இறுதி சடங்கு செய்த உறவினர்களுக்கு இன்ப அதிர்ச்சி.. தேனியில் உயிருடன் வந்த ஜேசிபி டிரைவரால் பரபரப்பு
தேனி: தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே உள்ள தங்கம்மாள்புரம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் ஜேசிபி டிரைவர் ஆவார். அவர் வெளியூருக்கு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். இந்நிலையில் மணிகண்டனின் வீட்டில் அழுகிய நிலையில் உடல் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அது மணிகண்டன் என நினைத்து தகனம் செய்துவிட்டனர். இந்நிலையில் இறந்ததாக கருதப்பட்ட ஜேசிபி டிரைவர் உயிருடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே உள்ள தங்கம்மாள்புரம் கிராமத்தை சேர்ந்த 37 வயதாகும் மணிகண்டன் ஜேசிபி ஓட்டும் டிரைவர் ஆவார். அவருடைய மனைவி முருகேஸ்வரி. இந்த தம்பதிக்கு 7 வயது ஆண் குழந்தை இருக்கிறது. மணிகண்டன் சரிவர வேலைக்கு செல்லாமல் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவருக்கும், முருகேஸ்வரிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

ஒரு கட்டத்தில் கணவனின் செயலால் கோபித்துக் கொண்ட முருகேஸ்வரி, தனது குழந்தையுடன் பெற்றோா் வீட்டுக்கு போய்விட்டார். கடந்த ஆண்டு முருகேஸ்வரி தாய் வீட்டிற்கு சென்று விட்ட நிலையில், மணிகண்டன் தங்கம்மாள்புரத்தில் உள்ள அவரது பெற்றோருடன் வசித்து வந்தார்கள்.
மணிகண்டனின் தந்தை தங்கமலை கூலித்தொழிலாளியாவர். தங்கமலை தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்துக்கு வேலைக்கு சென்றுள்ளனர். 2 மாதங்கள் கழித்தே வீட்டுக்கு திரும்பி வருவதாகவும் கூறி விட்டு கடந்த மாதம் சென்றுள்ளார். அவர் சென்ற சில தினங்களில், மணிகண்டனும் வேலைக்கு வெளியூர் சென்று விட்டதாக கூறப்படுகிறது.
கணவர், மகன் வெளியூர் சென்று விட்டதால் தங்கமலையின் மனைவி செல்வம் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். அவரிடம் தனிமையில் இருந்த அவர், வீட்டை பூட்டி விட்டு கடமலைக்குண்டுவில் உள்ள தனது மகள் வீட்டுக்கு சென்று விட்டார். கடந்த மாதம் 13-ந்தேதி தங்கமலை வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியிருக்கிறது. இதுகுறித்து தகவல் அறிந்து தங்கமலையின் மனைவி செல்வம் வீட்டுக்கு வந்தார். பின்னர் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தார். அங்கு கட்டிலுக்கு அடியில், அடையாளம் தெரியாத நிலையில் ஆண் பிணம் அழுகி கிடந்தது. மனைவி பிரிந்து சென்ற சோகத்தில் தனது மகன் மணிகண்டன் இறந்து விட்டதாக கூறி செல்வம் கதறி அழுதிருக்கிறார்.
இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனை முடிக்கப்பட்டு உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து அந்த உடல் தங்கம்மாள்புரம் சுடுகாட்டில் வைத்து உடல் தகனம் செய்யப்பட்டது. இதற்கிடையே முருகேஸ்வரி கொடுத்த புகாரின்பேரில், மணிகண்டன் இறந்து விட்டதாகவும், அவரது சாவுக்கான காரணம் குறித்தும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்கள்.
இந்த நிலையில் இறந்ததாக கருதப்பட்ட மணிகண்டன், நேற்று முன்தினம் காலை தங்கம்மாள்புரம் கிராமத்துக்கு வந்துள்ளார். அவரை கண்ட உறவினர்களும், கிராம மக்களும் திடுக்கிட்டு போனார்கள். மணிகண்டனை தங்கம்மாள்புரம் மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். அவரிடம் நலம் விசாரித்தார்கள். இதனிடையே நடந்த சம்பவம் பற்றி மணிகண்டனிடம் கூறியிருக்கிறார்கள். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த மணிகண்டன் வேலைக்காக தான் வெளியூர் சென்றிருந்ததாகவும், தற்போது தனது தாயை பார்ப்பதற்காக ஊருக்கு வந்ததாகவும் கூறியிருக்கிறார்.
மணிகண்டன் உயிருடன் வந்ததால், வீட்டுக்குள் இறந்து கிடந்தது யார்? என்ற கேள்வி அனைவருக்கும் எழுந்துள்ளது. ஒருவேளை, வீட்டுக்குள் இறந்து கிடந்தது தங்கமலையாக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த போலீசார் தங்கம்மாள்புரத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். அப்போது தங்கமலையிடம் செல்போன் இல்லை என்றும், வேலைக்காக அவர் அடிக்கடி வெளியூர் சென்று வருவதாகவும் அவரது மனைவி செல்வம் தெரிவித்தார். அதேநேரத்தில் தங்கமலையையும் தொடர்பு கொள்ள முடியவில்லை.
இதேபோல் இறந்து கிடந்தது யார்? என்பதை கண்டுபிடிப்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. தங்கமலையை தொடர்பு கொள்ள முடியாத காரணத்தால், இந்த வழக்கில் துப்புதுலக்குவதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டது. இறந்தது தங்கமலையா அல்லது வேறு யாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனிடையே மணிகண்டன் உயிருடன் வந்ததால் அவரது மனைவி முருகேஸ்வரி மகிழ்ச்சி அடைந்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்து ஆண்டிபட்டி டிஎஸ்பி சண்முகநாதன் தலைமையில் போலீசார் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகிறாா்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications