தீர்ப்பு வந்த சில நிமிடங்களில்.. ஓபிஎஸ்ஸுக்கு போன போன்.. தாயார் உடல்நிலையில் பிரச்சனை.. ஒரே கலக்கம்
வரிசையாக எல்லாம் தனக்கு எதிராகவே நடக்கிறது என்று ஓ பன்னீர்செல்வம் வருத்தத்தில் இருக்கிறாராம்.
தேனி: ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதையடுத்து ஓ பன்னீர்செல்வம் நேற்று தேனி சென்று தாயாரை சந்தித்தார்.
அதிமுக பொதுக்குழு வழக்கில் எடப்பாடி பழனிசாமி வென்றுள்ளார். பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு வெற்றி கிடைத்து இருக்கிறது.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கை விசாரித்து வந்த நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கினர். அதிமுக பொதுக்குழு ஜூலை 11ம் தேதி நடந்தது செல்லும். அதிமுக பொதுக் குழுவை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்கிறோம்.

பொதுக்குழு வழக்கு
அதிமுக பொதுக் குழு வழக்கில் உயர்நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை ஏற்கிறோம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. அதோடு பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது. இந்த தீர்ப்பை தொடர்ந்து ஓ பன்னீர்செல்வம் கிட்டத்தட்ட தனித்துவிடப்பட்டு இருக்கிறார். நேற்று கிரீன்வேஸ் இல்லத்திற்கு யாரும் வராமல் வெறிச்சோடி காணப்பட்டது. காலை முதலே நிர்வாகிகள் அங்கு இல்லை. எடப்பாடி தரப்புதான் கட்அவுட், பாலுடன் தயாராக இருந்தது. அவர் வீட்டில் பெரிய அளவில் நிர்வாகிகள் எதிர்பார்ப்புடன் இருந்தன. இவர்கள் எல்லாம் மிகுந்த உற்சாகத்தோடு இருந்தனர்.

யாருமே இல்லை
அவர்களுக்கு உற்சாகம் கொடுக்கும் விதமாக எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்துள்ளது. ஆனால் பன்னீர்செல்வம் இருக்கும் வீடு களையிழந்து காணப்படுகிறது. அவரை காண நிர்வாகிகள் யாரும் செல்லவில்லை. அவருக்கு நெருக்கமான நிர்வாகிகள் பலர் தொலைக்காட்சி விவாதங்களில் உள்ளனர். இன்னும் சிலர் வேறு வேறு ஊர்களில் உள்ளனர். இதனால் ஓ பன்னீர்செல்வம் வீட்டை நிர்வாகிகள் யாரும் எட்டிப்பார்க்கவில்லை. வெளியே இருந்த 10 தொண்டர்களும் அங்கிருந்து வெளியேறிவிட்டனர். இதனால் ஓ பன்னீர்செல்வமும் வெளியே வரமால் உள்ளேயே முடங்கி இருந்தார்.

முடக்கம்
இந்த நிலையில்தான் நேற்று மாலை சென்னையில் இருந்து திடீரென ஓ பன்னீர்செல்வம் தேனிக்கு புறப்பட்டு சென்றார். ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதையடுத்து ஓ பன்னீர்செல்வம் நேற்று தேனி சென்று தாயாரை சந்தித்தார். நேற்று திடீரென ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் நாச்சியாருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து பெரியகுளத்தில் இருந்து தேனி என்.ஆர்.டி. நகரில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு உள்ளார். நேற்று பிற்பகல் ஓ பன்னீர்செல்வத்திற்கு போன் மூலம் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரின் தாயாருக்கு 97 வயது ஆகிறது. இவரை காண்பதற்காக நேற்று ஓ பன்னீர்செல்வம் அவசரமாக வீட்டிற்கு புறப்பட்டு சென்றார்.

அப்செட்
இந்த அடுத்தடுத்த நிகழ்வுகளால் ஓ பன்னீர்செல்வம் கடுமையான அப்செட்டில் இருப்பதாகவும், கலக்கத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. வரிசையாக நடக்கும் நிகழ்வுகள் எல்லாம் தனக்கு எதிராக இருக்கிறது.. எடப்பாடிக்கு சின்னம் கிடைத்துவிட்டது.. எடப்பாடிக்கு வழக்கில் வெற்றி கிடைத்துவிட்டது.. கட்சி நிர்வாகிகள் வெளியேறிவிட்டனர்.. இப்போது அம்மா உடல்நிலை சரியில்லை.. பாஜக - எடப்பாடி தரப்பும் நெருக்கம் ஆகிவிட்டது.. இப்படி வரிசையாக எல்லாம் தனக்கு எதிராகவே நடக்கிறது என்று ஓ பன்னீர்செல்வம் வருத்தத்தில் இருக்கிறாராம். இதனால் கட்சி நிர்வாகிகளை கூட சந்திக்கும் ஓ பன்னீர்செல்வம் மறுத்து வருகிறாராம்.












Click it and Unblock the Notifications