பில்டப் வேண்டாம்.. ரஜினி குறித்த கேள்விக்கு பதில் தர ரூ 5 லட்சம் தாங்க.. நிருபரிடம் கேட்ட சரத்குமார்

Subscribe to Oneindia Tamil

தேனி: நடிகர் ரஜினிகாந்த் குறித்து பேச வேண்டும் என்றால் எனது வங்கிக் கணக்கில் ரூ 5 லட்சம் டெபாசிட் செய்யுங்கள் என செய்தியாளர்களிடம் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்தார்.

Recommended Video

    ரஜினியின் ஒரே பேட்டி... 8 விதமான ஏமாற்றங்கள்

    தேனி மாவட்டம் தேவாரத்தில் தனது கட்சி பிரமுகர் ஒருவரின் திருமண விழாவில் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கலந்து கொண்டார். அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் ரஜினிகாந்த் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது.

    அப்போது சரத்குமார் தேவையில்லாமல் ரஜினி குறித்த கேள்விகளை கேட்டு அவருக்கு பில்டப் கொடுக்கிறீர்கள். உங்கள் டிஆர்பி ரேட்டை அதிகரிப்பதற்காக கேட்கப்படும் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது.

    ரூ. 5 லட்சம் போடுங்கள்

    ரூ. 5 லட்சம் போடுங்கள்

    இனி ரஜினி குறித்த கேள்விகளுக்கு பதில் வேண்டுமானால் எனக்கு ரூ 5 லட்சத்தை எனது வங்கிக் கணக்கில் போட்டுவிட்டு கேளுங்கள் சொல்கிறேன் என கடிந்து கொண்டார் சரத்குமார். அது போல் ரஜினி கமல் இணைப்பு குறித்து கேள்வி கேட்டபோதும் அவர் இன்னமும் கட்சியே ஆரம்பிக்கலைங்க. ஏ முதல் இசட் வரை கூறிய சரத்குமார் இது போல் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கட்டும்.

    குடியுரிமை திருத்த சட்டம்

    குடியுரிமை திருத்த சட்டம்

    அதுகுறித்தெல்லாம் கேட்காதீர்கள். மக்கள் பிரச்சினைகள் எவ்வளவோ இருக்கிறது. அதுகுறித்து கேள்வி கேளுங்கள். நான் பதில் சொல்கிறேன். தேவையற்ற இந்த கேள்விகளை கேட்காதீர்கள் என்றார். பின்னர் குடியுரிமை சட்டம் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சரத்குமார் கூறுகையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தால் யாரும் பாதிக்கப்பட மாட்டார்கள்.

    போராட தயார்

    போராட தயார்

    அதில் உள்ள முக்கிய அம்சங்களை முழுமையாக படித்து பார்க்க வேண்டும். பழைய குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து திருத்த சட்டம் 2019 குறித்தும் நன்கு ஆராய்ந்து பேச வேண்டும். அதில் எந்த முஸ்லீமும் நாடு கடத்தப்படுவார்கள் என்றோ கப்பலில் ஏற்றி வேறெங்காவது அனுப்பிவிடுவார்கள் என்றோ இல்லை. இந்த சட்டத்தால் முஸ்லீம்கள் பாதிக்கப்பட்டால் களத்தில் இறங்கி போராட நான் தயாராக உள்ளேன்.

    மக்கள்தொகை கணக்கெடுப்பு

    மக்கள்தொகை கணக்கெடுப்பு

    தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் 3 அம்சங்களில் திருத்தம் செய்யக் கோரி மத்திய அரசுக்கு முதல்வர் எழுதிய கடிதத்திற்கு உரிய பதில் கிடைக்கவில்லை. இதனால் அப்பணி வரும் ஜூன் 16-க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது இதற்கான அறிவிப்பு மட்டுமே உள்ளது. எதிர்க்கட்சிகள் தவறாக வழி நடத்தக் கூடாது. என்பிஆர் என்பது மக்கள்தொகை கணக்கெடுப்பு போன்றது. என்ன கேள்விகள் கேட்பார்கள் என தெரியவில்லை. அஸ்ஸாமில் கேட்ட கேள்விகளே மற்ற இடங்களிலும் கேட்பார்கள் என கூறுவது தவறு என்றார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+