அனைவருக்கும் ஒரே சுடுகாடு இருக்கா? அப்புறம் ஏன் பொது சிவில் சட்டம்? மத்திய அரசால் கண்சிவந்த சீமான்
தேனி: அனைவருக்கும் ஒரே சுடுகாடு, ஒரே கோவில் இருக்கிறதா? அப்புறம் எதுக்கு பொது சிவில் சட்டம் கொண்டு வருகிறார்கள் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி மாநிலம் முழுவதும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். மாவட்டம் வாரியாகவும், தொகுதிகள் வாரியாகவும் சீமான் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

மேலும் பொதுக்கூட்டங்களிலும் பேசி வருகிறார். அதன்படி இன்று தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி, பெரியக்குளம், போடி, கம்பம் சட்டசபை தொகுதிகளில் கட்சியின் உள்கட்டமைப்பை சீமான் மறுசீராய்வு செய்தார். அதன்பிறகு பொதுக்கூட்டத்தில் அவர் பேசினார். மேலும் பத்திரிகையார் சந்திப்பையும் சீமான் நடத்தினார்.
இந்த வேளையில் மத்திய அரசின் பொது சிவில் சட்டத்துக்கு சீமான் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்த விஷயத்தில் அவர் மத்திய அரசை கடுமையாக சாடினார். இதுதொடர்பாக சீமான் கூறியதாவது: இந்தியா விடுதலையாகி 75 ஆண்டுகள் ஆகவிட்டது. தற்போது இருக்கும் சட்டத்தால் எந்த பிரச்சனையாவது வந்துள்ளதா? அமைதி இறையாண்மை, தேச ஒற்றுமை என எதற்காவது பிரச்சனை இருக்கிறதா?. எதுவும் இல்லை. இத்தகைய சூழலில் பொது சிவில் சட்டம் தேவையா?.
நாட்டில் கல்வி, மருத்துவம், மின்உற்பத்தி, சாலைபோடுதல், தொழில் வளர்ச்சி, பொருளாதார மேம்பாடு உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்தலாம். ஆனால் அதனை விட்டுவிட்டு ஒரே சட்டம், ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு, ஒரே ரோடுனு கவனம் செலுத்துறாங்க. எங்காவது ஒரே சுடுகாடு இருக்கிறதா? ஒரே குளம் இருக்கிறதா? ஒரே கோவில் உள்ளதா?.
உங்களுக்கும் சிவன், எனக்கும் சிவன். ஆனால் நீங்கள் பூரி ஜெகன்நாதர் கோவிலில் நாட்டின் முதல் குடிமகனான குடியரசு தலைவரை உள்ளே விடவில்லை. அதேபோல் இப்போது டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டடம் திறப்பு விழாவின்போது குடியரசு தலைவர் திரெளபதி முர்முவை விடவில்லை. இத்தகைய சூழலில் பொது சிவில் சட்டத்தால் நாட்டுக்கு என்ன பயன்?.
மேலும் பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வந்துள்ள நிலையில் எப்படி பொது சிவில் சட்டம் மூலம் பொருளாதார ஏற்றத்தாழ்வு நீக்கப்படும். இன்று ஏழையாக இருக்கும் சீமான் நாளை அதானி, அம்பானி ஆகிவிடலாம். ஆனால் இன்று பறையராக இருக்கும் சீமான் ஒருநாளும் உயர்ஜாதிக்காரராக மாற முடியாது. உலகத்தில் எவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தாலும் தாழ்த்தப்பட்டவன் தாழ்த்தப்பட்டவன் தான் என்ற நிலை உள்ளது'' என சாடினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications