செயலி மூலம், மர்ம நபர்கள் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை அபேஸ் செய்து இருப்பது தெரியவந்தது.

இந்த நூதன முறையிலான பணம் பறிப்பில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்க, சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் வெங்கடாச்சலம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார், பணம் பரிமாற்றம் நடந்த மர்ம நபர்களின் 9 வங்கிக் கணக்கு விவரங்களை வைத்து விசாரணை நடத்தி வந்தார்கள்.

அதில், ஒரு வங்கிக் கணக்கு பீகார் மாநிலம் பாட்னா அருகே பண்டாரக் பகுதியை சேர்ந்த ஜோகி மஹ்தோ மகன் அர்ஜூன்குமார் (22) என்பவரின் பெயரில் இருந்தது. அவரை போலீசார் தேடி வந்தார்கள், அவர் பெங்களூரு பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து தனிப்படையினர் பெங்களூர் சென்றனர். அங்கு அர்ஜூன்குமாரை போலீசார் கைது செய்தனர். 12ம் வகுப்பு படித்துவிட்டு அவர் கட்டுமான தொழில் செய்து வந்திருக்கிறார். மேலும், அவர் தனது பெயரில் தொடங்கிய வங்கிக் கணக்கு விவரங்கள், செல்போன் சிம் கார்டு ஆகியவற்றை இந்த மோசடி செய்யும் கும்பலுக்கு கொடுத்து அதற்கு கமிஷன் தொகை பெற்றிருப்பது தெரியவந்தது.

இதேபோல் பீகாரை சேர்ந்த அவருடைய நண்பர்கள் சிலரும் இதுபோன்ற மோசடி கும்பலுக்கு செல்போன், வங்கிக் கணக்கு விவரங்களை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.. இதையடுத்து அர்ஜூன்குமாரை தேனிக்கு போலீசார் நேற்று அழைத்து வந்தனர். அவரை தேனி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி தேக்கம்பட்டியில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்தனர். அவருடைய நண்பர்கள் 2 பேர் உள்பட இந்த கும்பலில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் தேடி வருகிறார்கள்.

குழந்தைகள் சாப்பிடுவதற்காக செல்போன் தரும் பெற்றோர், கேம் டவுன்லோடு செய்வதை மறந்தும் அனுமதித்து விடாதீர்கள், இல்லா விட்டால் பணத்தை இழந்து பரிதவிக்கும் நிலை ஏற்படும். ஏனெனில் தேனியில் நடந்தது போல் பல ஊர்களில் நடந்து வருகிறது. வறுமையில் உள்ள சில வடமாநில ஏழைகளின் வங்கி கணக்கு உள்ளிட்ட அடையாளங்களை தவறாக பயன்படுத்துவது நடக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+