தாயார் மறைவால் கலங்கி நின்ற ஓபிஎஸ்.. நள்ளிரவில் வீட்டிற்கே சென்று ஆறுதல் தெரிவித்த சீமான்!
தேனி மாவட்டம் பெரியகுளம் சென்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஓ பன்னீர் செல்வத்தை நேரில் சந்தித்து தாயார் மறைவுக்கு ஆறுதல் கூறினார்.
தேனி: ஈரோடு கிழக்கு தொகுதி பிரசாரத்தை முடித்துக் கொண்டு நேரடியாக தேனி மாவட்டம் பெரியகுளம் சென்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஓ பன்னீர் செல்வத்தை நேரில் சந்தித்து தாயார் மறைவுக்கு ஆறுதல் கூறினார்.
முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வத்தின் தாயார் பழனியம்மாள் (வயது 95). வயது மூப்பின் காரணமாக இவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
இதனால் பழனியம்மாளை தேனியில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த நிலையில் தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தது.

பழனியம்மாள் காலமானார்
தேனி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரது உடல்நிலை மிகவும் மோசமானது. இதனையடுத்து தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டுக்கு பழனியம்மாள் நேற்று முன்தினம் கொண்டு செல்லப்பட்டார். வீட்டுக்கு சென்ற சிறிது நேரத்தில் அவர் மரணம் அடைந்தார். தாயார் இறந்த தகவல் அறிந்ததும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் இருந்து பெரியகுளத்துக்கு காரில் புறப்பட்டு வந்தார். நள்ளிரவில் அவர் பெரியகுளத்துக்கு வந்தடைந்தார்.

முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
தனது தாயார் உடலை பார்த்து ஓ பன்னீர் செல்வம் கண்கலங்கினார். தாயாரின் கால்களில் முகம் புதைத்து கண்ணீர் விட்டு அழுதார். இதையடுத்து அவருக்கு அங்கிருந்தவர்களும் தேனி மாவட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்களும் தேற்றி ஆறுதல் கூறினர். ஓபிஎஸ் தாயார் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார். அதேபோல், ஓ.பன்னீர்செல்வத்தை தொலைபேசியில் தொடர்புகொண்டு தனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் முதல்வர் தெரிவித்தார்.

மிகவும் வேதனை அடைகிறேன்
மேலும் முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், 'முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் உடல்நலக்குறைவின் காரணமாக மறைவெய்தினார் என்றறிந்து மிகவும் வேதனை அடைகிறேன். ஆளாக்கிய அன்னையை இழந்து தவிக்கும் பன்னீர்செல்வத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்' என்று கூறியிருந்தார்.

ஓபிஎஸ்க்கு ஆறுதல் கூறிய சீமான்
ஈரோட்டில் தேர்தல் பிரசாரத்தை நிறைவு செய்த அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கும் போது , "தாயாரை இழந்து வாடும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்" என்றார். நேற்று மாலையில் பழனியம்மாளின் இறுதி ஊர்வலம் நடந்தது. மயானத்தில் இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு உடல் தகனம் செய்யப்பட்டது. சிதைக்கு ஓ.பன்னீர்செல்வம் தீ மூட்டினார். இந்த நிலையில், இரவு பெரிய குளத்தில் உள்ள ஓ பன்னீர் செல்வம் வீட்டிற்கு நேரடியாக சென்ற நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ஓபிஎஸ்சை சந்தித்து ஆறுதல் கூறினார்.

கண்ணீர் வணக்கத்தை செலுத்துகிறேன்
பின்னர் அங்கு வைக்கப்பட்டு இருந்த பழனியம்மாள் படத்திற்கும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சீமான், "ஓபிஎஸ்சின் தாயார் மறைவு செய்தி கேட்டு வருத்தம் அடைந்தேன். ஈரோடு கிழக்கு பிரசாரத்தை முடித்து விட்டு இங்கு வருகை தந்தேன். ஓபிஎஸ்சை சந்தித்து ஆறுதலாக இருந்து அவருடைய துயரத்தில் நானும் பங்கு கொண்டேன். மதிப்புமிக்க தாயார் பழனியம்மாள் அவர்களுக்கு கண்ணீர் வணக்கத்தை செலுத்துகிறேன்" என்றார்.
-
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
கோவை ஈஷா யோகா மையத்தில் எஸ்.பி.வேலுமணியுடன் பேசியது என்ன? உடைத்து பேசிய பிரேமலதா












Click it and Unblock the Notifications