Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மக்களை தேடி மருத்துவம்.. கிராமங்களில் எப்படி இருக்கிறது? உண்மை நிலை என்ன?

Subscribe to Oneindia Tamil

தேனி: 'மக்களைத் தேடி மருத்துவம்' திட்டம் தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டம் தமிழகத்தில் உள்ள கிராமங்களில் எப்படி செயல்படுத்தப்படுகிறது.. உண்மை நிலை என்ன என்பதை பார்ப்போம்.

தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு தொடங்கப்பட்ட திட்டம் தான், 'மக்களைத் தேடி மருத்துவம்'. இந்த திட்டத்தை 2021 ஆகஸ்ட் 5-ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஊராட்சி ஒன்றியம் சாமனப்பள்ளி என்ற கிராமத்தில் தொடங்கி வைத்தார்.

How is the makkalai thedi maruthuvam scheme in the Tamil Nadu villages What is the reality

தொற்றா நோய்களான சர்க்கரை, உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு சென்று, மாதந்தோறும் மருந்து, மாத்திரைகள் வழங்கப்படுகிறது. இதற்காக பிரத்யேக தன்னார்வலர்களை நியமித்து, அவர்களுக்கு ரூ.4500 ஊதியம் வழங்கி வருகிறது தமிழக அரசு. அவர்களும் தொடர்ந்து கிராமங்களில் களப்பணி ஆற்றி வருகிறார்கள்.

நாள்தோறும் 10 வீடுகளுக்கு சென்று பொதுமக்கள் 20 பேரை சந்தித்து,அவர்களின் நோய் விவரங்கள் தெரிவிக்கப்பட்டு தேவையானமருந்து, மாத்திரைகளை வழங்கி சிகிச்சைஅளிக்கும் பணிகளை ஒருங்கிணைத்து வருகிறார்கள். இந்த பணி தேனி மாவட்டத்தில் தேனி அருகே உள்ள வடபுதுப்பட்டி என்ற கிராமத்தில் எப்படி நடக்கிறது என்பதை பார்த்த போது, ஆச்சர்யமாக இருந்தது.

உண்மையில் அந்த ஊரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ஊரின் மையப்பகுதியில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரத்தில் கரட்டின் உச்சியில் (சிறிய மலை குன்று), இருக்கும். இந்த மருத்துவமனை சுமார் 30 வருடங்களுக்கு முன்பே கட்டப்பட்டது. இங்குள்ள மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்றால், நோயாளிகள் தங்கள் சொந்த வாகனங்களில் மட்டுமே போக முடியும். சொந்த வாகனங்கள் இல்லாதவர்கள் நடந்துதான் உயரமான அந்த பாதையில் செல்ல வேண்டிய நிலை இருக்கிறது.

வயதானவர்கள் மலை குன்றின் உச்சிக்கு பொடி நடையாக நடந்து ஒருவழியாக மேல சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்புவார்கள். மிகவும் முடியாதவர்கள் ஆட்டோவிலோ அல்லது தங்கள் உறவினர்களின் வாகனங்களில் ஏறித்தான் மேல சென்று சிகிச்சை பெறுவார்கள். தேனிக்கு மிக அருகில் உள்ள வடபுதுப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ வசதிகள் மிக சிறப்பாகவே உள்ளது. சுற்றியுள்ள 8 கிராமங்கள், அதாவது வைகை அணைக்கு பின்புறம் உள்ள அத்தனை கிராம மக்களும் சிகிச்சை பெற வடபுதுப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்குத்தான் வர வேண்டும்.

How is the makkalai thedi maruthuvam scheme in the Tamil Nadu villages What is the reality

அந்த கிராமத்தில் வயதானவர்கள் எப்படி மத்திரை வாங்க மருத்துவமனைக்கு அடிக்கடி செல்கிறார்கள் என்ற கேள்வி எழுந்தது. இதுபற்றி கிராம மக்களிடம் விசாரித்த போது, மக்களை தேடி மருத்துவம் திட்டத்தால் மாத்திரைகளை வாங்கி கொள்கிறோம் என்றார்கள்.. கிராமத்தில் உள்ள சில பெண் தன்னார்வலர்கள் வீடு வீடாக வருகிறார்கள்.. மாத்திரை வாங்கவும் பரிசோனைக்கும் அழைக்கிறார். அதனை ஏற்று ஒரு தெருவில் உள்ள மக்கள் ஒன்றாக அங்கு செல்கிறார்கள். அங்கு அவர்களுக்கு சுகர், பிபி பரிசோதிக்கப்படுகிறது. கல்லீரல் பாதித்தவர்கள், டயாலிசிஸ் உள்ளிட்டவற்றை கண்காணிக்கிறார்கள்.

அத்துடன் அவர்களுக்கான மாத்திரைகளை அளிக்கிறார்கள்.. அதேநேரம் சுகர், பிபி பிரச்சனை இருந்தால் மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்துகிறார்கள்.. மாதம் மாதம் இவர்கள் பரிசோனைக்கு வந்து மாத்திரைகளை தங்களுக்கு தருவதாக கூறினார்கள்.. வயதானவர்கள் பலர் இந்த திட்டத்தால் பயன்பெற்றதை பார்க்க முடிந்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+