மேகதாது அணை கட்ட எனது மகன் மணல் சப்ளையா? ஈவிகேஎஸ் இளங்கோவன் குற்றச்சாட்டுக்கு ஓபிஎஸ் பதில்
தேனி: மேகதாது அணை கட்டுமானத்திற்கு, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மகன் மணல் சப்ளை செய்வதாக ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறி வரும் குற்றச்சாட்டுக்கு, பன்னீர் செல்வம் இன்று பதில் தெரிவித்தார்.
தேனியில் இன்று மதியம் ஓ.பன்னீர் செல்வம், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தேர்தல் பிரச்சாரத்தில், எதிர்க்கட்சி தலைவர்கள் பொய் குற்றச்சாட்டுகளை சொல்லி வருகிறார்கள். தி வீக் இதழ் செய்தியை சுட்டிக் காட்டி ஸ்டாலின் பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

காவிரி விவகாரத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணி வரலாற்று தவறு செய்தது. காவிரி உரிமையை மீட்டுக் கொடுத்தது ஜெயலலிதா. தனது வாழ்நாளில் மகிழ்ச்சியான தருணம் என்பது, காவிரி மேலாண்மை வாரியம் அமையும் என்று அரசிதழில் வெளியிடப்பட்ட நாள்தான் என்று, ஜெயலலிதா நெகிழ்ச்சியாக தெரிவித்திருந்தார்.
மேகதாது அணை கட்ட எனது மகன் மணல் சப்ளை செய்வதாக ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறுவது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய். அவர் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளோம். அதேபோல, இளங்கோவன் மற்றும் ஸ்டாலின் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications