பிரதமரின் வேலைவாய்ப்பு திட்டத்தில் 75 லட்சம் மானியம்...5 கோடி ரூபாய் பெறுவது எப்படி? சூப்பர் தகவல்
தேனி: பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் (PMEGP) கீழ் சுய தொழில் தொடங்க ஆர்வம் உள்ள இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த திட்டத்தில் ஐந்து கோடி வரை கடன் வழங்குகிறது அரசு.. அதிகபட்சமாக இந்த திட்டத்தின் கீழ் 75 லட்சம் வரை மானியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் சுய தொழில் தொடங்க ஆர்வமுள்ள இளைஞர்களை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கி மத்திய அரசும் மாநில அரசும் கடன்கள் வழங்கி வருகின்றன. அந்த கடன்கள் குறைந்த வட்டியில் வழங்கப்படுவதுடன் மானியமும் அளிக்கப்படுகிறது. இந்த கடன்கள் மூலம் சுயதொழில் தொடங்கி பலருக்கும் அவர்கள் வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு கடன் வழங்கும் திட்டங்களை அரசுகள் செயல்படுத்தி வருகின்றன.

இதற்காக பிரதமரின் ரோஜ்கர் யோஜனா (PMRY) மற்றும் கிராமப்புற வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் ஆகிய இரண்டும் தனித்தனியாக செயல்பட்டு வந்தன. இரண்டு திட்டங்களையும் இணைத்து பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (PMEGP) என்ற புதிய கடன் இணைக்கப்பட்ட மானியத் திட்டம் சில ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டது . கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும், சுயதொழில் செய்வதை ஊக்குவிக்க வேண்டும் என்று இந்த திட்டம் உருவாக்கப்பட்டது.
பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் (PMEGP) கீழ் படித்த இளைஞர்களுக்கு தொழில் முனைவோர் பயிற்சி அளிக்கப்படும். பின்னர் அவர்களின் வணிகத் திட்டங்களைத் தயாரிக்க உதவுவதுடன், புதிய உற்பத்தி மற்றும் சேவை முயற்சிகளை அமைப்பதற்காக நிதி நிறுவனங்களுடன் இணைவதற்கு உதவி செய்யப்படும். இத்திட்டத்தின் பயனாளிகள் முதல் தலைமுறை தொழில்முனைவோராக இருக்க வேண்டியது அவசியம் ஆகும். இந்த திட்டத்தில் 5 கோடி வரை கடன் பெறலாம் என்றும், இந்த புதிய தொழில்முனைவோர் நிலத்தின் விலை, வாடகை/குத்தகை கட்டிடம், தொழில்நுட்ப அறிவு, பூர்வாங்க மற்றும் முன் செலவுகளை ஏற்க வேண்டியது அவசியம் ஆகும்.
இந்த திட்டத்தில் படித்த இளைஞர்கள் தொழில் முனைவோர் ஆக விரும்பினால் அதிகபட்ச முதலீட்டு மானியத் தொகையை ரூ.50 லட்சம் முதல் ரூ.75 லட்சமாக தமிழக அரசு அண்மையில் உயர்த்தியுள்ளது. மேலும் கூடுதளாக வட்டி மானியமும் வழங்கப்படுகிறது. ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளி தொழில் முனைவோரை ஊக்கவிக்க 10 சதவீத கூடுதல் முதலீட்டு மானியம் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் தேனி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'தேனி மாவட்டத்தில், புதிய தொழில் துவங்க மானியத் தொகையாக ரூ.75 லட்சம் வரை கடன் பெறலாம் என தேனி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் சார்பில் 21 முதல் 35 வயது வரையிலான பொதுப்பிரிவினரை சேர்ந்தவர்களும் , 21 முதல் 45 வயது வரையிலான சிறப்பு பிரிவினர், அதாவது எஸ்.சி.எஸ்.டி., பி.சி., எம்.பி.சி., பெண்கள், மூன்றாம் பாலினத்தவர், முன்னாள் ராணுவத்தினர் மாற்றுத்திறனாளிகள் சேவை மற்றும் உற்பத்தி தொழில்கள் துவங்க வங்கி கடனுதவி கோரி விண்ணப்பிக்கலாம்.
இந்தத் திட்டத்தின் மூலம் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் முதல் தலைமுறை தொழில் முனைவோராகவும், பட்டம், பட்டயம், ஐ.டி.ஐ., தொழிற்கல்வி தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும் என்று வரையறை இருந்தது. ஆனால் தற்போது கல்வி தகுதியை அரசு குறைத்துள்ளது. இதன் மூலம் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களும் இதில் பயன் பெறலாம். இதில் சக்கரம் அலைன்மென்ட், கிளினிக்கல் டெஸ்டிங், ஜிம், கோல்டு ஸ்டோரேஜ், கான்கிரீட் கலவை இயந்திரம், அரிசி ஆலை, பருப்பு மில், சமையல் எண்ணெய், ஆயத்த ஆடை தயாரிப்பு போன்ற தொழில்கள் துவங்கலாம்" இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications