கல்யாணம் ஆகி 5 நாள்தான் ஆச்சு.. தூக்கில் தொங்கிய 18 வயது புதுப்பெண்.. கம்பம் அருகே சோகம்!
Recommended Video
தேனி: கல்யாணம் ஆகி 5 நாள்தான் ஆனது.. அதற்குள் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் 18 வயது புதுமணப்பெண்!
தேனி மாவட்டம் கம்பம் சுவாமி விவேகானந்தர் தெருவை சேர்ந்தவர் சேதுபதி. இவருக்கு 22 வயதாகிறது. ஒரு லாட்ஜ் வைத்து அதனை நிர்வகித்து வருகிறார்.

இவருக்கு அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவரின் மகள் சிவசக்தியை திருமணத்துக்கு பேசி முடித்தனர். இரு வீட்டு சம்மதம்படி, சேதுபதிக்கும், சிவசக்திக்கும் போன 1-ந்தேதி கல்யாணம் ஆனது. சிவசக்திக்கு 18 வயது!
கல்யாணம் ஆகிவிட்டதால், தங்கள் வீட்டின் மாடி போர்ஷனில் புது மனைவியுடன் வாழ்க்கையை ஆரம்பித்தார் சேதுபதி. வீட்டின் கீழ்த்தளத்தில் சேதுபதியின் பெற்றோர் வசிக்கின்றனர்.
இந்நிலையில் நேற்று மாலை வீட்டில் இருந்து சேதுபதி வெளியே சென்றுவிட்டார். அப்போது, மேல் மாடி ரூமில் சிவசக்தி மட்டும் தனியாக இருந்தார், ரொம்ப நேரமாகியும், சிவசக்தி கீழே வராமல் இருந்ததாக தெரிகிறது. சேதுபதியும் வெளியில் போய்விட்ட நிலையில், மாடியில் இவ்வளவு நேரம் தனியாக என்ன செய்கிறார் என்று சந்தேகப்பட்டு, மாடிக்கு சென்று பார்த்தார் மாமியார் புஷ்பவள்ளி.
அப்போது, ஃபேனின் கொக்கியில் சுடிதார் துப்பட்டாவால் சிவசக்தி தூக்கில் தொங்கி கொண்டிருந்ததை கண்டு அலறினார். கதறி அழுததில் அக்கம்பக்கத்தில் ஓடிவந்தனர்.. தொங்கி கொண்டிருந்த சிவசக்தியை மீட்டு கம்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர். ஆனால், சிவசக்தி ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் சொல்லிவிட்டனர்.
இதுகுறித்து கம்பம் வடக்கு போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆனால் எதற்காக தற்கொலை என்பது இன்னும் தெரியவில்லை. கல்யாணம் ஆகி 5 நாட்களே ஆன நிலையில், புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கம்பத்தில் அதிர்ச்சி நிறைந்த பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications