பல மணி நேரத்துக்கு பிறகு.. தேனி தொகுதி பாஜக கூட்டணி வேட்பாளர் டிடிவி தினகரனின் வேட்புமனு ஏற்பு
தேனி: பிரமாண பத்திரம் தாமதமாக பதிவேற்றம் செய்ததை சுட்டி காட்டி அதிமுக, திமுக கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், தேனி தொகுதியில் டிடிவி தினகரனின் வேட்பு மனு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. பல மணி நேர பரிசீலனைக்கு பிறகு டிடிவி தினகரனின் வேட்பு மனு ஏற்கப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தல் தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி நடக்கிறது. வேட்பு மனு கடந்த 20 ஆம் தேதி தொடங்கியது. நேற்றுடன் வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி தேதி ஆகும். இன்று வேட்பு மனு மீதான பரிசீலனை நடந்து வருகிறது.

மொத்தம் 1,403 பேர், 1,749 வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இன்று வேட்பு மனுக்களை பரிசீலனை செய்யும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில், தேனி தொகுதியில் போட்டியிடும் டிடிவி தினகரனின் வேட்பு மனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியனது. தொடர்ந்து பல மணி நேர பரிசீலனைக்கு பிறகு அவரது வேட்பு மனு தேர்தல் அலுவலரால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
தேனி தொகுதியில் பாஜக கூட்டணியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார். இன்று வேட்பு மனு பரிசீலனையின் போது, டிடிவி தினகரனின் பிரமாண பத்திரம் தாமதாக பதிவேற்றம் செய்ததை கட்டி அதிமுக, திமுக கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் டிடிவி தினகரனின் வேட்பு மனு நிறுத்தி வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து டிடிவி தினகரனின் வேட்பு மனு மீதான பரிசீலனை நடந்து வந்தது.
தொடர்ந்து பலமணி நேர பரிசீலனைக்கு பிற்கு டிடிவி தினகரனின் வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதே போல், நீலகிரி தொகுதி திமுக வேட்பாளர் ஆ. ராசாவின் ஜாதி சான்றிதழ் குறித்து சில சந்தேகங்களை எழுப்பி வேட்பு மனு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. பின்னர் வேட்பு மனு ஏற்கப்பட்டது.
கோவையில் போட்டியிடும் அண்ணாமலை, ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம், திருநெல்வேலி தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன், நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளர் எல்.முருகன், மத்திய சென்னை தொகுதி பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வம் உள்ளிட்டோரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. இதேபோல், தூத்துக்குடியில் போட்டியிடும் கனிமொழி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன.
-
ஒதுங்கும் துரைமுருகன்.. திமுகவின் புதிய பொதுச்செயலாளராகிறாரா ஆ.ராசா? உதயநிதி ஸ்டாலினும் ஆதரவாம்! -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம்












Click it and Unblock the Notifications