Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தொழுவத்தில் ஒரே இடத்தை சுற்றி சுற்றி வந்த தேனி மாடுகள்.. நந்தகோபாலன் தம்பிரான் காளை தந்த நெகிழ்ச்சி

Subscribe to Oneindia Tamil

தேனி: தமிழகம் முழுவதும் மாட்டுப் பொங்கல் விழா நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் தமிழகத்தின் சில மாவட்டங்களில் நடந்த மாட்டுப்பொங்கல் விழாவானது, பொதுமக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.. இது தொடர்பான வீடியோக்களும் சோஷியல் மீடியாவில் வைரலாகி கொண்டிருக்கின்றன.. அப்படி என்ன நடந்தது?

விவசாயிகளுக்கு தைப்பொங்கலை விட மாட்டுப் பொங்கல் அதிக பிரசித்தி பெற்றுள்ளது. மக்கள் மாடுகளை அலங்காரம் செய்து, கொம்புகளில் பெயிண்ட் போட்டனர். மேலும், மாடுகளுக்கும் தொழுவங்களுக்கும் தோரணைகள் கட்டி, மலர் மாலைகளால் அலங்கரித்து, சிறப்பு பூஜை செய்து மாடுகளை தெய்வமாகக் கருதி வழிபட்டனர். மாடுகளுக்கு பொங்கல், கரும்பு போன்ற உணவுகளை வழங்கி மகிழ்வித்து, சிறப்பு மரியாதை செலுத்தினர்.

Theni Mattu Pongal Nandhagopalan Thambiran Bull

இதில், ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பர்கூர் மேற்கு மலைப் பகுதியில் உள்ள ஆல சொப்பனட்டி கிராமத்தில் இன்று மாட்டுப் பொங்கல் சிறப்புடன் கொண்டாடப்பட்டது.

புகழ்பெற்ற பசுவேஸ்வரர் கோவிலில், பக்தர்கள் தங்கள் கால்நடைகளை குளிப்பாட்டி, அவற்றை தீ மிதிக்க விட்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட கால்நடைகள் கொழுந்து விட்ட தீயைக் கடந்து சென்றன. இதைத் தொடர்ந்து, கால்நடை வளர்ப்போர் தங்கள் கால்நடைகளுக்குப் பொங்கல் வைத்து சாமிக்கு படைத்து மகிழ்ந்தனர்.

5 டன் செங்கரும்பு தேர்

காஞ்சிபுரத்தில் பொங்கல் பண்டிகையை வித்தியாசமாக கொண்டாட, கீழ்கதிர்பூர்‑குண்டுகுளத்தைச் சேர்ந்த விவசாயி செந்தில்குமார் 5 டன் எடையுள்ள செங்கரும்பால் ஒரு பிரம்மாண்ட தேரை தயாரித்து கிராமத்தினருடன் பொங்கல் விழாவை கொண்டாடியுள்ளார்.

தேரின் உயரம் 21 அடி, அகலம் 10 அடி, நீளம் 12 அடி. தேரின் அனைத்து பகுதிகளும் செங்கரும்பிலேயே தயாரிக்கப்பட்டது. பொங்கல் பண்டிகைக்காக கிராம மக்கள் அனைவரும் பார்க்க இத்தேரை 17 நாட்கள் இடத்தில் வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பிறகு கரும்பை பிரித்து கிராமத்தினருக்கு வழங்குவார்கள். செந்தில்குமார் ஒவ்வொரு பொங்கலிலும் விவசாயம் மற்றும் பொங்கல் சார்ந்தவற்றை செங்கரும்பால் வடிவமைத்து மகிழ்ச்சியோடு கொண்டாடுவதாக கூறியுள்ளார்.

மாட்டுத் தொழுவத்தில் காளைகள்

அதேபோல தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள நந்தகோபாலன் தம்பிரான் மாட்டுத்தொழுவத்தில் இந்த ஆண்டு மாட்டுப் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் இளங்கன்றுகள், காளைகள், பசு மாடுகள் மற்றும் விவசாயத்தில் உழுதுப் பயன்படும் மாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, அவர்களுக்கு மரியாதை செலுத்தி கொண்டாடப்பட்டது.

இந்த மாட்டுத்தொழுவத்தில் வளர்க்கப்படும் மாடுகள் பல நூற்றாண்டுகளாக பகுதி மக்களால் பராமரிக்கப்படுகின்றன; இறந்த மாடுகள் அங்கேயே புதைக்கப்படுவதும் வழக்கமாக இருக்கிறது.

ராஜகாளை - நந்தகோபாலன் தம்பிரான்

விழாவில், 'ராஜகாளை' என அழைக்கப்படும் பட்டத்துக்காளையை தேர்ந்தெடுத்து அதற்கு சிறப்புப் பெயர் சூட்டி, சிறப்பு மரியாதை வழங்கப்பட்டது. இந்த பட்டத்துக்காளை மாட்டுப் பொங்கல் நாளில் அரசனுக்கு வழங்கப்படும் மரியாதையைப் போல, ஆண்டு தோறும் விழாவில் முன் வைக்கப்படுகிறது. இந்த நிகழ்வில் கம்பம் பகுதியே மட்டும் இல்லாமல் சுற்று கிராமங்கள் மற்றும் நகர்ப்புறங்களிலிருந்தும் மக்கள் கலந்துகொண்டு மாடுகளை வழிபட்டு, விழாவிற்கு சிறப்பு அளித்தனர்.

தேனி சித்தார்பட்டி கிராமம்

சித்தார்பட்டி கிராமம் மாடு வளர்ப்புத் தொழிலுக்கு பெயர்பெற்றது. இங்கு வாழும் மக்கள் நூற்றுக்கும் மேற்பட்ட மாடுகளை வேறு பகுதிகளுக்கு மேய்ச்சலுக்காக அனுப்பி, அதன் மூலம் வாழ்வாதாரத்தை தேடிகொள்கிறார்கள்..

எனவேதான் மாட்டுப் பொங்கல் தினத்தில் கிராம மக்கள் அனைவரும் சேர்ந்து மாடுகளுக்கு சிறப்பு பூஜை நடத்துகிறார்கள்.. இதனால் இக்கிராமத்தில் தைப்பொங்கலை விட மாட்டுப் பொங்கல் அதிகம் பிரசித்தி பெற்றுள்ளது.

ஒரே நிறத்தில் டிரஸ்

அந்தவகையில் நேற்றைய தினமும் கிராம மக்கள் மாடுகளுக்கும் தொழுவங்களுக்கும் தோரணைகள் கட்டி, மலர் மாலைகளால் அலங்கரித்து, மாடுகளை தெய்வமாகக் கருதி வழிபட்டனர். மாடுகளுக்கு பொங்கல் மற்றும் கரும்பு வழங்கி மகிழ்வித்தனர். அதன் பிறகு நூற்றுக்கும் மேற்பட்ட மாடுகளை ஒரே தொழுவத்தில் அடைத்து, முன் பொங்கல் வைத்து சிறப்பு பூஜை செய்து மரியாதை செலுத்தினர்.

விழாவில், ஊர்மக்கள் பறை மற்றும் மணியடித்து மாடுகளை ஒரே நேரத்தில் மேய்ச்சலுக்கு திறந்ததும், பாய்ந்து வந்த மாடுகளை பார்த்து மகிழ்ச்சி கூச்சலிட்டனர். ஊர்மக்கள் அனைவரும் ஒரே நிறத்தில் அலங்கரித்து, பெண்கள் புடவை, இளைஞர்கள் டி-ஷர்டில் கலந்து, பொங்கல் மகிழ்ச்சியை உற்சாகமாக கொண்டாடியது காண்போரை வெகுவாக கவர்ந்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+