இடுக்கியை கலக்கும் தமிழக கலெக்டர் விக்னேஷ்வரி ஐஏஎஸ்.. பேஸ்புக்கில் இன்று மிஸ் பண்ணிடாதீங்க
தேனி: தமிழகத்தின் எல்லை மாவட்டமான இடுக்கி மாவட்டம் கேரளாவின் மிகப்பெரிய மலை மாவட்டம் ஆகும். மிகவும் அழகான இந்த மாவட்டத்தில் ஏராளமான தமிழர்கள் வசிக்கிறார்கள்.. கிட்டத்தட்ட தேனி மாவட்டத்தின் ஒரு பகுதி என்று சொல்லும் அளவிற்கு அங்கு தமிழர்கள் அதிகமாக இருக்கிறார்கள்.. இடுக்கி மாவட்ட கலெக்டர் விக்னேஷ்வரி அங்கு புதிய முயற்சியை எடுத்துள்ளார். இதன்படி பேஸ்புக் வீடியோ அழைப்பு மூலம் புதன்கிழமை அன்று குறைதீர் முகாம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளார்.
இடுக்கி மாவட்ட கலெக்டராக இருக்கும் விக்னேஷ்வரி, மதுரையைச் சேர்ந்தவர் ஆவார். அங்குள்ள தியாகராஜ கல்லூரியில் பட்டப்படிப்பு படித்தார். அதன் பின்னர் ஐஏஎஸ் தேர்வுக்கு முயற்சித்து, 2015 ஆம் ஆண்டு கேரள பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வானார்.

கேரள சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்தின் (கே.டி.டி.சி) நிர்வாக இயக்குநராகவும், கேரள மாநில கல்லூரி கல்வி இயக்குநராகவும், கோட்டயம் மாவட்ட ஆட்சியராகவும் பணியாற்றியிருக்கிறார். தற்போது இடுக்கியின் மாவட்ட ஆட்சியராக உள்ளார்.
இடுக்கி மாவட்டத்தின் இரண்டாவது பெண் கலெக்டர் விக்னேஷ்வரி தான்..எர்ணாகுளம் மாவட்ட கலெக்டர் என்எஸ்கே உமஷை திருமணம் செய்தார். விக்னேஷ்வரி ஐஏஎஸ் இடுக்கி மாவட்ட கலெக்டராக கடந்த ஆண்டு நியமனம் செய்யப்பட்டார். முற்றிலும் மலைப்பகுதி மாவட்டமான இடுக்கியில் பல்வேறு சீர்திருத்தங்களை செய்து வருகிறார். அதேபோல் மக்கள் தன்னை எளிதாக அணுகுவதற்காக ஒவ்வொரு புதன்கிழமை அன்று மாலையில் பேஸ்புக் வீடியோ காலில் குறைகளை கேட்பதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக இடுக்கி மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், "இடுக்கி மாவட்டத்தில் பேஸ்புக் வீடியோ அழைப்பு மூலம் குறைதீர்க்கும் முகாம் வாரந்தோறும் புதன்கிழமை நடத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்து உள்ளது. அதன்படி இந்த முகாம் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. முகநூலில் கலெக்டர் விக்னேஸ்வரி கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்க உள்ளார். அதற்கு உடனடி தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
மேலும் கலெக்டரை சந்திக்க அலுவலகத்திற்கு வருகை தராமல் இருந்த இடத்தில் இருந்து செல்போன் மற்றும் கம்ப்யூட்டரில் முகநூல் மூலம் பேசி பொதுமக்கள் பயன்பெறலாம். இந்த முகாமில் அவசியமற்ற கேள்விகள், கோர்ட்டு வழக்கு தொடர்பான கேள்விகளுக்கு பதில் கூற இயலாது" என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி விக்னேஷ்வரி ஐஏஏஸ் பொதுமக்களுக்கு கூறுகையில், என்னால் சிறிது காலமாக ஃபேஸ்புக்கை தொடர்ந்து அப்டேட் செய்ய முடியவில்லை. முக்கியமான ஒன்றைச் சொல்ல வந்துள்ளேன். ஏப்ரல் 9 முதல் (இன்று), ஒவ்வொரு புதன்கிழமையும் மாலை 6 மணி முதல் 7 மணி வரை, கலெக்டரின் ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்துகளாகப் பெறப்படும் புகார்களுக்கு நேரடியாக பதிலளிக்க முடிவு செய்துள்ளேன். செய்தித்தாள்கள் மூலம் நீங்கள் அதைப் பற்றி அறிந்திருப்பீர்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால் நான் உங்களுக்கு நேரடியாகச் சொல்கிறேன்.
புகார்களைத் தவிர, அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்காத பொதுவான விஷயங்கள் குறித்தும் தகவலை எனக்கு நீங்கள் தர முடியும். அதிகபட்சமான விஷயங்கள் பற்றி நேரடியாக பதிலளிக்க முயற்சிப்பேன். ஆனால் அதேநேரம் கூடுதல் தகவல்கள் தேவைப்பட வேண்டிய விஷயங்களில், சம்பந்தப்பட்ட துறைகளில் விசாரித்த பின்னரே தீர்வு காண முடியும்.
தற்போது பலரால் கலெக்டரை நேரில் அணுகி புகார் அளிக்கவோ அல்லது அவர்களின் கவனத்திற்குக் கொண்டுவரவோ முடியவில்லை. நீங்கள் ஒரு நாள் வேலைக்குச் செல்லவில்லை என்றால், உங்கள் குடும்பத்தின் நாள் தடைபடும். இப்படிப்பட்டவர்கள் பெரும்பாலும் தங்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகளையும் நீதியையும் கேட்கத் தயங்குவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு ஃபேஸ்புக் ஒரு வாய்ப்பை வழங்குகிறது. தேவையற்ற கேள்விகள் மற்றும் நீதிமன்றம் தொடர்பான விஷயங்களைத் தவிர்த்து, சாதாரண மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க நீங்கள் எனக்கு உதவ வேண்டும்" இவ்வாறு விக்னேஷ்வரி ஐஏஎஸ் கூறினார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications