தேனி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இன்கிரிமென்ட்டுக்கு பதிலா டிக்ரிமென்ட் பண்ணா என்ன அர்த்தம்..? குமுறும் கிராமிய அஞ்சல் ஊழியர்கள்

Google Oneindia Tamil News

தேனி: கையடக்க மின்னணு கருவிகளில் உள்ள குளறுபடிகளை சரி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில் ஆர்பாட்டம் நடத்தப்பட்டது.

தேனி அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் ஏராளமான ஊழியர்கள் பங்கேற்று முழக்கமிட்டனர். ஆர்பாட்டத்தில் பங்கேற்ற கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர், இருவர் பார்த்து கொண்டிருந்த வேலையை இன்று ஒருவர் மட்டுமே பார்க்கும் வகைகயில் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டனர்.

Rural Postal Employees Association protestin Tamilnadu to fulfill their requests

அப்படி இருவர் செய்யும் வேலையை ஒருவரே செய்தால், அதற்கென தனி ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வந்ததாகவும், தற்போது அதனை நிறுத்தி விட்டதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

அனைத்து துறைகளிலும் சம்பளத்தை உயர்த்துவது தான் நடைமுறை. ஆனால் தபால் துறையில் மட்டும் சம்பள குறைப்பு நடப்பதாக வேதனை தெரிவித்தனர். பணியிட மாறுதலுக்கு விண்ணப்பித்த ஊழியர்களுக்கு விரைந்து பணியிட மாற்றம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

பிறந்த நாள் கொண்டாட்டம்.. நண்பர்கள் சரமாரி அடி.. பரிதாபமாக உயிரிழந்த மாணவர்.. வைரலாகும் வீடியோபிறந்த நாள் கொண்டாட்டம்.. நண்பர்கள் சரமாரி அடி.. பரிதாபமாக உயிரிழந்த மாணவர்.. வைரலாகும் வீடியோ

மேலும் நெட்வொர்க் மற்றும் சர்வர் கொள்ளளவை அதிகப்படுத்த வேண்டும். சர்வர் பிரச்னைகளை தீர்க்கும் வரை மேனுவலாக பணியாற்ற அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளையும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட கிராமிய அஞ்சல் ஊழியர்கள் வலியுறுத்தினர்.

English summary
Demonstration on behalf of the Rural Mail Postal Union in Tamil Nadu to emphasize 4 point demands
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X