மறுபடியும் மொதல்ல இருந்தா? நிதிமன்ற படிக்கட்டியேறிய இபிஎஸ்! சரசரவென வந்த கார்கள்! கலகலத்த கைலாசபட்டி
தேனி : தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள பண்ணை வீட்டில் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்ட தனது ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்கில் கடந்த 17ம் தேதி தனி நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பு வழங்கினார்.
அந்த தீர்ப்பில், ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது எனவும், ஜூன் 23 க்கு முந்தைய நிலையே நீடிக்க வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதிமுக பொதுக்குழு
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் பொதுக்குழு, செயற்குழுவை கூட்ட வேண்டும். அத்துடன் பொதுக்குழு கூட்ட ஆணையரை நியமிக்க வேண்டும் என்றும் இதன் மூலம் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்வு செய்த பொதுக்குழு செல்லாது என்றும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். ஓபிஎஸ்-க்கு ஆதரவாக தீர்ப்பு வந்ததால் அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

எடப்பாடி மேல்முறையீடு
இதனால் ஓபிஎஸ் தரப்பு உற்சாகத்தில் இருக்கும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு நிர்வாகிகளை தங்கள் தரப்புக்கு இழுக்க இது ஒரு நல் வாய்ப்பு எனக் கருதி அதற்கான முன்னேற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதே நேரத்தில் நீதிபதி ஜெயச்சந்திரனின் உத்தரவு எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் கடந்த பதினெட்டாம் தேதியே சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணன் நீதிபதிகள் துரைசாமி சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்யப்பட்டது.

திங்கட்கிழமை விசாரணை
இந்த நிலையில் திங்கட்கிழமை வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர். எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில்," பெரும்பான்மை உறுப்பினர்களின் விருப்பத்தை புறக்கணித்து கட்சியின் செயல்பாட்டை தடுக்கும் வகையில் தனி நீதிபதியின் தீர்ப்பு இருப்பதாகவும் எனவே இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
மேலும், ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளரும் இணைந்து செயல்படாத நிலை இருக்கும்போது இணைந்தே பொது குழுவை கூட்ட வேண்டும் என்ற தனி நீதிபதியின் தீர்ப்பு ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல எனவும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் வாதிடப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை நாளை காலை 11 மணியளவில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்படும் என தகவல் வெளியாகி உள்ள நிலையில் இதுகுறித்து தீவிர ஆலோசனையில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

ஓபிஎஸ் ஆலோசனை
அதே நேரத்தில் தங்கள் தரப்பின் அடுத்த நடவடிக்கைகள் மற்றும் அதிமுக பொதுக்குழு குறித்த உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமியின் மேல்முறையீட்டு மனு குறித்து என்ன செய்யலாம் என்பது குறித்து தேனியில் திடீர் ஆலோசனை நடைபெற்றது. இன்று ஓ பன்னீர்செல்வத்தின் மனைவியின் முதலாம் ஆண்டு நினைவு தினம் என்பதால் அவரது ஆதரவாளர்கள் தேனியில் குவிந்துள்ளனர். இந்நிலையில் கைலாச பட்டியில் உள்ள தனது பண்ணை வீட்டில் ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவு முன்னாள் அமைச்சர்களான வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோருடன் தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications