தென்மாவட்ட மக்களின் குலசாமியான பென்னிகுவிக் 180வது பிறந்தநாள்: ஓ.பி.எஸ், விவசாயிகள் மரியாதை
முல்லை பெரியாறு அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக்கின் 180வது பிறந்த தினத்தை முன்னிட்டு லோயர்கேம்பில் உள்ள அவரது நினைவிடத்தில் பென்னிகுவிக் சிலைக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் விவசாயிகள் மரியாதை செலுத்தினர
தேனி: தென் மாவட்ட மக்களின் குலசாமியாக வணங்கப்படும் கர்னல் ஜான் பென்னிகுவிக்கின்180வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது. லோயர் கேம்பில் உள்ள அவரது நினைவிடத்தில் பென்னிகுவிக் சிலைக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார். அதிகாலை முதலே இப்பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் ஏராளமானோர் மணிமண்டபத்திற்கு வருகை தந்து பொங்கல் வைத்து படையலிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
Recommended Video
மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை,விருதுநகர் மற்றும் தேனி உட்பட ஐந்து மாவட்டங்களின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு ஆதாரமாக விளங்கக்கூடிய முல்லைப் பெரியாறு அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக்கை நினைவு கூறும் விதமாக தென் மாவட்டங்களில் உள்ள ஏராளமான கிராமங்களிலும், நகர்ப்புறங்களிலும் ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்த தினமான ஜனவரி மாதம் பதினைந்தாம் தேதி அவரது சிலைக்கு மற்றும் திருவுருவப்படத்திற்கு ஆங்காங்கே மாலை அணிவித்து திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர்.

தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அவரது பிறந்த தினத்தன்று கலை நிகழ்ச்சிகள்,பொங்கல் வைத்து வழிபாடு உள்ளிட்டவை வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. ஒரு அரசாங்கம் செய்ய முடியாததை தனி ஒரு மனிதராக செய்து காட்டினார். அதனால்தான் தமிழக அரசு அவருக்கு மணிமண்டபம் கட்டி தனது நன்றியை திருப்பி செலுத்தியிருக்கிறது.
பென்னிகுவிக்கின் 180வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது. அதிகாலை முதலே இப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் மணிமண்டபத்திற்கு வருகை தந்து பொங்கல் வைத்து அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பென்னிகுவிக் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் ரவீந்திரநாத் எம்.பி, கலெக்டர் பல்லவிபல்தேவ், ஜக்கையன் எம்.எல்.ஏ, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சாய்சரண்தேஜஸ்வி மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

தென் மாவட்டங்களில் பென்னி குவிக் என்பது வெறும் பெயரல்ல, தமிழக மக்களின் வணக்கத்துக்குரிய ஒரு காவல் தெய்வத்தின் பெயர் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இறந்தவர்களை சாமிக்கு சமமாக வைத்துப் போற்றும் மதுரை மண், அந்த மண்ணுக்காக தன் சொத்து சுகம் எல்லாவற்றையும் இழந்து முல்லைப் பெரியாறு அணை கட்டிய ஒரு வெள்ளைக்காரரை குலம் தழைக்க வரம் கொடுத்த சாமியாகவே மதித்து பொங்கல் வைத்து கும்பிடுகின்றனர். இன்றைய தினம் சுருளிபட்டி, பாலார்பட்டி பகுதியில் முல்லைபெரியாறு கரையோரங்களில் வசிக்கும் கிராமமக்கள் பொங்கல் வைத்து பென்னிகுவிக்கிற்கு நன்றியை தெரிவித்தனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications