"யாருடா.. என் பொண்டாட்டிகிட்ட அசிங்கமா பேசினது.. வெட்டாமல் போகமாட்டேன்.. அரிவாளுடன் பாய்ந்த கணவர்!
அரிவாளுடன் புகுந்து பைனான்ஸ் கம்பெனி ஊழியர்களை ஒருவர் மிரட்டி உள்ளார் அரிவாளுடன் புகுந்து பைனான்ஸ் கம்பெனி ஊழியர்களை ஒருவர் மிரட்டி உள்ளார்
Recommended Video
தேனி: "யாருடா.. என் பொண்டாட்டிகிட்ட அசிங்கமா பேசினது.. வெட்டாமல் போ மாட்டேன்.. யார் அவன்" என்று கேட்டு கணவர் அரிவாளுடன் பைனான்ஸ் கம்பெனிக்குள் நுழைந்துவிட்டார்.. அங்கு வேலையில் இருந்த ஊழியர்களை இவர் அரிவாளை காட்டி மிரட்டும் வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
வீட்டுக்கு தேவையான பொருட்களை இந்த பைனான்ஸ் மூலம் வாங்குவார்கள்.. மாசா மாசம் அதற்கு தவணையும் கட்டிவிடுவார்கள்... பணம் செலுத்திவிட பல வழிகளும் உள்ளன.
யாராவது மாத தவணையை கட்டாவிட்டால், பைனான்ஸ் ஊழியர்கள், அவர்களின் வீட்டுக்கு சென்று பணத்தை வசூலிப்பார்கள், அல்லது இஎம்ஐ பணம் கட்ட சொல்லிவிட்டு வருவார்கள். இதுதான் பொதுவான வழக்கம்!

கம்பம்
இப்படித்தான் தேனி மாவட்டம் கம்பம் நகரில் ஒரு தனியார் ஃபைனான்ஸ் கம்பெனி இயங்கி வருகிறது.. இங்கு ஒருத்தர் வீட்டு தேவை பொருட்களுக்கு பணம் வாங்கிவிட்டு, தவணையை கட்டவில்லை போல தெரிகிறது.. அதனால், ஊழியர்கள் பணத்தை தருமாறு சம்பந்தப்பட்டவரின் வீட்டுக்கு போன் செய்து தெரிவித்துள்ளனர். போனில் பேசிய அந்த வீட்டு பெண்ணிடம், சற்று எச்சரிக்கை தொனியிலேயே பேசியிருப்பார் போலும்.

வீடியோ
விஷயத்தை தன் கணவனிடம் சொல்ல... அவர் நேரடியாக பைனான்ஸ் கம்பெனிக்கே கையில் அரிவாளுடன் வந்துவிட்டார்.. அங்கிருந்தவர்களை மிரட்டி வாக்குவாதம் செய்கிறார்.. இதனை ஒருவர் தன்னுடைய செல்போனில் வீடியோவாகவும் எடுத்துவிட்டார்! அதில், அரிவாளுடன் நுழைந்தவரை பார்த்ததும், அங்கிருந்த மற்ற கஸ்டமர்கள் அலறி அடித்து வெளியே ஓடுகிறார்கள்.

அசிங்க பேசினாங்க
பைனாஸ் ஊழியர்களிடம் அரிவாளை நீட்டிய அந்நபர், "இன்ஸ்டால்மென்ட்-ல வீட்டுக்கு டிவியும், ஹோம் தியேட்டரும் வாங்கினேன். மாசம் பொறந்தால் டியூ கட்டிட்டு வர்றேன்... ஆனா இந்த ஆபீஸ்ல இருந்து யாரோ என் வீட்டுக்கு போன் பண்ணியிருக்காங்க. என் பொண்டாட்டிக்கிட்ட அசிங்கமா பேசியிருக்காங்க.. யார் அவன்.. அவனை வெட்டாமல் இங்கிருந்து போ மாட்டேன்.. அவன் யாருனு சொல்லுங்க" என்று கத்தி கூச்சலிடுகிறார்.

சிசிடிவி
இதை பார்த்து நடுங்கி போன ஊழியர்கள், அவரிடம் நெருங்கி சமாதானம் செய்கின்றனர்.. அதன்பின்பு அந்த நபர் அரிவாளுடன் வெளியேறுகிறார். இந்த சிசிடிவி காட்சிதான் வெளியாகி சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.. அந்த நபர் யார், என்ன என்ற விவரத்தை பைனான்ஸ் கம்பெனியில் தர மறுத்துவிட்டார்களாம்.. போலீசில் எந்த புகாரும் பதிவாகவில்லை.. எனினும் இந்த சம்பவம் கம்பம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications