தேனி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்னாது.. மோடி வென்றால் ரவீந்திரநாத் அமைச்சர் ஆவாரா.. இதுதான் ஓபிஎஸ் விளக்கம்!

Google Oneindia Tamil News

தேனி: தேனியில் அதிமுக சார்பில் போட்டியிடும் ரவீந்திரநாத் வென்றால் மோடி அமைச்சரவையில் அவர் இடம்பெறுவாரா என்ற கேள்விக்கு ஓபிஎஸ் பதில் அளித்துள்ளார்.

தேனியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொண்டார். அவர் கூறுகையில்
கூடா நட்பு கேடில் முடிந்தது என கூறிய கருணாநிதி நாங்கள் காங்கிரசோடு கூட்டணி சேர்ந்து விட்டோம் என்று கூறினார்.

அப்படி பேசிவிட்டு இன்று அவரது மகன் ஸ்டாலின் மீண்டும் காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்ததால் தந்தையினுடைய பேச்சை மீறி விட்டாரே. இதற்கு ஸ்டாலின் என்ன பதில் சொல்லப் போகிறார். தமிழகத்தில் திமுக- காங்கிரஸ் கூட்டணியில்தான் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என மறைந்த முதல்வர் ஜெயலலிதா வள்ளுவர் கோட்டம் முன்பாக உண்ணாவிரதம் இருந்தார்.

"கர்ர்ர்ர்ர்...தூ.. கஸ்தூரி உண்மையில் யாரைக் காரி துப்பியிருக்கிறார்?.. புது டிவீட்டால் பரபரப்பு!

காவிரி மேலாண்மை வாரியம்

காவிரி மேலாண்மை வாரியம்

ஆனால் அப்போது இருந்த மன்மோகன் சிங், திமுக தலைவர் கலைஞர் கூட்டணி அரசு அதற்கு செவி சாய்க்கவில்லை. மறைந்த முதல்வர் ஜெயலலிதா பல்வேறு சட்ட போராட்டங்களுக்கு பின்பாக மறைந்த அவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பின்னர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டது.

பொய் குற்றச்சாட்டு

பொய் குற்றச்சாட்டு

இவ்வாறு பல சட்ட போராட்டங்களை நடத்தி தமிழகத்திற்கு தண்ணீர் பெற்றுத் தந்த ஒரே தலைவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. அப்படிப்பட்ட நாங்கள் கர்நாடகாவில் மேகதாது அணை கட்ட மணல் அனுப்புகிறோம் என்பது பொய்யான குற்றச்சாட்டு ஆகும்.

அரசியலுக்கு

அரசியலுக்கு

இதற்காக ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது இந்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. அவர் மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கும். திறமையும் தகுதியும் இருந்தால் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அது போல எனது மகனும் அரசியலுக்கு வந்துள்ளார்.

அமைச்சர் பதவி

அமைச்சர் பதவி

தேனி மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைக்கு மாறாக அதிமுகவிடமிருந்து பொதுமக்களுக்கு பணப்பட்டுவாடா அதிகமாக செய்யப்படுவதாக தவறாக கூறப்படுகிறது. இதுபோல் நம்பத்தகாத ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு பதில் கூற முடியாது என்றார்.
தேனி நாடாளுமன்ற வேட்பாளராக அதிமுக வேட்பாளர் ஓபிஎஸ் ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றால் மோடி அமைச்சரவையில் அவருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படுமா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

40 தொகுதிகளிலும்

40 தொகுதிகளிலும்

அதற்கு ஓபிஎஸ், உங்களின் ஆசைப்படியே அது நடைபெறும். நான் 40 தொகுதிகளுக்கும் சென்று பிரச்சாரம் செய்து வருகிறேன். அனைத்து மக்களிடமும் அதிமுகவுக்கு அமோக வரவேற்பு உள்ளது என்றார் ஓபிஎஸ்.

English summary
Deputy CM O.Paneerselvam replies that whether his son will be in Modi's cabinet as union minister when he win in Theni?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X