• search
தேனி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

டியூட்டி நேரத்தில் நர்ஸ் போட்ட ஆட்டம்.. அதுவும் ஆபீஸ் ரூமிலேயே.. தேனி ஜிஹெச்சில் ஒரே அக்கப்போர்

Google Oneindia Tamil News

தேனி: தேனி மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், டியூட்டியின்போது நர்ஸ் ஆடிய டான்ஸ் ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது... சினிமா பாட்டுக்கு நர்ஸ்கள் ஒன்றுகூடி டான்ஸ் ஆடி உள்ளார்கள்.. இது பலருக்கும் அதிர்ச்சியை தந்து வருகிறது.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே க.விலக்கு பகுதியில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது..

தேனி மாவட்ட பார்டரில் கேரளா உள்ளதால், தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த ஏராளமானோர் இங்கு வந்து சிகிச்சை பெற்று செல்வது வழக்கம்.. அதனால் தினமும் ஆயிரக்கணக்கான கூட்டம் இங்கு நிரம்பி வழியும்.

 ஓபிஎஸ் போனில் கிடைக்கவில்லை.. நயினார் பேச்சுக்காக எடப்பாடியிடம் வருத்தம் தெரிவித்தேன்: அண்ணாமலை ஓபிஎஸ் போனில் கிடைக்கவில்லை.. நயினார் பேச்சுக்காக எடப்பாடியிடம் வருத்தம் தெரிவித்தேன்: அண்ணாமலை

 மருத்துவமனை

மருத்துவமனை

இப்போதைக்கு இரு மாநிலங்களிலுமே தொற்று பாதிப்பு அதிகம் ஏற்பட்டுள்ளதால், வழக்கத்தைவிட கூடுதலாகவே நோயாளிகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.. அதனால், கொரோனா தொற்று உள்ளவர்களுக்கும், பிற நோயாளிகளுக்கும் சேர்த்தே சிகிச்சை தரப்பட்டு வருகிறது... இவர்களுக்கு 24 மணி நேரமும் டாக்டர்களும், நர்ஸ்களும் தீவிர சிகிச்சை தந்து உடனிருந்து கவனித்து வருகிறார்கள்.

வீடியோ

வீடியோ

இப்படிப்பட்ட சூழலில்தான் ஒரு வீடியோ வெளியாகி உள்ளது.. இந்த மருத்துவமனையின் ஆபீசில் நர்ஸ் ஒருவர் டான்ஸ் ஆடும் வீடியோ அது.. டியூட்டியில் இருக்கும்போதே, சினிமா பாடலுக்கு டான்ஸ் ஆடுகிறார்.. இவருடன் சேர்ந்து மற்ற ஊழியர்களும் நடனமாடுகிறார்கள்.. அதாவது நர்ஸ் கண்காணிப்பாளர், ஆண் நர்ஸ், பெண் நர்ஸ்கள், மருத்துவ பணியாளர் என்று மொத்தம் 5 பேர் ஒன்றாக டான்ஸ் ஆடுகிறார்கள்.

நடனம்

நடனம்

டியூட்டி நேரத்தில் டான்ஸ் ஆடுவது மட்டுமின்றி, இந்த 5 பேருமே சோஷியல் டிஸ்டன்ஸ் இல்லாமல் கைகோர்த்து கொண்டு குரூப்பாக சினிமா பாடலுக்கு நடனம் ஆடியிருக்கிறார்கள்.. இதை பார்த்துதான் பொதுமக்கள் அதிர்ந்து போயுள்ளனர்.. இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது... வீடியோ படுவைரலானதையடுத்து, மருத்துவமனை நிர்வாகத்திடம் இதுகுறித்து கேட்கப்பட்டுள்ளது.

 அதிர்ச்சி

அதிர்ச்சி

அதற்கு, நர்ஸ் கண்காணிப்பாளர் ரூமில் அவ்வப்போது இப்படி நடனம் ஆடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள்.. உடன் பணிபுரிந்த பணியாளர் ஒருவருக்கு பிறந்தநாளை கொண்டாடியதால், இப்படி நடனம் ஆட வேண்டியதாயிற்று என்றும், அலுவலகத்தில் இனிமேல் இதுபோன்ற கொண்டாட்டங்களை தவிர்த்திருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொற்று

தொற்று

இந்த கொரோனா காலகட்டத்தில், காவல்துறை, மருத்துவதுறையில் உள்ளோர் தங்களை முழு நேர அர்ப்பணிப்புடன் ஈடுபடுத்தி கொண்டு வருகின்றனர்.. இதனால், பல்வேறு மன உளைச்சலும், மன அழுத்தத்திற்கும் ஆளாகிவிடுவது இயல்பான விஷயம்.. அந்த வகையில், தங்கள் மன அழுத்தத்தை போக்கி கொள்ள, இப்படி எத்தனையோ மருத்துவ ஊழியர்கள், போலீஸ்காரர்கள் டான்ஸ் ஆடி, டிக்டாக் வீடியோ வெளியிட்ட நிகழ்வுகளும் இதற்கு முன்பு நம் தமிழகத்தில் நடந்துள்ளன..

அறிவுரை

அறிவுரை

இதையெல்லாம் யாருமே அப்போது தவறாக எடுத்து கொள்ளவுமில்லை... மாறாக இத்துறை சம்பந்தப்பட்டவர்களை ஊக்குவிக்கவே செய்தனர்.. ஆனால், டியூட்டி நேரத்தில், அதுவும் அலுவலகத்தில், அதுவும் நோயாளிகளுக்கு அறிவுரை சொல்லும் நர்ஸ்களே சமூக இடைவெளி இல்லாமல் டான்ஸ் ஆடியதுதான் இதில் பிரச்சனையாகிவிட்டது..!

English summary
In Theni District, Theni govt Hospital duty nurses and Medical staffs dance, what happened actually?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X